பிள்ளைகளோடு தரமான நேரத்தை ...
குழந்தை பருவத்திலேயே பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய நேரம் முழுமையாக கிடைப்பது அவசியம். இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இருக்கும் சவால்கள் அதிகம். இருவரும் தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற நேரம் காலம் பார்க்காமல் ஓடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த தரமான நேரமானது பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நடுவில் பிணைப்பு ஏற்படுத்த தேவைப்படுகிறது. எவ்வளவு தான் பிஸி என்றாலும் பிள்ளைகளோடு செலவழிப்பதற்கான நேரத்தை நாம் தான் கண்டுபிடித்து உருவாக்க வேண்டும். எப்படியெல்லாம் நேரத்தை உருவாக்கலாம் என்பதற்கான டிப்ஸை இப்போது பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களும், பிள்ளைகளும் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. அப்படியே நேரம் கிடைத்தாலும் பிள்ளைகளோ டி.வி, ஸ்மார்ட் போன் என்றும், பெற்றோர்கள் அலுவலக வேலை, சமையல் என்று நேரத்தை கழித்து விடுகிறோம். பிள்ளைகளோடு கிடைக்கும் நேரத்தை இனிமையாக கழிக்க சில வழிகள்.
பிள்ளைகள் எந்தெந்த தருணங்களில் பெற்றோர்களோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
எவ்வளோ நேரங்களை நம்மை அறியாமலேயே நாம் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இன்றைய நாள் விரும்பினாலும் நமக்கு திரும்பக் கிடைக்காது. பெற்றோர்கள் நாம் நினைத்தால் நிச்சயமாக நேரத்தை கண்டுபிடித்து உருவாக்க முடியும். அன்பை வெளிப்படுத்த அவகாசம் மிக முக்கியம். வளர்ந்த பிறகு பிள்ளைகளுக்கு பொறுப்புகள் கூடி விடும், நண்பர்கள் வட்டம் வந்துவிடும். அப்போது பெற்றோர்கள் நினைத்தாலும் பிள்ளைகளோடு செலவு செய்ய நேரம் போதுமான அளவு கிடைக்காது.
இப்போது கிடைக்கும் நம்முடைய குழந்தையின் இந்த பருவத்தில் அவர்களோடு இனிமையாக நேரம் கழிக்க திட்டமிடுவோம். கிடைக்கும் அந்த நேரத்தில் பிள்ளைகளின் உலகத்தில் நாமும் குழந்தையாக மாறி கொட்டம் அடிப்போம் வாங்க.
Be the first to support
Be the first to share
Comment (0)