1. கர்ப்ப கால நோய்கள் மற்றும ...

கர்ப்ப கால நோய்கள் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள்

Pregnancy

Radha Shri

3.0M பார்வை

3 years ago

கர்ப்ப கால நோய்கள் மற்றும் உடல் நலப் பிரச்சினைகள்
நோய் மேலாண்மை மற்றும் சுய பாதுகாப்பு
கருவின் வளர்ச்சி

கர்ப்ப காலம் என்பது  எல்லா பெண்களுக்கும் கணக்கற்ற மகிழ்ச்சியை தரும். கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாக சந்திக்கும் நோய்கள் மற்றும் உடல் நல கோளாறுகள் என்ன? என்பது தொடர்பான தகவல்களை பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்வதனால் தேவையற்ற பயத்தை குறைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

More Similar Blogs

    கர்ப்ப காலத்தில் எல்லா கர்ப்பிணிகளும் சந்திக்கும் பொதுவான பிரச்சினைகள் என்ன? என்பதை பார்க்கலாம்.

    1. முதுகு வலி(Back-pain) - எல்லா கர்ப்பிணிகளும் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். இது குறித்து கர்ப்பிணி பெண்கள் பயம் கொள்ள தேவையில்லை. ஏனெனில் வயிற்றில் உள்ள கருவை முதுகு தான் தாங்கி நிறுத்துகிறது. (முதுகு வலிக்கு தீர்வு: http://www.parentune.com/parent-blog/karppa-kaala-muthugu-valiku-theervu/4787)
    2. மார்பகத்திலிருந்து வெளியேற்றம் பெறுதல் (Discharge from Breast) - கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் சில பெண்களுக்கு மார்பகத்தில் இருந்து நீர்மம் வெளியேறும். இது இயல்பான நிகழ்வே ஆகு‌ம்.
    3. கருப்பை இரத்தப்போக்கு(Uterus Bleeding) - கர்ப்ப காலத்தில் கருப்பை மென்மை ஆவதால், வெள்ளைப்படுதல் இருக்கும். இதனால் பெண்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை.
    4. தசை பிடிப்பு (Muscle Spasms) - கர்ப்பிணி பெண்களுக்கு தசைப் பிடிப்பு இருக்கும். இதை தொடர்ந்து கால்,கைகளில் வீக்கம் இருக்கும்.
    5. தூக்கமின்மை(Insomnia) - ஹார்மோன் பிரச்சனைகளால் சில கர்ப்பிணி பெண்களுக்கு தூக்கமின்மை இருக்கும். நல்ல உணவு மற்றும் போதுமான ஓய்வ எடுத்துக்கொள்வதால் இதை நிவர்த்தி செய்ய முடியும்.
    6. முடி உதிர்தல் மற்றும் தோல் பிரச்சினைகள் (Hairloss & Skin Problems) - முடி உதிர்தல் மற்றும் சரும பிரச்சனைகள் கர்ப்பிணி பெண்களுக்கு இருக்கும். இது மன உளச்சலினால் ஏற்படலாம். இதை கர்ப்பிணிகள் நோயாக நினைத்து வருந்த வேண்டிய அவசியம் இல்லை.
    7. மலச்சிக்கல்(Constipation) - ஹார்மோன் மாற்றத்தினால் கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். நார்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதனாலும், போதுமான அளவு தண்ணீர் பருகுவதாலும் இதை சரி செய்யலாம்.(மலச்சிக்கலுக்கான தீர்வு: http://www.parentune.com/parent-blog/karpa-kaalathil-yerpadum-malasikkal/4708)
    8. headaches(Headache) - கர்ப்பிணி பெண்களுக்கு சில சமயங்களில் தலைவலி ஏற்படும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மன அழுத்தத்தினால் தலைவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, முடிந்தவரை மன அமைதி பெற மெல்லிய இசையை கேட்கலாம் அல்லது சிறிது நேரம் தியானம் செய்ய செலவிடலாம்.
    9. அதிகப்படியான சிறுநீர் கழித்தல்(Excessive Urination) - கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தவாறே இருப்பார்கள். இது பொதுவாக எல்லா கர்ப்பிணி பெண்களும் சந்திக்கும் பிரச்சனை தான். இது நோயோ, உடல் நல கோளாறோ அல்ல. வயிற்றில் உள்ள கரு பெரிதாவதால் சிறுநீர் பையில் அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் காரணமாகவே கொஞ்சம் சிறுநீரும் சிறுநீர் பையில் தேங்காமல் உடனடியாக வெளியேறி விடும்.
    10. குமட்டல் வாந்தி (Nausea & Vomiting) - குமட்டல் மற்றும் வாந்தி, உணவு சுவை விருப்பங்களில் மாற்றம் இவையெல்லாம் எல்லா கர்ப்பிணி பெண்களுக்கும் பொதுவாக இருக்க கூடிய பிரச்சினைகள் ஆகும். (மசக்கையை சமாளிக்கும் வழிகள்: http://www.parentune.com/parent-blog/karpa-kaala-vaanthiyai-thadukka-uthavum-sila-veettu-vaiththiyam/4816)
    11. வயிற்று வலி(Abdominal Pain) - குழந்தை வளர வளர கர்ப்பிணி பெண்களுக்கு அடிவயிற்று வலி ஏற்படும். இது கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் உடல் நிலை மாற்றமாகும்.
    12. சுவாச விகிதம் மாறுபடும்(Respiratory Rate Varries Slightly) - கர்ப்பிணி பெண்களின் சுவாச விகிதம் மாறுபடும். ஏனெனில் குழந்தை வளரும் போது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தாயின் சுவாச விகிதம் மாறுபடும்.
    13. அதிகரித்த இதய துடிப்பு(Increased Heart Rate) - கருவில் இருக்கும் குழந்தை மாதா மாதம் வளர்ச்சி அடைவதால் இதய துடிப்பு அதிகரிக்கும். மேலும் கருவுற்ற காலத்தில் இருந்து இரண்டு முதல் மூன்று மாத காலத்திற்கு தாயின் இரத்த அழுத்தம் குறையும்.
    14. அதிக வளர்சிதை மாற்ற அளவுகள்(High Metabolic Levels) - ஹார்மோன் ஏற்ற தாழ்வுகள் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு மெட்டாபாலிச அளவு அதிகமாக இருக்கும். இதனால் கருவை சுமக்கும் தாய் வழக்கத்தை விட அதிகமாகவே தங்கள் உடலில் வெப்பத்தை உணர்வார்கள்.
    15. முடி மற்றும் நகங்களை வளர்ப்பதை நிறுத்துங்கள் (Stop Growing Hair & Nails) - ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு தலைமுடி மற்றும் நகங்களின் வளர்ச்சி குறையும். நிறைய பெண்களுக்கு தலைமுடி நிறையவே கொட்டும்.
    16. அதிகரித்த புரோஜெஸ்ட்டிரோன் & ஈஸ்ட்ரோஜன்(Increased Level of Progesterone & Estrogen) - புரொஜெஸ்டிரோன்,  ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதனால் கர்ப்பிணி பெண்களுக்கு மார்பகம் மென்மையாகி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக மார்பகத்தின் அளவு பெரிதாகும்.
    17. இரைப்பை, மார்பு எரிச்சல் மற்றும் அஜீரணம் (Gastric, Chest Irritation & Indigestion) - கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பை அளவு பெரிதாவதால் இரைப்பையின் வடிவம் மாறி நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறுகள் ஏற்படும். (அஜீரணக் கோளாறை தீர்க்கும் வழிகள்: http://www.parentune.com/parent-blog/karpa-kalathil-yerpadum-ajeerna-kolarugalai-samalikum-7-vazhigal/5101)

    கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டியவை

    கர்ப்ப காலத்தில் (குறிப்பாக முதல் மூன்று மாதங்களில்) என்ன செய்யக்கூடாது என்பதற்கான சில பரிந்துரைகள் இங்கே. இங்கே படியுங்கள்.

    1. கர்ப்பிணி பெண்கள் சூடான உணவையோ அல்லது மிக குளிர்ச்சியான உணவை உண்ண கூடாது. தெருவோரங்களில் விற்கப்படும் பழச்சாறுகளை அருந்த கூடாது. அது சுத்தம் இல்லாத நீரினால் தயாரிக்கப்பட்டு இருக்கலாம்
    2. கர்ப்பிணி பெண்கள் மள்ளாந்து படுக்க கூடாது. ஒருகளித்தவாறே  ( ஒரு புறம் சாய்ந்தவாறே ) படுக்க வேண்டும். ஏனென்றால், மள்ளாந்து படுப்பதனால் இரத்த குழாய்களில் அழுத்தம் காரணமாக மூச்சு விடுவதில் பிரச்சனைகள் ஏற்படும்.
    3. கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு உடலுறவு வைத்துக் கொள்ள கூடாது. நான்காம் மாதத்தில் தொடங்கி ஒன்பதாம் மாதம் வரை வைத்து கொள்ளலாம். ஆனால் உடலுறவின் போது கர்ப்பிணி பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    இதை எல்லாம் தவிர கர்ப்பிணி பெண்கள் அரைவேக்காட்டு முறையில் வேகவைத்த உணவுகளையும், கெட்டுப் போன காய்கறிகள் மற்றும் பழங்களில் கெட்டுப் போன பகுதியை மட்டும் நீக்கி விட்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இப்படி சாப்பிடுவதால் கிருமிகள் வயிற்றுக்குள் சென்று பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

    எனவே, இப்போது நீங்கள் கர்ப்பிணிப் பெண்கள் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளை அறிந்திருக்கிறார்கள், மேலும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம். கர்ப்பத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்!

     

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)