1. GO Green - பசுமை வாழ்விய ...

GO Green - பசுமை வாழ்வியலை கற்றுக்கொடுக்கும் 9 வழிகள்

3 to 7 years

Radha Shri

2.5M பார்வை

3 years ago

GO Green -  பசுமை வாழ்வியலை கற்றுக்கொடுக்கும் 9 வழிகள்
DIY
பொழுதுபோக்கு வகுப்புகள்
Nurturing Child`s Interests

உங்கள் பிள்ளைகளுக்கு பசுமை வாழ்வியலை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோரா நீங்கள்?  இதோ குழந்தை பருவத்திலிருந்தே கற்றுக்கொடுக்க ஆரம்பிப்பதே சிறந்த வழி. குழந்தைகளை பொறுத்தவரையில் பசுமை வாழ்வியலை பாடப்புத்தகத்திலும், அறிவுரையிலும் கேட்டால் மட்டும் போதாது. அனுபவப்பூர்வமாக உணரும் போது மட்டுமே குழந்தைகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

இதோ பசுமை வழி வாழ்வியலை பிள்ளைகளுக்கு 9 வழிகள் மூலம் கற்றுக் கொடுக்கலாம்.

More Similar Blogs

    செடியுடன் நட்பு

    குழந்தைகள் எப்போதுமே இயற்கை விரும்பிகள். அவர்கள் மண்ணோடும், செடியோடும் தொடர்பில் இருக்கும் போது மகிழ்ச்சியாக உணர்வார்கள்.

    • பெற்றோர்கள் ஆர்வத்துடன் செடி வளர்க்க தொடங்கினாலே இயல்பாக குழந்தைகள் செடி வளர்க்க முன்வருவார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்கு செம்பருத்தி, மல்லி, அரளி போன்ற பூக்களை வளர்க்க உதவி செய்யவும். இதன் மூலம் அவர்கள் தாங்கள் வளர்த்த செடியில் பூக்கள் வருகிறதே என்று எண்ணி மகிழ்ச்சியடைவதோடு அதை தொடர்ந்து செய்யவும் ஆர்வம் காட்டுவார்கள். இதை பால்கனியிலோ, கிட்செனிலோ வைத்து கூட வளர்க்கலாம்.
    • தொடர்ந்து மண்ணோடு குழந்தைகள் தொடர்பில் இருக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அவர்களின் மனநிலையை அமைதிப்படுத்தும். மேலும் செடிகள் வளர்ப்பது மூலம் அவர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு அதிகரிக்கும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே வளரும்.

    செப்பு சாமான்கள்

    • இன்றைய சூழ்நிலையில் ப்ளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை தவிர்ப்பது கடினமாகிவிட்டது. இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளுக்கு ப்ளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் வாங்குவதை குறைத்துக் கொள்ளலாம். அதே போல் பொருட்கள் வாங்கும் போது மூங்கில், மண், மரக்கட்டை, பேப்பர் கிராஃப்ட் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.
    • பொம்மைகளோடும், கேட்ஜெட்ஸோடும் விளையாடுவதை குறைத்துவிட்டு, வெளிபுறச் சூழலில் ஓடியாடி விளையாடுவது, மண்ணோடு விளையாட ஊக்கப்படுத்தலாம்.
    • வீட்டில் சமையல் பொருட்கள் வைத்திருக்கும் ப்ளாஸ்டிக் டப்பாக்களை மாற்றிவிட்டு சில்வர், மரக்கட்டை, கண்ணாடி, ஓலை, மூங்கில்  முதலியவற்றை பயன்படுத்தாலாம்.
    • குழந்தைகளை கடைக்கு அனுப்பும் போது மறக்காமல் துணிப்பை அல்லது சனல் பை கொடுத்து அனுப்புவதற்கு பழக்கவும்.

    தண்ணீரின் கதை

    • அடிக்கடி தண்ணீர் நமக்கு கிடைக்கிறது. இன்றைய காலத்தில் ஒரு குடம் தண்ணீர் கிடைப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதை குழந்தைகளோடு பேசுங்கள். அவர்கள் வாழ்வில் அன்றாட தேவைகளில் தண்ணீர் இல்லையென்றால் என்ன செய்வாய் போன்ற கேள்விகளை கேட்பதன் மூலம் தண்ணீரின் அருமையை புரிய வைக்கலாம்.
    • குழந்தைகள் பல் துலக்கும் போதும், குளிக்கும் போதும் தண்ணீரை வீணாக்காமல் இருப்பதை பற்றிய கதைகளை கூறலாம். உதாரணத்திற்கு பைப்பை திறந்துவிட்டு பல் துலக்கும் போதும் தண்ணீர் வீணாகுவதை சுட்டிக் காட்டலாம். குளிக்கும் போது ஷவரின் பயன்பாட்டை  குறைத்துவிட்டு, வாலி மற்றும் மக்கை பயன்படுத்த பழக்கலாம்.
    • வீட்டில் உள்ள எல்லா பைப்களும் சரியாக மூடியிருக்கிறதா என்று அவ்வப்போது குழந்தைகளை விட்டே சோதிக்க சொல்லுங்கள். இதன் மூலம் அவர்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவத்தை அறிய வைக்கலாம். பைப் லீக்கேஜ் இருந்தால் உடனே சரி செய்துவிடுவது நல்லது.
    • தண்ணீர் குடிக்கும் போது தேவையான அளவு மட்டும் எடுப்பதற்கு குழந்தைகளை பழக்கவும். உதாரணத்திற்கு டம்ளரில் தண்ணீர் எடுக்கும் போதே குறைவாக எடுத்துவிட்டு பிறகு தேவையென்றால் எடுத்து குடிக்க பழக்கவும்.

    மின் சேமிப்பு

    • வீட்டில் உபயோகப்படுத்தும் பல்புககளை பற்றியம், LED பல்புகள், வோல்டேஜ்   பற்றிய தகவள்களையும் குழந்தைகளுக்கு தெரியப்படுத்தலாம்.
    • வீட்டில் தேவையில்லாமல் மற்ற அறைகளில் எரிந்து கொண்டிருக்கும் லைட், ஃபேன், சார்ஜிங் ஸ்விட்ச் போன்ற மின் சாதங்களை அனைத்து வைக்க வேண்டும்.
    • மின் சேமிப்பை ஊக்குவிக்கும் விளையாட்டு பொம்மைகளை அறிமுகப்படுத்தலாம்.  பேட்டரி கார்ஸ், கேட்ஜெட்ஸ் வகைகளை தேர்வு செய்வதை குறைக்கலாம்.

    ட்ரீ வாக்

    • பொதுவாக குழந்தைகளுக்கு நடைபயணம் அதுவும் பசுமை சூழ்ந்த இடங்களில் நடந்து செல்வதை விரும்புவார்கள். அதுமட்டுமில்லாமல் இது  பசுமை வாழ்வியலை பற்றி புரிய வைப்பதற்கான சிறந்த வழி.
    • பூங்கா, வயல்வெளி, பீச், லேக் , பண்ணை போன்ற இடங்களில் குழந்தைகளை விட்டுவிடுங்கள். மரங்களும், பூக்களும் அதன் வாசமும், ஈரப்பதமும் அவர்களுக்கு ஆயிரம் கதைகள் சொல்லும். தினமும் அல்லது அடிக்கடி இந்த மாதிரி நடைபயணம் செல்வதை பழக்கப்படுத்தி கொள்ளலாம்.
    • எப்போதும் வீட்டிற்குள் அடைப்பட்டு இருக்கும் பிள்ளைகளுக்கு இயற்கையோடு நெருக்கமாக வாழ இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். மேலும் கேட்ஜெட்ஸ் ஃப்ரீயாகி பசுமை வாழ்வியலுக்கு மாறத் தொடங்குவார்கள்.
    • பூங்காவில் நடக்கும் போது மரத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், மனிதனுக்கும் மரத்திற்கும் உள்ள தொடர்பை மற்றும் அதன்  பெயர்களை பற்றியும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டே நடக்கலாம்.

    மண்ணோடு பழகலாம்

    • மண்ணையும் குழந்தைகளையும் பிரிக்கவே கூடாது. குழந்தைகளுக்கு நோய் தொற்று வந்துவிடும், ஜலதோஷம் பிடித்து விடும் போன்ற அர்ப்ப காரணங்களுக்காக இயற்கையோடு இணை வைக்காமல் விட்டுவிடாதீர்கள்.
    • மண்ணோடும், மழையோடும் குழந்தைகளுக்கு தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, அறிவு வளர்ச்சியும் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அறிவியல் விஞ்னானிகள்.
    • மழைநீரில் குளிப்பது, குடிப்பதன் மூலமாக நமது உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்த முடியும். மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது ? உடலில் பல நாட்களாக, பல வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. குளிர் காலத்தில் நனைவதை தவிர்க்கலாம்.

    கிரீன் ஹாபீஸ்

    • செடி வளர்ப்பது, மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது போன்று தோட்டத்தை பராமரிப்பதை பற்றி கற்றுக் கொடுக்கலாம்.
    • வித்தியாசமான வடிவத்தில், வண்ணத்தில் இருக்கும் இலைகள், பூக்கள் ஆகியவை சேகரித்து ஆல்பம் தயாரிக்க ஊக்கப்படுத்தலாம்.
    • மண்பானை செய்யும் இடங்களுக்கு அழைத்து சென்று, குழந்தைகளை மண் பானை தயாரிப்பதில் ஈடுபட செய்யலாம். மற்றும் அவர்களுக்கு பிடித்த வடிவத்தில் மண் பொம்மைகள் செய்ய ஊக்கப்படுத்தலாம்.
    • மூங்கில், ஓலை, மரக்கட்டை கொண்டு சின்ன சின்ன கிராஃப்ட்ஸ் தயாரிக்க ஊக்கப்படுத்தலாம்.
    • பல வடிவங்களில் இருக்கும் கற்களை கேகரித்து பூந்தொட்டி ஜார்களை உருவாக்கலாம்.

    எல்லா பொருட்களும் குப்பைக்கு மட்டுமில்லை

    • உபயோகப்படுத்திய எல்லா பொருட்களும் குப்பைக்கு மட்டுமே செல்வதில்லை, அதை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் என்ற உண்மையை குழந்தைகள் அறிந்து கொள்வதற்கான சூழலை வீட்டில் உருவாக்கலாம் .
    • வீட்டில் கழிக்கப்படும் நாளிதழ்கள், பேக்ஸ், பாட்டில்கள், டப்பாக்கள் மரக்கட்டை  இவைகளை கலைநயமிக்க பொருளாகவும் மாற்ற முடியும் என்ற சிந்தனையை குழந்தைகளுக்குள் உருவாக்கலாம்.
    • பேனா ஸ்டாண்டு, கீ செயின் ஹேங்கர், புத்தக ஹோல்டர், பூந்தொட்டிகள், பேப்பர் பேக்ஸ், ஜூவல்லரி, தலையணை உறை, ஸ்ரின் என எவ்வளவோ பொருட்களை மறுசுழற்சி செய்து நம் அன்றாட வாழ்வில் மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதை செயல்வழி மூலம் புரிய வைக்கலாம்.
    • வீட்டில் குப்பைகளை  மக்கும் குப்பை, மக்காத குப்பையாக தரம் பிரித்து வைப்பதன் மூலம் மறுசுழற்சி தொடர்பான விஷயங்களை குழந்தைகளுக்கு தெளிவாக புரிய வைக்க முடியும்.

    பகிர்தலை கற்றுக் கொடுக்கும் பசுமை

    • இயற்கை தனக்கென்று எதையுமே சேமித்து வைத்துக் கொள்வதில்லை. இந்த பூமிக்காகவும், இந்த பூமியில் வாழும் மனிதர்களுக்காகவும் தன்னிடம் உருவாகும் எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
    • தங்கள் வீட்டில் விளையும் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை இயற்கை போலவே மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற பண்பை இதன் மூலம் வளர்க்கலாம்.
    • வீட்டில் உடன் பிறந்தவர்களோடு பகிர்ந்து கொள்ள ஊக்கப்படுத்தலாம். கொடுப்பதிலும், பகிர்தலிலும் கிடைக்கும் உணர்வை சிறு வயதிலேயே அவர்களுக்குள் ஏற்படுவதற்கான வாய்ப்பை பெற்றோர்கள் நாமே உருவாக்கி கொடுக்க முடியும்.

    இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக இயற்கையோடு இருக்கும் நெருக்கத்தை குறைத்துக் கொண்டே வருகிறோம். நம்முடைய பிள்ளைகளுக்கு பசுமை வழி வாழ்வுமுறையை பழக்குவதன் மூலம் இயற்கையோடு நமக்கிருந்த பல நூற்றாண்டுகால பிணைப்பை மேம்படுத்துவோம்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs