3-7 வயது குழந்தைகளுக்கான ...
போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொருவரும் தன் பிள்ளைகள் விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். இது கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும், ஆனால் ஒரு எளிதான உறவை பராமரிக்க உதவுகிறது.
மன அழுத்தமின்றி விளையாட்டுகளுக்கு குழந்தையை ஊக்குவிக்க 13 வழிகள் இங்கே. இங்கே படியுங்கள்
ஓடி பிடித்து விளையாடுதல், ஒளிந்து பிடித்தல், பொருட்களை உயரமாக கட்டுமானம் செய்து விளையாடுதல், மறைத்து வைத்த பொருட்களை கண்டறிதல், வரைய கற்றுக்கொடுத்தல், பிற குழந்தைகளுடன் வெளியுலகில் விளையாடுதல், மண் சிற்பங்கள் செய்தல், கோர்வையாக வார்த்தைகள் கூறி விளையாடுதல், பரமபதம் மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை கற்றுக்கொடுத்தல்.
மனநல மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்
பொதுவாக நிறைய குழந்தைகள் விளையாடுகையில் தவறு ஏற்பட்டால் விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை வளர்த்தல், தெரிந்தே செய்தால் அறிவுரை கூறுதல் போன்ற அறிவுரைகளை பெற்றோர்கள் வழங்குவர். விளையாடும்போது போட்டி மட்டுமே இருக்கவேண்டுமேயொழிய முடிந்து செல்லும்போது பொறாமை என்பது இல்லாத அளவில் விடை பெறுதல் வேண்டும் என்று கற்றுக்கொடுப்பர்.
இன்றைய சூழலில் விளையாட்டு என்பதில் சன்மானம் வழங்குதல், வெற்றியை மட்டுமே ஊக்குவித்தல் என்பது வந்து விட்ட பிறகு பொறாமை குணம், தன்னம்பிக்கை இழத்தல், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் போதல் போன்றவையே பெரும்பாலும் உருவாகின்றன. இதில் முதல் தவறு பெற்றோர்களிடம்தான் இருக்கிறது. அதை நாமும் உணர வேண்டும். குழந்தைகளை நல்ல முறையில் விளையாட பயிற்சிக்கவேண்டும். பிறகு வெற்றியோ தோல்வியோ தானாகவே வந்தடையும்.
கல்வியும் விஷய ஞானம் பெறுவதற்கேயன்றி வெற்றி பெறுவவதற்காக அல்ல என்பதை சொல்லிக்கொடுங்கள். தயவுசெய்து பிள்ளைகளிடம் விளையாட்டிலும் சரி கல்வியிலும் சரி வெற்றி என்ற இலக்கைத் தினிக்காதீர்கள். மாறாக நோக்கத்தை மட்டுமே எடுத்துச் சொல்லுங்கள். தோல்வியை காணாமல் வெற்றியை மட்டும் பார்ப்பவர்கள் வாழ்வில் முன்னேற்றம் என்பது இருக்காது என்பதை சொல்லிக்கொடுங்கள்.
பெற்றோர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று குழந்தைகளை தங்களுடனேயே வைத்திருக்காமல் பிறருடன் பழகவும் விளையாடவும் கற்றுக்கொடுக்கப்பது. அவர்கள் விளையாடாமல் மந்தமாக இருந்தால், அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்பட வேண்டும். அதை விட அவசியமானது, குழந்தைகளை தனிமையில் விளையாட விடாமல், அவர்கள் அருகில் இருந்து அவர்களுடன் விளையாடுங்கள்; அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
“குழந்தைகளை கண்காணிப்புடன் நன்கு விளையாட பழக்குவது, பிற்காலத்தில் அவர்கள் சிறந்த சாதனையாளராக மாற உதவும்”
Be the first to support
Be the first to share
Comment (0)