1. தைராய்டு உள்ளவர்கள் கர்ப் ...

தைராய்டு உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது தேவைப்படும் சிகிச்சைகள்

Pregnancy

Parentune Support

3.2M பார்வை

4 years ago

தைராய்டு உள்ளவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது தேவைப்படும் சிகிச்சைகள்
அதிக ஆபத்துள்ள கர்ப்பம்
வாரா வாரம் கர்ப்பத்தின் நிலை

தைராய்டு சுரப்பி என்பது கழுத்தின் கீழ் முன் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ உறுப்பு ஆகும். இது என்டோகிரீன் அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். தைராய்டு சுரப்பியின் முறையற்ற செயல்பாடு ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனை பாதிக்கலாம். எந்தவொரு பெண்ணும் குழந்தை பெற திட்டமிடுவதற்கு முன்பும், மருத்துவர் கண்டிப்பாக தைராய்டு அளவு சரியாக இருப்பதை உறுதி செய்வார். கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்களில் சுமார் ஐந்து முதல் பத்து சதவீதம் பேரின் தைராய்டு அளவு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தைராய்டு சுரப்பி எப்படி செயல்படுகிறது?

More Similar Blogs

    ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஒரு பெண்ணின் உடல், தைராய்டு ஹார்மோன்களை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உற்பத்தி செய்யும் நிலைமைகளை குறிக்கிறது. இந்த நிலைமைகள் ஒரு பெண்ணின் சாதாரண மாதவிடாய் சுழற்சியை பாதிக்கின்றன. அதனால் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைகிறது. சிகிச்சையும் மருந்துகளும் கருவுறுதலை மீண்டும் பெற உதவும். பலவீனமான தைராய்டு செயல்பாட்டின் சில விளைவுகளை பற்றி கீழே தொடர்ந்து படியுங்கள்.

    1. ஒழுங்கற்ற மாதவிடாய்: கருமுட்டை  முறையற்றதாக செயல்படும் நிலை, அதனால் கர்ப்பத்தை சாத்தியமற்றதாக ஆக்கக் கூடும்
    2. மாதவிடாய் சுழற்சியின் இரண்டாம் பாதி: தொடங்கும் சமயத்தில் கருவுற்ற முட்டை தன்னை பொருத்திக் கொள்ள தவறும் போது கருச்சிதைவு ரத்தப்போக்குடன் ஏற்படும், வழக்கமான மாதவிடாய் ஆகும் அதே நேரத்தில் நடக்கலாம்.
    3. பாதிக்கப்பட்ட புரோலேக்ட்டின் அளவுகள்:குறைந்த அளவிலான தைராய்சினின், உயர் தைராய்டு வெளியிடும் ஹார்மோன்களுடன் இணைந்து கருத்தரிக்க விடாமல் செய்யலாம்.
    4. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு: (SHBG) இன் குறைக்கப்பட்ட அளவுகள், ஈஸ்ட்ரோஜன் அளவுகளின் ஆதிக்கம் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனின் குறைபாடு ஆகியவை இனப்பெருக்க அமைப்பை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் மற்றும் கருவுறுதலில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

    ஹைப்பர் தைராய்டிசம் 

    தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதை ஹைப்பர் தைராய்டிசம் என்போம். குழந்தையை சுமக்கும் ஆண்டுகளில் இந்த நிலை பெண்களுக்கு மிகவும் பொதுவானது. இந்த கோளாறு பெண்ணுக்கு குறுகிய காலத்திற்குள் அல்லது நீண்ட காலத்திற்கு பிறகு உருவாகக்கூடும். அதிகப்படியாக செயலில் உள்ள தைராய்டுக்கு கிரேவ்ஸ் நோய் மிக முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. தைராய்டு செயல்பாடு ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது, எனவே இது பெண்ணின் உடலில் பல்வேறு செயல்பாடுகளை பாதிக்கலாம். இது பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது, அதாவது அவர்கள் ஒழுங்கற்ற சுழற்சிகளைக் கொண்டிருக்கலாம் அல்லது அவர்களுடைய மாதாந்திர சுழற்சிகளை முழுவதுமாக இழக்கக்கூடும்.

    ஹைப்பர் தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் போதுமான மருந்துகள் இல்லாமல் கர்ப்பம் தரிக்க இயலாது. முறையற்ற தைராய்டு அளவை கொண்டு கருத்தரிக்க அவர்கள் நிர்வகித்தாலும், கர்ப்பத்தின் பிற்பட்ட காலக்கட்டத்தில் கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம் அல்லது பிரீக்ளாம்ப்சியா போன்ற கடுமையான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.
    ஒரு பெண் கர்ப்பமாக இருக்க முயற்சிக்கும்போது டி.எஸ்.எச் செறிவு குறிப்பு வரம்பிற்கு கீழ் பாதியில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்த துறையில் உள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது கருத்தரிப்பதில் உள்ள முரண்பாடுகளை மேம்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் கருத்தரிப்பிற்கு பின்னர் கருச்சிதைவை தடுக்கவும் உதவும்.

    ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism)

    இது ஹைப்பர் தைராய்டிசத்தின் தலைகீழ் மற்றும் தைராய்டு சுரப்பி போதுமான டி 3 மற்றும் டி 4 ஹார்மோன்களை உற்பத்தி செய்யாத நிலையில் உள்ளது. இந்த நிலையில், மாதவிடாய் சுழற்சி வழக்கமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். ஹைப்போ தைராய்டிசம் “மைக்ஸெடிமா கோமா” என்று குறிப்பிடப்படும் ஒரு அரிய ஆனால் கடுமையான நிலைக்கு வழிவகுக்கும். தைராய்டு ஹார்மோன் அளவு கணிசமாக குறையும் போது இந்த நிலை எழுகிறது, இது பெண்ணின் உடல் வெப்பநிலை, இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிப்புக்கு  வழிவகுக்கிறது மற்றும் சரியாக சுவாசிக்கும் திறனையும் பாதிக்கலாம். இந்த நிலை கருவுற இயலாத நிலைமைகளுக்கு வழிவகுக்கும், மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படலாம்.

    கர்ப்பம் தரிப்பதற்கு முன் தைராய்டு சிகிச்சை
    ஒரு நோயாளி கருத்தரிக்க முடியவில்லை என்ற புகாருடன் ஒரு மருத்துவரை அணுகும்போது, ​​மருத்துவர் நிச்சயமாக அவர்களுடைய தைராய்டு அளவை பரிசோதிப்பார். நிலைகள் சாதாரண வரம்பிற்கு வெளியே இருப்பது கண்டறியப்பட்டால், பெண்ணின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. தைராய்டு அளவை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான சரியான டோஸ் முக்கியம், சரியான அளவை அடைந்த பின்பே மருத்துவர் அவர்கள் கருத்தரிக்க தயாராக உள்ளதை உறுதி செய்வார்.

    கர்ப்ப காலத்தில் மனதில் வைக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் யாவை?

    • கர்ப்பமாகிவிட்ட பிறகு, தைராய்டின் சரியான அளவை பராமரிப்பது முற்றிலும் அவசியம்.
    • சாதாரண வரம்பிற்குள் இருக்கும் நிலைகள் கருச்சிதைவை தடுப்பதோடு, கர்ப்பத்தை தொடரவும், மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுவதில் மிக முக்கியமானதாக இருக்கும்.
    • தைராய்டு அளவை கட்டுக்குள் வைத்திருக்க தைராக்ஸின் அளவை மருத்துவர் பரிந்துரைப்பார். மாறிவரும் அளவுகளை கண்காணிக்க வழக்கமான இரத்த பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.
    • கருத்தரித்த பிறகு  தைராய்டு அளவு மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்படுகிறது, எனவே இரத்த பரிசோதனை ஒவ்வொரு நான்கு வாரங்களுக்கும் குறிப்பாக கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
    • தைராய்டு பரிசோதனை செய்து தைராக்ஸின் சுரப்பு குறைவாக இருந்தால் முறையான சிகிச்சையின் மூலம் நீங்கள் தைராய்டு சுரப்பை சீராக்கலாம். மருத்துவரின் ஆலோசனையோடு பாதுகாப்பாக குழந்தையையும் பெற்றெடுக்கலாம்.

    தைராய்டு அளவை முன்கூட்டியே  பரிசோதித்து சிகிச்சை எடுக்கும் போது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பான ஆரோக்கியமான பிரசவ காலம் அமையும்

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)