இரண்டாவது குழந்தை பிறக்கு ...
இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் அம்மாக்கள் இந்த குழந்தையையும் நல்ல முறையில் பெற்றுக் கொள்ள வேண்டுமே, என்ற கவலையில் முதல் குழந்தையை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இது அம்மக்களின் தவறு அல்ல. ஒரு பெண் கர்ப்ப காலத்தில் தன் வயிற்றில் இருக்கும் சிசு மீதே முழு கவனத்தையும் செலுத்துவாள். இது இயல்பான ஒன்று என்றாலும் முதல் குழந்தையும் முக்கியம் அல்லவா. முதல் குழந்தைடின் தேவைகள் பூர்த்தி ஆகிவிடும், ஆனால் இதற்ல்கு முன் அம்மா தன்னோட அதிக நேரம் செலவு செய்வது இல்லையே என்பதை சரியாக புரிந்து கொள்ள முடியாத வயசு. முதல் குழந்தையின் ஏக்கமும், உணர்ச்சிகளும் சில நேரங்களில் அடம், கோபமாக வெளிப்படும், சில நேரங்களில் குழந்தைகள் தனக்குள்ளே மறைத்து அமைதி ஆகிவிடுவார்கள்.
முதல் குழந்தை இந்த மாற்றங்களை புரிந்து கொள்ளும் பக்குவத்தில் இருந்தால் பிரச்சினை இல்லை. முதல் குழந்தையையும் சமாளித்து அதே நேரத்தில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வது சற்று சிக்கலான சவால் தான். இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது வீட்டில் யாருக்கு பயம் அதிகரிக்கிறதோ இல்லையோ முதல் குழந்தை தான் பயத்தின் உச்சியில் இருக்கும்.ஏதோ தன்னை சுற்றி வித்தியாசமாக நடப்பதாக குழந்தைகள் மனதில் விவரிக்க முடியாத உணர்வுகள் தோன்றும்.
இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது எந்த மாதிரியான சூழ்நிலைகளை கர்ப்பிணிகள் சந்திப்பார்கள் என்பதை அவர்கள் முன்னரே தெரிந்து அதற்கு ஏற்றார் போல முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் அவர்கள் சந்திக்கும் சவால்களை சரியாக கையாளலாம். இரண்டாவது பிள்ளை பிறக்கும் போது கர்ப்பிணிகள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனைகளாக மாற்றலாம் என்பதற்கான சில வழிகளை பார்போம்.
இது தவிர கர்ப்பிணிப் பெண்கள் தங்களது முதல் குழந்தைக்கு இராமாயணம், மகாபாரதம் போன்ற நீதி கதைகளை சொல்லி அதில் இரத்த சொந்தங்களின் உறவு எத்தனை முக்கியமாக பார்க்கப்பட்டு உள்ளது என்பதை குழந்தைகளுக்கு புரியும் வகையில் கதைகளாக விளக்கி சொல்ல வேண்டும்.நாம் இதுவரை பார்த்த கர்ப்பிணி பெண்களுக்கான ஆலோசனைகள் யாவும் முத்தாய்ப்பாக பெற்ற முதல் குழந்தைக்கு இரண்டாவது குட்டி செல்ல குழந்தையின் வருகை இரட்டிப்பு மகிழ்ச்சியை பரிசாய் வழங்கும்.
Be the first to support
Be the first to share
Comment (0)