கொரோனவால் மீண்டும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஒத்திவைப்பு – மாணவர்களுக்கான ஆலோசனைகள்

11 to 16 years

Radha Shri

4.1M பார்வை

4 years ago

கொரோனவால் மீண்டும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு  ஒத்திவைப்பு – மாணவர்களுக்கான ஆலோசனைகள்

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கரக்பூர் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு 2021 ஐ மீண்டும் ஒத்திவைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் ஜூலை 3, 2021 க்கு திட்டமிடப்பட்ட தேர்வு இப்போது தேதி அறிவிக்கப்படும் வரை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement - Continue Reading Below

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படும் என்றும், தமிழ் உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் இத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் ஜேஇஇ முதல் நிலை தேர்வு நடந்து முடிந்தது.

ஏற்கனவே ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருந்த தேதியும் ஒத்திபோனது. இந்த நிலையில் ஜூலை 3, 2021 க்கு திட்டமிடப்பட்ட தேர்வும் இப்போது தள்ளிப்போனது. நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக  மாணவர்களின் உடல்நலன், தேர்வு நடத்தும் பணியாளர்கள் ஆகியோரின் உடல்நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்  கூறுகிறார்.

இதனால் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சோர்வடையாமல் தொடர்ந்து தேர்வுக்கு தயார்ப்படுத்த வேண்டும். தேர்வின் தேதிகள் தொடர்ந்து தள்ளிப்போவதால் மாணவர்கள் ஊக்கத்துடன் எப்படி தொடர்ந்து முறசி செய்ய வேண்டும் என உளவியல் ஆலோசகர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 2.5 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு விண்ணப்பத்திற்கு தகுதியானவர்கள்.

23 ஐ.ஐ.டி.களில் இளங்கலை, இரட்டை பட்டம் மற்றும் ஒருங்கிணைந்த முதுகலை படிப்புகளுக்கு ஜே.இ.இ அட்வான்ஸ்டு அவசியம். ஒவ்வொரு ஆண்டும் ஏழு மண்டலங்களில் ஐ.ஐ.டி. ஐ.ஐ.டி கரக்பூர், ஐ.ஐ.டி மெட்ராஸ், ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.டி டெல்லி, ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி குவஹாத்தி மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கி ஆகிய இடங்களில் JEE அட்வான்ஸ்டு தேர்வு ஒருங்கிணைக்கப்படுகிறது.

Advertisement - Continue Reading Below

மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளுங்கள்

ஏற்கனவே கொரோனாவால் மாணவர்களின் எதிர்கால திட்டங்களை சரியாக திட்டமிட முடியாமல் தவிக்கின்றனர். கூடவே, கொரோனாவால் ஏற்படும் தனிமை, மன அழுத்தம் என பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

தேர்வுகளை ஒத்திவைப்பது மாணவர்களிடமும் பெற்றோரிடமும் பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகிறது. நிச்சயமற்ற தன்மையைக் கையாள்வது கடினம். தங்கள் பிள்ளை அதைப் பற்றி எப்படி உணருகிறார் என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் பெற்றோர்கள் உதவலாம். இதன் காரணமாக குழந்தை எதிர்கொள்ளும் வித்தியாசமான உணர்வுகள் என்ன. உதாரணமாக, மீண்டும் மீண்டும் தேர்வு ஒத்திப்போவதால் ஏற்படும் கோபம் அல்லது சலிப்புத்தன்மையை எவ்வாறு கையாளலாம்.

பெற்றோர்கள் எவ்வாறு உதவலாம்?

இந்த நேரத்தில் பிள்ளைகள் வித்தியாசமான உணர்ச்சிகளை கொண்டிருப்பார்கள்.  “ஒரு பிள்ளை தேர்வுகள் இல்லாமல் இருக்கையில்,  மற்ற ஆர்வத்தை முழுதாகவும் செய்ய முடியாமல், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாமல் சிக்கித் தவிக்கிறது, இது கோபத்திற்கு வழிவகுக்கும். படிப்பதை தவிர வேறு செயல்களை செய்வதில் நேரத்தை செலவிடுவதில் குற்ற உணர்வு இருக்கலாம். ”

பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், பிள்ளைகள் இந்த தங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சூழல் அவசியம். பிள்ளைகள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது அதை விமர்சிக்கவோ, தவறாக எடுப்பதோ அல்லது அனுமானித்துக் கொள்ளாமல் அந்த உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அதிலிருந்து அவர்கள் வெளிவர உதவ வேண்டும். பிள்ளைகளும் பெற்றோரிடம் இந்த அணுகுமுறையே எதிர்பார்க்கிறார்கள்.

மனநல ஆலோசகர்  மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவக்கூடிய சில நடைமுறை உதவிக்குறிப்புகளை கூறுகிறார்.  சுற்றுச்சூழலை நேர்மறையாகவும் மன அழுத்தமில்லாமலும் வைத்திருக்க இது உதவும்.

  • பிள்ளைகளுக்கு படிப்பிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்க ஊக்குவிக்கலாம். ஒரு நாள் அல்லது சில மணிநேர இடைவேளை எடுக்க ஊக்குவிக்க வேண்டும் மற்றும் பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்த உதவ வேண்டும்.
  • உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி ஆகியவை குழந்தையை நன்றாக உணரவும், மன அழுத்தத்திலிருந்து வெளிவரவும் உதவும்.
  • ஆரோக்கியமாக சாப்பிடுவது, , நல்ல தூக்கம் பெறுவது மிகவும் முக்கியம்.
  • உங்கள் பிள்ளையை நண்பர்களுடன் தொடர்பு கொள்ள ஊக்குவிக்கவும்.
  • தினசரி நாளை திட்டமிடுவதன் மூலம் பிள்ளைகள் தங்கள் நோக்கத்திலிருந்து விலகாமல் இருக்க முடியும். ஒரு நாளில் படிப்புக்கும், மற்ற செயல்பாடுகளுக்கும் சமமாக முக்கியத்தும் கொடுக்கும் வகையில் திட்டமிட பிள்ளைகளுக்கு உதவுவதன் மூலம் பிள்ளைகள் தாங்கள் சரியான பாதையில் செல்வதாகவும். அதே நேரத்தில் தங்களுக்கான மீ-டைம் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் கிடைக்கும் போது தன்னம்பிக்கையை இழக்க மாட்டார்கள். தேர்வுக்கு தங்களை சோர்வில்லாமல் தயார்ப்படுத்தவும் திட்டமிடுவார்கள்.

இந்த பதட்டமான சூழலில் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து எதிர்பார்ப்பது நல்ல புரிதல் மற்றும் ஊக்கமூட்டும் வார்த்தைகள். இப்போது அவர்களுக்கும் தேவையானது விமர்சனம் இல்லை. ஆறுதல் தான் வேண்டும். எதிர்கால கனவுகளை சுமந்து காத்திருக்கும் இந்த மாணவர்களுக்கு பெற்றோர் கொடுக்கும் தைரியமும், ஊக்கமும் தான் அவர்களின் குறிக்கோளை வெல்ல உதவும். ஆரோக்கியம், மகிழ்ச்சி, குறிக்கோளுக்கான முயற்சி இந்த மூன்றையும் அவர்கள் சிறப்பாக செய்ய பெற்றோர்களாகிய நீங்கள் உறுதுணையாய் நில்லுங்கள்.

Be the first to support

Be the first to share

support-icon
Support
share-icon
Share

Comment (0)

share-icon

Related Blogs & Vlogs

No related events found.

Loading more...