1-3 வயது குழந்தைகளுக்கான ...
குழந்தையின் புன்னகை எத்தனை அழகோ, அதைவிட மிகப்பெரிய அழகியல் மழலையின் தூக்கம். குழந்தை தூங்கும்வதை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது. குழந்தையின் தூக்கம் ரசிப்பதற்கு மட்டுமல்ல, குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் தூக்கம் அவசியம்.
பொதுவாக, குழந்தை பிறந்தவுடனே, ஊர்புறங்களில் கேட்பார்கள் ”குழந்தை பகலில் பொறந்துச்சா, நைட்ல பொறந்துச்சான்னு” ஏன்னு கேட்டா, பகல்ல பொறந்தா நைட்ல தூங்காது, நைட்ல பொறந்தா பகல்ல தூங்காதுன்னு சொல்வாங்க. அதை, நாம் பழமொழியாகவே கடந்துவிடவேண்டும்.
ஏனெனில், பிறந்த நேரத்துக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனால், நேரத்துக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தமுண்டு. அந்த தூக்கத்தை சரியாக முறைப்படுத்துவதுதான் ஒரு தாயின் கடமை.
’காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிது கடந்துவிட்டால் தூக்கமில்லை மகளே!” என்பது பாடல் வரிகளுக்கு மட்டுமில்லை. சரியான தூக்கத்திற்கும் தான். ஏனெனில், ஒரு மனிதன் சரியான உறக்கத்தை உறங்கக்கூடிய காலமே அவனது குழந்தைப்பருவம்தான்.
அத்தகைய பருவத்தில் முக்கிய காலம் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். மேலும் வாசிக்க
பிறந்த குழந்தை ஒரு நாளைக்கு 15 முதல் 18 மணிநேரங்கள் தூங்க வேண்டும். பொதுவாக, பிறந்த குழந்தையானது பெரும்பாண்மை நேரம் தூங்கிக்கொண்டுதான் இருக்கும்.
ஏனெனில், குழந்தைக்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது. ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் நேரம் மாறுபடும்.
அதுமட்டுமில்லை, முதல் 6 மாதங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம். அதிலும், பிறந்த குழந்தைக்கு இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தருவது முக்கியம்.
இதனாலும், குழந்தையின் தூக்கத்தில் மாறுபாடு இருக்கும். முதல், 3 மாதங்கள் முடிந்து, 5ம் மாதத்திலிருந்து பகலில் குறைவாகவும் இரவில் நெடு நேரமும் தூங்குவார்கள்.
ஆறாம் மாதத்திற்கு பிறகு குழந்தை தூங்குவதில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில், குழந்தை தவழ ஆரம்பிக்கும்.
அதுமட்டுமில்லை, 6ம் மாதத்திலிருந்து தான் குழந்தைக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிப்பார்கள். இந்த பருவத்தில் 11 முதல் 15 மணிநேரம் தூங்குவார்கள்.
இந்த தூங்கும் நேரம் படிபடியாக குறையத்தொடங்கும். பெரும்பாலும், ஒன்றரை வயதுவரை குழந்தை தூங்கும் நேரமானது முன்னும் பின்னுமாக இருக்கும்.
ஏனெனில், குழந்தை திட உணவிற்கு பழகும்போது, சமயங்களில் குழந்தைக்கு இரவில் பசியெடுக்கும். அதுமட்டுமில்லாது, கொடுத்த உணவு செரிக்காமல் இருந்தாலும் குழந்தை சரியாக தூங்காது. அதனால்தான், குழந்தையின் உணவில் சரியாக கவனம் செலுத்தவேண்டும்.
ஏனெனில், உடலும் மனமும் தொடர்புடையதுபோல, உணவும் தூக்கமும் ஒன்றோடொன்று தொடர்புடையது.
குழந்தை சரியான நேரத்தில் தூங்கி பழகக்கூடிய பருவம்தான் 2 முதல் 3 வயது. ஏனெனில், இந்த வயதில் குழந்தை சரியாக 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் தூங்கவேண்டும்.
இந்த பழக்கத்தை சரியாக முறைப்படுத்தவேண்டும். ஏனெனில், இந்த வயதுப்பருவமானது குழந்தையின் உடல் வளர்ச்சி மற்றும் மனவளர்ச்சிக்கும் உகந்த பருவம். பகலில் இரண்டு மணிநேரமும் இரவில் குறைந்தது 8 மணிநேரமும் ஆழ்ந்து தூங்க வேண்டும்.
ஒன்றரை வயது வரை குழந்தையின் தூக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 2 வயது முதல் குழந்தையின் தூக்கத்தை சரியாக பழக்கப்படுத்தவேண்டும். அதுதான், எதிர்காலத்தில் சரியான நேரத்தில் தூங்கி எழ பழக்கப்படுத்தும்.
குழந்தையின் விளையாட்டை தூக்கத்தோடு கணிக்கலாம். ஏனெனில், எந்த அளவிற்கு உடல் அசைந்து விளையாடுகிறார்களோ, அதைவிட ஆழ்ந்து இரவில் தூங்குவார்கள். அதனால், குழந்தைகளை நன்கு விளையாடவிடுங்கள்.
இரவு உணவை முடிந்தவரை குழந்தைக்கு 7 முதல் 8 மணிக்குள் கொடுத்துவிடுங்கள். அதிலும், நன்கு ஜீரணிக்கக்கூடிய உணவாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான், இரவில் வயிறு தொந்தரவு இருக்காது.
இரவில் சரியான நேரத்திற்கு உறங்கினாலே, காலையில் எழுந்துவிடுவார்கள். ஆரம்பத்தில் நாம்தான் எழவும் பழக்கவேண்டும். அதிலும், குறிப்பாக குழந்தையை அரக்க பரக்கவோ அல்லது கத்தியோ எழுப்பக்கூடாது.
பொதுவாக, குழந்தைகளை ஒருநாளைக்கு இரண்டுமுறை குளிக்க வைக்கவேண்டும். அதாவது, காலையிலும் மாலையிலும். அதிலும் மாலைக்குளியல் செய்வதே குழந்தை நன்கு அயர்ந்து தூங்கவேண்டும் என்பதற்காகத்தான். மாலையில் மிதமான வெந்நீரில் உடலுக்கு குளிக்க வைக்கலாம்.
குழந்தைகள் தூக்கத்தில் சிரிப்பார்கள். ஏன் சிரிக்கிறார்கள் என்று கேட்டால், குழந்தையிடம் கடவுள் விளையாடுவார் அதனால் சிரிக்கிறார்கள் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லுவார்கள். கடவுள் விளையாடுகிறாரோ இல்லையோ, நம் குழந்தைகளோடு நாம் விளையாடுவோம். குழந்தையின்
Be the first to support
Be the first to share
Comment (0)