கொரோனா காலத்தில் நமக்கிருக்கும் பல்வேறு சவால்களில் முக்கியமானது குழந்தைகளை வீட்டில் எப்படி ஈடுபடுத்துவது? ஸ்கூல் இல்லாம, நண்பர்கள பார்க்காம, வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன வேலைகள் கொடுப்பது? அல்லது என்ன ஆக்டிவிட்டீஸ் கொடுத்து ஈடுபட வைப்பது? என்பது பெற்றோர் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி. என்ன செய்தாலும் சீக்கிரமே போர் அடிக்குது மா என்று குழந்தைகள் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். குறிப்பாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பெற்றோர்க்கு கடினமான ஒன்று தான்.
இந்த பதட்டமான பயமான சூழழில் வெளிய போய் விளையாட முடியாம, தன்னுடைய பள்ளிக்கு செல்ல முடியாம, நண்பர்கள் , உறவினர்கள், தாத்தா பாட்டி பார்க்க முடியாம ரொம்பவே மனரீதியாக பாதிக்கபட்டிருக்காங்க. அதுமட்டுமல்லாமல் நிறைய குழந்தைகள் அதிகமாக ஸ்க்ரீனில் (மொபைல், டிவி) தங்கள் நேரத்தை செலவிடுவதால் கண் பதிப்பு மற்றும் நடத்தையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளை வீட்டில் ஈடுபடுத்துவதற்கான ஆக்டிவிட்டிஸ்
இந்த சமயங்களில் பெற்றோர்கள் மட்டுமே குழந்தைகளை இந்த சூழ்நலையில் இருந்து பாதுகாக்க முடியும். குழந்தைகளை எப்படி மற்ற செயல்பாடுகள்ல ஈடுபடுத்தலாம் என்பதற்கான சில ஆலோசனைகள்.
தன்னுடைய வேலைகளை தானே செய்ய கற்றுக் கொடுப்போம்.
- குழந்தைகளுக்கு சிறு சிறு வீட்டு வேலைகள் செய்ய கற்று கொடுங்கள். எடுத்துக்காட்டாக காலையில் படுக்கையை விட்டு எழும் போது அவர்களுடைய படுக்கையை மடித்து சுத்தமாக வைப்பது எப்படி என்று கற்றுகொடுக்கலாம்.
- முக்கியமாக குழந்தைகளுக்கு பொருட்களை எடுத்த இடத்தில் வைக்க கற்றுகொடுக்கலாம். இதை ஒரு கேம் மாதிரி விளையாட்டாக செய்ய வைக்கலாம். இவ்வளவு நிமிடத்தில் செய்கிறாய் என்று பார்ப்போமா? மாதிரியான கேம்ஸ் மூலமாக கற்றுக் கொடுக்கலாம்.
- அவர்களுடைய விளையாட்டு சாமான்களை சுத்தம் செய்ய வைப்பது அவர்களுடைய room மை தினமும் ஒழுங்காக, சுத்தமாக வைப்பது இப்படி அவர்களுடைய வேலையை அவர்களே செய்ய கற்றுக் கொடுக்கலாம்.
- மூன்றரை வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்களே பல் தேய்க்க, குளிக்க, சாப்பிட கற்றுத் தரலாம்.
- பெரியவர்களுக்கு சின்ன சின்ன உதவி செய்ய வைங்க. எடுத்துக்காட்டாக "தாத்தாவுக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வாங்க, " பாட்டியோட கண்ணடிய தேடி எடுத்து வாங்க" என்று சொல்லி வேலை வாங்கும் போது பெரியவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், பொறுப்பும் வரும்.
சமயலறையில் எப்படி குழந்தைகளை ஈடுபடுத்துவது:
நிறைய பெற்றோர்கள் குழந்தைகளை சமையலறையில் அனுமதித்ததே கிடையாது. கேட்டா அங்க கேஸ் இருக்கு, கத்தி இருக்கு இதெல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தானது என்பார்கள். ஆபத்து இல்லாத இடங்களே இல்லை. ஆபத்து இல்லாமல் அதனை எப்படி கையாள்வது என்று கற்றுக் கொடுக்க முயற்சிப்போம். அது மட்டுமல்லாமல் நிறைய பெற்றோர்கள் ஆண் குழந்தைகளை வீடு மற்றும் சமையல் சம்பந்தமான வேலையில் ஈடுபடுத்துவது கவுரவ குறைச்சலாக நினைப்பார்கள் கண்டிப்பாக அப்படி இல்லை. வீடு தான் முதல் பள்ளிக்கூடம். பெற்றோர் தான் முதல் ஆசான் சமையலறை தான் முதல் ஆய்வு செய்யும் இடம் அங்கு குழந்தைகள் தங்கள் திறன்களை வளர்க்க ஏராளமான விஷயங்கள் இருக்கு.
- எந்தெந்த பொருட்கள் எங்கு உள்ளது என்று தெரிந்து இருக்க வேண்டும்
- நீங்கள் வேலை செய்யும் போது உங்களுக்கு உதவியாக காய்கறிகள், பழங்கள் தோல் உறிக்க சொல்லித் தரலாம்
- சிறு சிறு ஈஸியான ஸ்நாக்ஸ் eg. சாலட் செய்ய கற்றுக் கொடுக்கலாம்
- பாத்திரங்களை கழுவ சொல்லி தரலாம், வீடு, டேபிள் சேர் க்ளீன் பண்ண வைக்கலாம்
- சாப்பிடும் முன் ,சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்தல் உணவுப் பொருட்களை எடுத்து வைத்தல் போன்ற எளிதான வேலைகள் செய்ய வைக்கலாம்.
கிராஃப்ட் வேலைகள் செய்ய சொல்லித் தரலாம்:
- சிறு சிறு ஈஸியான கைவினை பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கலாம்.
- பிளாஸ்டிக் பாட்டில கலர் தீட்டி அதில் பிளவர் வாஷ் பண்ணலாம்
- கலர் பேப்பர் வைத்து நிறைய வடிவங்கள், பப்பெட்ஸ், ரெயின்போ போன்றவை செய்ய் சொல்லித் தரலாம்
- பழைய பாசிகளை வைத்து அழகு பொருட்கள் செய்ய கற்றுத் தரலாம்
- உபயோகமற்ற bottle மற்றும் தேங்காய் சிறட்டையில் சிறு சிறு செடிகள் வளர்க்க கற்றுக் கொடுங்கள்.
குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்க கற்றுகொடுக்கலாம்.
- படிக்கும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே நாம்தான் ஊக்குவிக்க வேண்டும். ஆறு வயதில் இருந்தே புத்தகன் படிக்க ஆரம்பித்து விட்டனர் குழந்தைகள். படிக்கும் பழக்கம் ரொம்ப நல்லது அவர்கள் அறிவுத் திறனை வளர்ப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது.
- தினமும் வாசிப்பதை ஒரு பழக்கமாக ஏற்படுத்திக் குடுக்க வேண்டும். நாமும் கூட சேர்ந்து வாசிக்க வேண்டும். வாசிக்கும்போது கேள்விகள் கேட்க ஊக்கப்படுத்தவும்.
- ஆறு முதல் எட்டு வயது குழந்தைகளுக்கு சிறு சிறு நீதி கதைகள், காமிக் கதைகள் கூறலாம்.
- எட்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் செய்தி தாள், வரலாற்று நூல்கள், அத்தியாய கதைகள் வாசிக்க கற்றுத் தரலாம்.
ஓவியம் வரைய கற்று தரலாம்:
- குழந்தைகளை பயனுள்ள வகையில் ஈடுபடுத்த ஓவியம் வரைதல் ஒரு எளிதான வழி.
- கலர் பென்சில், கலர் பெய்ன்ட் வைத்து டூடல் ஆர்ட், பப்பில் ஆர்ட், நெய்ல் பாலிஷ் ஆர்ட், விரல் ஆர்ட் வைத்து ஃபேமிலி மரம், டாட்டூ பாட்டர்ன் ஆர்ட் போன்ற ஆர்ட் வகைகளை பயன்படுத்தி குழந்தைகளை ஈடுபடுத்தலாம்.
- படம் வரைந்து கதை சொல்ல கற்று தரலாம். வீடு, மரம், வாகனங்கள், கதையில் வரக்கூடிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்றவற்றை வரைய பழக்கப்படுத்தலாம்.
இந்த கடுமையான சூழ்நிலையில் குழந்தைகள் தங்கள் பள்ளி, நண்பர்கள், உறவினர்கள், பொது இடங்களுக்கு செல்வது, வெளியே போய் விளையாடுவது என்று நிறைய விஷயங்களை இழந்து வீட்டில் அதிக நேரம் மொபைல் போன், டிவியில் தங்கள அதிகமாக ஈடுபடுத்துவதால் அதிக எரிச்சல், அடம் மாதிரியான நடத்தைகள் வளரும். இதை பெற்றோர்கள் மட்டுமே புரிந்து அவர்களை சரியான முறையில் கொண்டு போக வேண்டும். நமக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களிடம் காட்டுவது இல்லாமல் அவர்களோடு நேரம் செலவிட வேண்டும்.
இந்த லாக்டவுன் குழந்தைகளோடு நேரத்தை செலவிட நமக்கு கிடைத்த ஒரு அருமையான நேரம் என்பதை புரிந்து குழந்தைகளை பயனுள்ள மற்றும் பாதுகாப்பான முறையில் வளர்ப்போம்.