1. உங்க செல்ல குழந்தைகளுக்கு ...

உங்க செல்ல குழந்தைகளுக்கு ஒரு குட்டி ஸ்டோரி -- உலக கதை சொல்லல் தினம்

All age groups

Vithya Danaraj

4.2M பார்வை

4 years ago

உங்க செல்ல குழந்தைகளுக்கு ஒரு குட்டி ஸ்டோரி -- உலக கதை சொல்லல் தினம்
ஆன்லைன் கல்வி

வணக்கம், உங்க எல்லோருக்கும் உலக கதை சொல்லல் தின வாழ்த்துக்கள். என் பெயர் வித்யா. S4 Stories எனும் நிறுவனத்தை நடத்தி வருக்கிறேன். இந்தத் துறையில் 11 ஆண்டுகளாக இருக்கிறேன். சமூக அக்கறையை வளர்த்தெடுக்கும் நோக்கில் ப்ளாஸ்டிக் பொல்யூஷன், நேச்சர் லவ்வர், பாலியல் வன்கொடுமை என சமூகம் சார்ந்த விஷயங்களை கதை வடிவில் குழந்தைகளுக்கு சொல்கிறேன்.

குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பை அறிமுகப்படுத்துவது அவசியம். அவர்கள் தானாக புத்தகத்தை எடுத்து  வாசிக்கும் வரை தினம் ஒரு கதை புத்தகத்தை பொறுமையாக வாசித்து காட்டுங்கள். இயற்கையோடு அவர்களை விளையாட விடுங்கள். 6 மாதத்தில் தொடங்கி ஆறு வயதுவரை என் மகளுக்கு புத்தகத்தை வாசித்துக் காட்டினேன். மூன்றாவது படிக்கும் என் மகளுக்கு இன்று ஒரு ஹாரிபாட்டர் புத்தகத்தை கையில் கொடுத்தால் மதியத்திற்குள்  படித்து முடித்து விடுவாள்.

More Similar Blogs

    கதைகள் மற்றும் புத்தகம் வாசிப்பு மூலம் குழந்தைகளுக்குள் எண்ணற்ற வளர்ச்சி நடைபெறுகிறது. பெற்றோர் முயற்சித்தால் குழந்தைகளிடம் அதிசயங்களைப் பார்க்கலாம். அவர்களின் உலகத்தில் நீங்களும் பயணிக்க விரும்பினால் உங்க குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்லுங்க. நீங்களும் அவர்களோடு குழந்தையாய் மாறுங்க.

    நான் ஒரு யூடிப் சேனல் நடத்தி வருகிறேன். அதன் இணைப்பை கொடுத்திருக்கிறேன். https://m.youtube.com/watch?v=KEsPAn7Lx7E அங்கே என்னுடைய கதைகளைப் பார்த்து மகிழலாம்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs