குழந்தைக்கு டாய்லெட் பயிற ...
குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே கழிப்பறைப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நினைப்பது உண்டு. ஆனால் எப்போது, எப்படி தொடங்க வேண்டும் என்பதில் பலருக்கு பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். 6 மாதத்துக்குப் பிறகு குழந்தைகள் திட உணவு சாப்பிட பழக்கமாகிவிடுவார்கள். அதன் பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருவதை சொல்ல தெரியாது. ஆனால், வளர வளர குழந்தைகளுக்கு இயற்கை கழிவுகள் வருகின்றன என சொல்ல தெரியும். அதனால் பெற்றோர்கள் அதற்கான பயிற்சியை குழந்தைகளுக்கு தொடங்குவது அவசியம். ஆனால் இந்த விஷயத்தில் அவர்களுக்கு எந்தவித அழுத்தமும் நாம் கொடுக்காமல் பழக்குவது தான் நம் திறமையே. ஏனென்றால் திட்டியோ, பயமுறுத்தியோ வருவதில்லை, இயற்கையாக அவர்கள் பழகுவதே அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் தரும்.
உங்கள் குழந்தை டாய்லெட் பயிற்சிக்கு தயாராக இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
பெரும்பாலான குழந்தைகள் வயது 2 மற்றும் 4 வயதுக்குள் பழக தயாராக உள்ளனர், ஆனால் வயதை விடவும் சில காரணிகள் இருக்கின்றது..
பயிற்சி தொடங்க சிறந்த வழி என்ன?
பருத்தி உள்ளாடைகளுடன் கூடிய டயப்பர்களை முதலில் பயன்படுத்த தொடங்கலாம். பல அடுக்கு பருத்தி துணியினால் ஆனா டயாப்பர் பயன்படுத்தும் போது ஒருமுறை ஈரமாகும் போது அவர்களுக்கு Potty அல்லது டாய்லெட் பயிற்சியை அறிமுகப்படுத்தும் போது குழந்தைகளுக்கு சொளகரியத்தை உணர தொடங்குவார்கள்.
உங்கள் குழந்தை Potty- யை பயன்படுத்த தயாராக இருப்பதற்கான அறிகுறிகளைக் காண்பித்தால், புத்தகங்கள் அல்லது வீடியோ காண்பித்து பயிற்சி முறைகளை பற்றி பேசலாம். அதுமட்டுமில்லாமல் அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டலாம்.
குழந்தைகள் பயிற்சியை தொடங்க விரும்பாத போது அவர்களை வற்புறுத்த வேண்டாம். மிகுந்த அழுத்தம் கொடுத்து அதாவது தண்டனை கொடுத்து மற்றும் வேகமாக கற்க வற்புறுத்தி இந்தப் பயிற்சியை தொடங்குவதை தவிர்க்கவும்.சின்ன சின்ன தவறுகளூ, விபத்துகளும் நடப்பது இயல்பு தான்.
இந்த பயிற்சியை தொடங்வதற்கு உங்கள் குழந்தைக்கு உகந்த சரியான நாளை தேர்ந்தெடுங்கள். ஒரு வாரம், மாதம், வருடம் கால அவகாசம் எடுக்கலாம். எப்படி இருந்தாலும் உங்கள் குழந்தை கற்றுக் கொள்ள தயாராக இருப்பதே முக்கியம்.
குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை தொடங்குவதற்கு உதவும் சில எளிய வழிகள்
இந்த பயிற்சி என்பது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் உபயோகப்படும் என்பதல் அவசரம் இல்லாமல், அழுத்தம் கொடுக்காமல் குழந்தைக்கு இயல்பாக நிகழும் சூழலை அமைத்துக் கொடுப்பதே அவர்களுக்கு நல்லது.
Be the first to support
Be the first to share
Comment (0)