மழைக்காலத்தில் குழந்தைகளு ...
”தென்மேற்கு பருவக்காற்று தேனீ பக்கம் வீசும் போது சாறல் " இந்தப் பாடலை நாம் நிறைய பேர் கேட்டிருப்போம். தென்மேற்கு பருவ மழையை பற்றி கூறுகிறது, தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரையில் இந்தியாவிற்கு 80 முதல் 90 % வரை அதிகமான மழையை தருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் குறைந்த பட்சமாக 32% மட்டுமே மழை பொழிகிறது. எனவே இந்த இரண்டு பருவ மழையை ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு அதிகப்படியான மழையை தென்மேற்கு பருவமழையும் தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழையை வடகிழக்கு பருவமழையும் தருகிறது என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.
நீண்ட கோடை விடுமுறையில் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அவர்கள் வீட்டில் முழுமையாக ஓய்வெடுக்கும்போது, நன்றாக தூங்கும்போது, நன்றாக சாப்பிடும்போது, நிறைய விளையாடும்போது, உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் போது, வீட்டிலேயே முழுவதுமாக இணைந்து செயல்படுவதால், எந்த தொற்றுநோய்களுக்கும் ஆளாகாமல் இருப்பார்கள்.
மழைக்காலத்தில், காற்று குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருக்கும், ஈரப்பதம் அளவு 100 சதவீதத்திற்கு மேல் இருக்கும். இந்த காற்றை சுவாசிப்பது குழந்தைகளுக்கு பாதிப்பை தரும். அடினாய்டுகள் மற்றும் டான்சில்கள் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மூக்கு மற்றும் தொண்டையில் காணப்படும் நிணநீர் திசுக்கள் ஆகும். குளிர்ந்த, ஈரமான காற்றின் காரணமாக, இந்த திசுக்கள் வீங்கி, சுவாசப் பாதைகளை தடுக்கின்றன. இதனால் முக்கடைப்பு மற்றும் இரவில் தூக்கம் தடைபடுகிறது.
குழந்தைகளை அழுக்கான இடங்கள், நீர் தேங்கிய இடங்கள் மற்றும் கூட்டம் நிறைந்த இடங்களில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு கொசுக்கடி அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, முழுக்கை சட்டை, பேன்ட் அணிவித்து வெளியே அழைத்து செல்வது நல்லது.
மழைக்காலங்களில் 'புளு' காய்ச்சல் அதிகம் பரவுவதால் ஆண்டு தோறும் அதற்குரிய தடுப்பூசியை குழந்தைகள் நல மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டு கொள்வது நலம். முடிந்தவரை வெளியில் உணவு உட்கொள்வதையும், நீர் பருகுவதையும் தவிர்க்க வேண்டும்.
வெளியில் செல்லும் போது வீட்டிலிருந்து உணவுகளையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் எடுத்து செல்வது குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் நன்மை பயக்கும்.
உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்
Be the first to support
Be the first to share
Comment (0)