ஆடி மாத கூழ் நன்மைகள் என் ...
ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என்பது பழமொழி. ஆடி மாதம் என்றாலே சிறப்பு தான். நிறைய விசேஷங்கள் வருகின்ற ஒரு மாதம்.. ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடி தபசு, ஆடி பெருக்கு இது போன்ற பல.. குறிப்பாக ஆடி மாத கூழ் சிறப்பு வாய்ந்த ஒன்று. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த கூழ் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது.
இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
ஆடி மாதத்தின் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் அம்பாளைக் கொண்டாடுவதற்கும் வணங்குவதற்குமான அற்புதமான நாட்கள் என்கிறார்கள் முன்னோர்கள்.
நமது முன்னோர்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொண்ட உணவு கூழ். அதனால்தான் அவர்களுக்கு சர்க்கரைநோய், இரத்த கொதிப்பு போன்ற நீண்டநாள் வியாதிகள் வரவில்லை. இன்னும் கூழ் பற்றிய அறிய வேண்டியது என்ன என்றால்...
100 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆடி மாதத்தில் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதற்கு ஆடி மாதத்தில் இருக்கு தட்ப வெப்ப நிலை காரணமாக சொல்லப்படுகின்றது. இந்த சீசனில் அதீத வெப்பமும், வறண்ட காற்றும் இருக்கும். இனம் புரியாத பல நோய்தொற்றுகள் மக்களை தாக்கின. அதில் முக்கியமாக சொல்வது அம்மை நோய்.
கேழ்வரகு மற்றும் கம்பில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. கம்பு உடலுக்கு குளிர்ச்சி தரும். இந்த மாதத்தில் நோய்தொற்றுகளை தடுப்பதற்காகவே நம் முன்னோர்கள் ஆடி மாத கூழ் செய்து மற்றவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். அப்போது பஞ்சம் அதிகம் இருந்ததால் ஒவ்வொரு ஊரிலும் இந்த கூழை அம்மனுக்கு படைத்து மக்களுக்கு வழங்கினார்கள்.
1. ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்த கேழ்வரகு மாவை போட்டுக்கொள்ள வேண்டும்.
2.பிறகு 4 கோப்பை நீரை அந்த பாத்திரத்தில் ஊற்றி கேழ்வரகு மாவு கட்டி போகாதவாறு நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
3.கால் கோப்பை பச்சரிசியை எடுத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து கொள்ள வேண்டும். 4.இந்த அரிசி மாவை மற்றொரு பெரிய பாத்திரத்தில் போட்டுகொண்டு அதில் 2 கோப்பை நீரை ஊற்றி, அடுப்பில் தீமூட்டி கொதிக்க வைக்க வேண்டும்.
5.இந்த பச்சரிசி மாவு நன்கு கஞ்சி போன்ற பதத்தில் வரும் அளவிற்கு காய்ச்ச வேண்டும்
6.கஞ்சி பதத்தில் பச்சரிசி மாவு வந்தவுடன் அதில் கேழ்வரகு மாவு கலவையை ஊற்றி, அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து, இளம் சூட்டில் இந்த கேழ்வரகு மற்றும் பச்சரிசி மாவு கலவை கட்டிபோகாத வாறு கரண்டியை கொண்டு கலக்கி கொண்டிருக்க வேண்டும்.
7.அதிக சூட்டில் வைத்து இந்த கலவையை கலக்கினால் இந்த கூழ் மிகவும் இறுகி களி ஆகிவிடும்.
8.கூழ் சரியான பதத்தில் வந்து விட்டது என்பதை அறிய அந்த கூழை சிறிது கரண்டியில் எடுத்து பார்த்தோமேயானால் அரிசிமாவு மற்றும் கேழ்வரகு மாவு தூள்கள் தனித்தனியாக இருப்பதை காண முடியும்.
9.இந்த பதத்தில் கூழ் வந்தவுடன் உடனடியாக பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். உடனடியாக தயிரை இக்கலவையில் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.
10.பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இக்கூழில் போட்டு கலக்கிய பின் கூழ் உண்பதற்கு தயாராகிறது.
இதை அமம்னுக்கு பிரசாதமாக வைத்து வணங்கிவிட்டு பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் பருகி மகிழலாம்.
தேவையான பொருட்கள்
1. ராகியை ஊற வைத்து கொள்ளவும்.
2. நன்றாக களைந்து விட்டு பிறகுபிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து பால் எடுக்கவும்.
3. பின்னர் அரைத்து எடுத்த பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.
4. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பொடித்து வைத்த வெல்லம் சேர்த்து நன்றாக கிளறவும்.
5. ஏலக்காய் தூள் நெய் சேர்க்கவும்
6. தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
ஆடி மாதத்தில் இந்த கூழை நீங்களும் குடித்து உங்களுக்கு குழந்தைகளுக்கும் கொடுக்கவும். பருவகால மாற்றத்தால் நோய்த்தொற்றிலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க இந்த கூழ் சிறந்த உணவு.
உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்
Be the first to support
Be the first to share
Comment (0)