ஸ்கூல் பேக் சரியாக அணிவதற்கான வழிகள் ? எவ்வளவு எடை இருக்க வேண்டும்?

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளி செல்வதற்கான எல்லா தயாரிப்புகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி செல்ல தயாராக எல்லா பொருட்களும் வாங்கி கொண்டிருப்பீர்கள். குறிப்பாக, ஸ்கூல் பேக் தேர்ந்தெடுக்க கடை கடையாக அலைந்து வாங்குவீர்கள். ஆனால் ஸ்கூல் பேக்கை சரியாக அணியவில்லை என்றால் பிள்ளைகளுக்கு கழுத்து வலி, முதுகு வலி மற்றும் முதுகு தண்டில் பிரச்சனை என வரத் தொடங்கும். இதற்காக 2020 ஆம் ஆண்டு ஸ்கூல் பேக் பாலிசி என்று கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டது.
இந்தப் பதிவில் பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் முதல் பெரிய பிள்ளைகள் அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பின்பற்ற வேண்டிய முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
'ஸ்கூல் பேக் பாலிசி’
'ஸ்கூல் பேக் பாலிசியில் பள்ளி செல்லும் பிள்ளைகள் ஒவ்வொரு வயதிலும் எவ்வளவு கிலோ எடை சுமக்க வேண்டும் மற்றும் சரியாக அணியவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். இது கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் (NCERT) வெளியிடப்பட்டது.
NCERT என்பது கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில். இது ஒரு தன்னாட்சி அமைப்பு. 1961 இல், இது இந்திய அரசால் அமைக்கப்பட்டது. பள்ளிக் கல்வியில் தரமான முன்னேற்றத்திற்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உதவுவதே இதன் பணி.
கொள்கையின்படி, பள்ளிப் பைகளின் எடை எவ்வளவும் இருக்க வேண்டும்:
3 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு அதிக புத்தகங்கள் அவசியமே இல்லை. வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ் பாக்ஸ் மற்றும் சிறிய டவல் இவ்வளவு போதுமானது.
- I மற்றும் II வகுப்பு மாணவர்களுக்கு 1.6 முதல் 2.2 கிலோ
- III, IV மற்றும் V வகுப்புகளுக்கு 1.7 முதல் 2.5 கிலோ,
- VI மற்றும் VII வகுப்புகளுக்கு 2 முதல் 3 கிலோ,
- எட்டாம் வகுப்புக்கு 2.5 முதல் 4 கிலோ,
- IX மற்றும் X வகுப்புகளுக்கு 2.5 முதல் 4.5 கிலோ மற்றும்
- XI மற்றும் XII வகுப்புகளுக்கு 3.5 முதல் 5 கிலோ வரை.
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு நாள் முழு வகுப்பிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாளில் மாணவர்களின் பள்ளிப் பையின் எடையை சரிபார்க்கும் பொறுப்பையும் ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். கனமான பைகள் பற்றிய தகவலைப் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
எவ்வாறு சரியாக அணிய வேண்டும்?
குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி பல டிசைன்களில், வண்ணங்களில் தேடி தேடி வாங்குகிறோம். இதை விட மிக முக்கியமானவது என்னெவென்றால் குழந்தைகள் ஸ்கூல் பேக்கை எப்படி அணிகிறார்கள் என்பது தான். உங்கள் பிள்ளைகள் எப்படி சரியாக வேண்டும் என்பதை பாருங்கள்..
- பெரும்பாலும் இப்போது பிள்ளைகள் இரண்டு புறமும் ஸ்ட்ராப் இருக்கிற மாதிரி தான் அணிகிறார்கள். ஸ்கூல் பேக்கில் இரண்டு புறமும் ஸ்ட்ராப் இருக்க வேண்டும். ஏன்னென்றால் தோளின் இருப்புறமும் எடை சமமாக இருக்கும்.
- சில குழந்தைகள் ஒருப்புறம் மட்டும் ஒரு ஸ்ட்ராப்போடு ஃபேஷனுக்காகப் போடுகிறார்கள். கண்டிப்பாக அப்படி அணிவதை தவிர்க்க வேண்டும். ஏன்னென்றால் முதுகு தண்டுக்கு அதிக சுமை கொடுப்பதாகும். ஒருப்புறம் மட்டும் எடை கூடுவதால், பிள்ளைகளின் கழுத்து, தோள்பட்டை மற்றும் முதுகு தண்டில் உள்ள தசைகளுக்கு பிரச்சனை வரக்கூடும்.
- ஸ்கூல் பேக் அணியும் போது எடை கீழே தொங்கும் படி அணியக்கூடாது. அதாவது பேக் கீழே தொங்கிக் கொண்டிருக்கும். அப்படி அணிவதால் முதுகு வலி வரும். இதை தவிர்க்க முதுகு ஓட்டியபடி பேக்கை அணிய வேண்டும். முதுகுக்கு நடுவில் உடம்போடு ஒட்டியபடி இருக்க வேண்டும்.
- குழந்தையின் வயதுக்கு ஏற்ற பேக்கை வாங்குங்கள். அவர்களின் முதுகுக்கு சரியான அளவை தேர்ந்தெடுக்கவும். ஸ்ட்ராப்ஸை உடம்புக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும் வசதி இருக்க வேண்டும் (adjustable straps)
ஸ்கூல் பேக் எடையை குறைப்பதில் பள்ளிகளின் பங்கு என்ன?
மேலும் இந்த கொள்கையில் கூறுவதாவது,
- 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியின் பள்ளிப் பைகள் அவர்களின் உடல் எடையில் 10% க்கும் அதிகமாக இருக்கக்கூடாது மற்றும் 1 ஆம் வகுப்புகு முன் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பைகள் இருக்கக்கூடாது.
- வகுப்பு II வரை, III முதல் V வகுப்புகளுக்கு வாரத்திற்கு அதிகபட்சம் இரண்டு மணிநேரமும், VI முதல் VIII வகுப்புகளுக்கு ஒரு மணி நேரமும், IX மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமும் வீட்டுப்பாடம் இருக்கக்கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
- மாணவர்கள் தினமும் ஏராளமான புத்தகங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதற்கு, பள்ளிகள் உள்கட்டமைப்பு மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
- தடிமனான அல்லது கனமானவற்றிற்கு பதிலாக, மெல்லிய அல்லது லேசான பாடப் புத்தகங்கள் இருக்க வேண்டும்.
பள்ளிப் பையின் எடையைக் குறைக்கும் வகையில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், பள்ளிக்குள் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான குடிநீரை போதுமான அளவில் வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனால், குழந்தைகளின் வீடுகளில் இருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
கனமான பள்ளிப் பைகளால் என்னென்ன பிரச்சனைகள்?
எடையுள்ள பள்ளிப் பைகள் வளரும் குழந்தைகளுக்கு கடுமையான அல்லது பாதகமான உடல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன
- அவர்களின் முதுகெலும்பு நெடுவரிசை மற்றும் முழங்கால்களுக்கு சேதம் விளைவிக்கும்.
- அதிக எடையுள்ள பள்ளிப் பைகள் காரணமாக, கழுத்து தசைகள் இழுக்கப்படலாம், இது தலைவலி, தோள்பட்டை வலி, கீழ் முதுகு வலி மற்றும் கழுத்து மற்றும் கை வலி ஆகியவற்றை ஏற்படுத்தும்.
- உடலின் தோரணை கூட மாறலாம், இது நீண்ட காலத்திற்கு உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்குகிறது மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
ஸ்கூல் பேக் அணியும் உங்கள் பிள்ளைகளுக்கு தவறாமல் இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள். அவர்களின் ஆரோக்கியம் சிறப்பான கற்றலுக்கு உதவும் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...