கர்ப்ப காலத்தில் போட வேண் ...
நம்முடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது போலவே கர்ப்ப காலத்தில் தாய்க்கும் போட வேண்டிய தடுப்பூசிகள் இருக்கின்றது. இந்த தடுப்பூசிகள் கர்ப்ப காலத்தில் சில தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது. தடுப்பூசி போடுவதன் மூலம் கர்ப்பிணி பெண் நோயெதிர்ப்பு திறன் கொண்ட ஆன்டிபாடிகளை தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு கொண்டு சேர்க்க முடிகிறது. இதனால் குழந்தை பிறந்து சில வாரங்கள் வரை நோய்கள் தாக்காமல் இருக்க உதவி புரிகிறது. இப்பொழுது பரிந்துரைக்கப்பட்ட கர்ப்ப கால தடுப்பூசி விவரங்கள்
கர்ப்பகாலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் என்னென்ன ?
பொதுவாக உயிரற்ற அல்லது செயலிழந்த வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைக் கொண்ட தடுப்பூசிகளை வழங்கலாம். உயிருள்ள வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்தியேக தடுப்பூசிகள் Tetanus Toxoid (TT) டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி.டி) இந்த தடுப்பூசி குழந்தையையும் டெட்டனஸ் நோயிலிருந்து பாதுகாக்கிறது. இந்த தடுப்பூசியை கர்ப்ப காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் கொடுக்கலாம் இருப்பினும் நான்கு மாதத்திற்கு பிறகு ஒரு மாத இடைவெளியில் இரண்டு அளவுகளாக கொடுப்பது வழக்கம். குழந்தைகளுக்கு டெட்டனஸ் நோய் வர காரணங்கள் அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கு தடுப்பு முறைகளை மேலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்) TdaP - Tetanus Toxoid, reduced diphtheria Toxoid, and acellular pertussis vaccine இந்த தடுப்பூசி கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில் வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒவ்வொரு கர்ப்பத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. மேல் குறிப்பிட்டுள்ள 3 தீவிர நோயிலிருந்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் இது பாதுகாக்க உதவுகிறது.
குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு டிப்தீரியா மற்றும் கக்குவான் இருமல் பிரச்சனைக்காக தடுப்பூசி போடப்படுகிறது. குழந்தை பிறந்து 6 வாரங்களுக்கு எந்த தடுப்பூசியும் போட முடியாது அதனால் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசி குழந்தை பிறந்து 6 வாரங்கள் வரை பாதுகாப்பு கவசமாக செயல்பட உதவுகிறது. Flu Vaccine/Shot இந்த தடுப்பூசி செயலற்ற காய்ச்சல் வைரஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது. இது கர்ப்பகாலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். சளிக் காய்ச்சல் அதிகம் பரவும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இதனை பரிந்துரைப்பார்கள். குறிப்பு - கர்ப்பத்தின் போது இன்ஃப்ளூயன்சா நாசி ஸ்பிரே தடுப்பூசி தவிர்க்கப்பட வேண்டும் ஏனெனில் அதில் அட் டென்யூட்டட் வைரஸை கொன்றுள்ளது.
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள்
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள் உயிருள்ள அட்டன்யூட்டட் வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகளை வழங்கப்படுவதில்லை. சிக்கன் பாக்ஸ், எம் எம் ஆர் தடுப்பூசி (தட்டம்மை, ரூபெல்லா) இன்ஃப்ளூயன்சா நாசி ஸ்ப்ரே தடுப்பூசி போன்றவை கர்ப்பகாலத்தில் போடப்படுவதில்லை. தடுப்பூசியின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் கர்ப்பகாலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பு கருதி கண்காணிக்க படுகின்றது. அவை நோயிலிருந்து பாதுகாக்கிறது. தடுப்பூசி கொடுப்பதற்கும் கருச்சிதைவு ஏற்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தடுப்பூசியின் பக்கவிளைவுகள்:
மற்ற மருந்துகளைப் போலவே தடுப்பூசி போடுவதால் வலி, சோர்வு, சிவத்தல், ஊசி போட்ட இடத்தில் வீக்கம் லேசான காய்ச்சல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதில் பெரும்பாலானவை தானாகவே போய்விடும். கர்ப்ப காலத்தில் பயணம் செய்யும் பொழுது கர்ப்பிணி பெண் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் பொழுது முக்கியமாக நோய்த் தொற்று அதிகமாக இருக்கும் பகுதிக்கு செல்லும் பொழுது ஹெப்படைட்டிஸ் ஏ மற்றும் ஹெப்படைட்டிஸ் பி போன்ற தடுப்பூசிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். கர்ப்ப கால பரிசோதனைகள் பேற்கொள்ளும் போது உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.
தாய் சேய் இருவரின் பாதுகாப்பிற்கும் போடப்படும் தடுப்பூசி விவரங்களை இந்த பதிவின் மூலம் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி
Be the first to support
Be the first to share
Comment (0)