1-3 வயது குழந்தையின் எடைய ...
ஒரு வயது குழந்தையின் எடையும், உயரமும் சீராக அதிகரிக்க வேண்டுமா? உடல் வளர்ச்சி என்பது உயரம் மற்றும் எடையில் நடக்கும் மாற்றத்தையும் பிற உடல் மாற்றங்கள் ஏற்படுத்துவதையும் குறிக்கிறது. முடி வளர்கிறது; பற்கள் வளர்கிறது; பற்கள் விழுவது போன்ற அறிகுறிகள் தொடர்கின்றன. இது வளர்ச்சி செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஒரு வயது முதல் மூன்று வயது வரையுள்ள காலம் பெரும்பாலும் கடினமானதாக இருக்கும் - குறிப்பாக குழந்தைகளின் உணவு பழக்கம். இவற்றை சரியாக கண்காணிக்க தேவையான சில குறிப்புகளை இப்பதிவில் நீங்கள் காணலாம்.
1 . வளர்ச்சிப் பட்டியல்கள் மூலம் ஒரு குழந்தையை அதே வயது மற்றும் அதே பாலின குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், எப்படி குழந்தைகள் வளர்ந்து வருகின்றன என்பதை சுகாதார வழங்குநர்கள் காட்டுகின்றனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், குழந்தைகள் உயரம் மற்றும் எடை அதிகரிப்பு முறையான சதவிகிதத்தில் உள்ளதா என்று சரி பார்க்க உதவுகின்றனர்.
2 . குழந்தைகளில் தலை சுற்றளவு (தலையின் மிகப்பெரிய பகுதியைச் சுற்றியுள்ள நீளம்) மூளை வளர்ச்சியைப் பற்றிய விவரங்களை வழங்க முடியும். ஒரு குழந்தையின் தலையானது மற்ற குழந்தைகளை விட அதிகமாகவோ அல்லது சிறியதாகவோ இருந்தால், தலை சுற்றளவு அதிகரிக்கிறது. அப்போது ஒரு மருத்துவரை பார்ப்பது மிகவும் அவசியம்.
3 . குழந்தைகளுக்கு சிறிய தொப்பை உண்டாகும். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய உணவை அதிகரித்து இனிப்பு மற்றும் நிறைய கலோரிகள் நிறைந்த உணவுகளை குறையுங்கள். இதுவே அவர்களுடைய சரியான எடை மற்றும் உயரத்தை பராமரிக்க முக்கியமான வழி.
4 . ஒரு குழந்தையின் எடை மற்றும் உயரம் அந்த குழந்தையை போல் உள்ள மற்ற குழந்தைகளுடன் பொருந்தாமல் வித்தியாசமாக இருந்திலோ, உயரம் குறைந்து எடை அதிகரித்து இருந்தாலோ அல்லது உயரம் அதிகரித்து எடை குறைந்து இருந்தாலோ ஒரு மருத்துவரின் அறிவுரையை கேட்டு தெரிந்து கொள்வது அவசியம்.
5 . இந்த வயதில் குழந்தைகளின் முக்கிய சாதனை, நடப்பது. குழந்தைகள் நடை அதிகரிக்கும்போது, அவர்களால் முன்பு செய்யமுடியாத சில விஷயங்களை ஆராய தோன்றும். அதனால் வீட்டை சுற்றி குழந்தைகளுக்கு ஏற்றார் போல பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும். குழந்தையின் பாதுகாப்பு அவர்கள் வளர்ச்சியில் மிகவும் முக்கியமான ஒன்று.
6 . குழந்தைகள் நடக்கவும் ஓடவும் ஆரம்பிக்கும்போது, அவர்கள் சோர்வடைய நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால் குழந்தைகளின் உணவு மிக சத்துள்ளதாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் சுறுசுறுப்பை மந்தமடையச் செய்யும்.
7 . பால், கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகிறது, அது வலுவான எலும்புகளை உருவாக்க உதவும். 2 வயதிற்கு உட்பட்ட பெரும்பாலான குழந்தைகள் சாதாரண வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான உணவு கொழுப்புச்சத்து மிக்க பால். ஒரு குழந்தைக்கு அதிக எடை இருந்தால் அல்லது உடல் பருமன், உயர் கொழுப்பு, அல்லது இதய பிரச்சினைகள் ஆகியவற்றின் குடும்ப வரலாறு இருந்தால், உங்கள் மருத்துவர் குறைவான கொழுப்பு (2%) கொண்ட பாலை பரிந்துரைக்கலாம்.
8 . உங்கள் குழந்தை 2 வயதை அடையும்போது, குறைந்த கொழுப்பு உள்ள பாலுக்கு மாறலாம்.12 மற்றும் 18 மாதங்களுக்கு இடையில் பாட்டில் பழக்கத்தை மாற்றுவதற்கான நல்ல நேரம். பாட்டிலை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு பதிலாக, மெதுவாக தொடங்கி உணவுத் திட்டத்திலிருந்து மெதுவாக அதை அகற்ற வேண்டும். இந்த பழக்கம் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
9 .குழந்தைக்கு 1 வயது எட்டியவுடன் இரும்பு குறைபாட்டை கண்காணிக்க வேண்டியது அவசியம். இது அவர்களின் உடல், மன மற்றும் நடத்தை சார்ந்த வளர்ச்சியை பாதிக்கும், மேலும் இரத்த சோகைக்கு வழிவகுக்கும். எனவே கீரை, மீன், பயறு வகைகள் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை பழக்க வேண்டும்.
10 . குழந்தைக்கு ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு உணவு கொடுக்கும்போது அந்த உணவு குழந்தைக்கு அழற்சி ஏற்படுத்துகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அது அழற்சி ஏற்படுத்தினால் ஒரு மருத்துவரை சந்தித்து அந்த உணவை பிற்காலத்தில் உட்கொள்ளலாமா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் இல்லையெனில் குழந்தையில் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.
குழந்தையின் ஒவ்வொரு வயது பருவத்திலும் அவர்களுடைய எடை மற்றும் உயரத்திற்கான சராசரி அளவின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண் |
பெண் | ||||
வயது |
எடை(செமீ) |
உயரம்(கிலோ) |
வயது |
எடை(செமீ) |
உயரம்(கிலோ) |
பிறப்பு |
2.6 |
47.1 |
பிறப்பு |
2.6 |
46.7 |
3 மாதம் |
5.3 |
59.1 |
3 மாதம் |
5 |
58.4 |
6 மாதம் |
6.7 |
64.7 |
6 மாதம் |
6.2 |
63.7 |
9 மாதம் |
7.4 |
68.2 |
9 மாதம் |
6.9 |
67 |
1 வயது |
8.4 |
73.9 |
1 வயது |
7.8 |
72.5 |
2 வயது |
10.1 |
81.6 |
2 வயது |
9.6 |
80.1 |
3 வயது |
11.8 |
88.9 |
3 வயது |
11.2 |
87.2 |
குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள். விளையாடாமல் உணவை மட்டுமே உட்கொள்ளும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரத்தில் சரியில்லாத மாற்றங்கள் ஏற்படக்கூடும். அதேபோல் அவர்களுக்கு உணவை திணிக்காமல் பசிக்கும்பொழுது உணவு உட்கொள்ள பழக்குங்கள். எங்கள் வயது-குறிப்பிட்ட கண்ணோட்டங்களை கொண்டு உங்கள் பிள்ளை 1 வயது முதல் 3 வயது வரையான வளர்ச்சி சரியாக உள்ளதா என நீங்கள் உணரலாம்.
“குழந்தையில் வளர்ச்சியில் ஆரம்பத்திலிருந்தே அக்கறை கொண்டு கவனித்தால், பிற்காலத்தில் குழந்தை ஆரோக்கியமாக வளர்வார்கள்”
Be the first to support
Be the first to share
Comment (0)