1. குழந்தைக்கு அஜீரண கோளாறா? ...

குழந்தைக்கு அஜீரண கோளாறா? செரிமானத்தை எளிதாக்கும் குறிப்புகள்

0 to 1 years

Parentune Support

2.2M பார்வை

2 years ago

குழந்தைக்கு அஜீரண கோளாறா?  செரிமானத்தை எளிதாக்கும் குறிப்புகள்
உணவுப்பழக்கம்
வீட்டு வைத்தியம்

உங்கள் குழந்தைக்கு செரிமான பிரச்சினைகள் வரும்போது உங்களுக்குள் குழப்பம் ஏற்படும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு இது எவ்வாறு இருக்கும் என்பது எனக்குத் தெரியும். சில நாட்கள், உங்கள் குழந்தை ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் மலம் கழிக்கும், பின்னர் தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு அவன்/அவள் மலம் கழிக்காத நாட்கள் இருக்கும்.

இப்போது, ​​மருத்துவ துறையில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவரும் தினமும் மலத்தை கழிக்காதபோது - இது மலச்சிக்கலுக்கான பிரச்சனையாக பார்க்கிறார்கள். இப்போது, ​​“என் குழந்தைக்கும் மலச்சிக்கல் இருக்கிறதா?” என்று நீங்கள் கேட்கலாம். சரி, உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன், 0-6 மாதங்களுக்கு இடையில் தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகள் அரிதாகவே மலச்சிக்கல் அடைவார்கள்.

More Similar Blogs

    உங்கள் குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்குமெனில் அதன் அர்த்தம் என்ன?

    இதை எளிய வார்த்தைகளில் விளக்குகிறேன். மலச்சிக்கல் என்பது எத்தனை முறை மலம் போகிறார்கள் என்பதை காட்டிலும் மலத்தின் தோற்றத்தைக் குறிக்கிறது. உலர்ந்த, கடினமான மலம் அல்லது சிறிய, உறுதியான கூழாங்கல் போன்ற மலம் மலச்சிக்கலை குறிக்கிறது. உங்கள் பிள்ளைகள் சிரமப்படுவதை நீங்கள் உணரும்போது, ​​குடல் அசைவுகளின் போது அவன் / அவள் முகம் சிவப்பாக மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள். உண்மையில், உங்கள் குழந்தையின் மலத்தில் இரத்தக் கோடுகள் இருப்பதை கூட நீங்கள் கவனிக்கலாம், ஏனெனில் கடினமான மலம் மலக்குடல் சுவரில் காயத்தை ஏற்படுத்தலாம்.

    தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    உங்கள் குழந்தைக்கு நீரிழப்பு ஏற்பட்டால் இது நடக்கலாம். பொதுவாக, 6 மாதங்களுக்கு உங்கள் தாய்ப்பால்  90% தண்ணீரைக் கொண்டிருக்கும். எனவே, நீங்கள் எடுக்கும் உணவுகள் முக்கியமாக எளிதாக செரிக்கக்கூடிய உணவாகவும், அதிக நார்ச்சத்து கொண்டதாகவும், நீர்ச்சத்து கொண்டதாகவும் இருப்பது அவசியம். நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

    இருப்பினும், 1 வயதிற்கும் குறைவான குழந்தைக்கு, பசும் பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணங்கள் –
    பசுவின் பாலில் அதிகமாக கேசீன் என்கிற புரதம் உள்ளது. இது குழந்தைகளுக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். ஒரு குழந்தையின் செரிமான அமைப்பு அவற்றை ஜீரணிக்க இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    • இதில் சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற கூறுகள் உள்ளன, அவை குழந்தையின் சிறுநீரகங்களில் சிரமத்தை ஏற்படுத்தும்.
    • குழந்தையின் முதல் 12 மாத வாழ்க்கையின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இதில் இல்லை.
    • இதில் வைட்டமின்-இ, சிங்க் மற்றும் இரும்புச் சத்து இல்லாததால் இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை மற்றும் உள் இரத்தப்போக்கும் ஏற்படக்கூடும்.
    • எந்தவொரு காரணத்தினாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டால், வயிற்றிற்கு ஏற்றுக்கொள்ளும் மற்றும் பொருத்தமான மாற்றை தேர்ந்தெடுக்கவும். இதை தெரிந்து கொள்ள குழந்தை மருத்துவரை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    குழந்தைக்கு குறைந்தபட்சம் 1 வயது வரை தாய்ப்பால் கொடுப்பது சிறந்த ஊட்டச்சத்து ஆகும். குழந்தைக்கு 1 வருடம் முடிந்த பின்னரே பசும் பால் அறிவுறுத்தப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு பசும் பாலின் சுவை பிடிக்காது என்பதால், மாற்றம் படிப்படியாக இருக்க வேண்டும், இதனால் குழந்தையின் செரிமானப் பாதை கூட அதற்கு ஏற்றதாக மாறிவிடும். இதை வழக்கமான ஃபார்முலா ஊட்டத்துடன் கலந்து கொடுக்கலாம் அல்லது தாய்ப்பாலுக்கு பதிலாக கொடுக்கலாம்.

    செரிமான கோளாறின் கவலைக்குரிய அறிகுறிகள் என்ன?

    உங்கள் குழந்தையின் மலத்தில் நீங்கள் எப்போதாவது இரத்தத்தைக் கண்டால் அல்லது சிறுநீர், உமிழ்நீர், கண்ணீர், மூழ்கிய கண்கள், சோம்பல் மற்றும் எரிச்சல் ஆகியவை உங்கள் குழந்தைக்கு இருந்தால் அல்லது சாப்பாட்டை எடுக்க மறுத்து, பெரும்பாலான நேரங்களில் அழுகிறாள் என்றால் - தயவுசெய்து உங்கள் குழந்தை மருத்துவரை பரிசோதனைக்கு விரைவில் பார்க்கவும்,

    உங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தையின் செரிமான சிக்கலை எவ்வாறு கையாள்வது?

    • உங்கள் குழந்தை வயது 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் இருந்தால், நீங்கள் எப்போதாவது அவருக்கு / அவளுக்கு சிறிய அளவு தண்ணீர் அல்லது ப்ரெஷ்ஷான பழச்சாறுகளை கொடுக்கலாம்.
    • தாய்ப்பால் கொடுப்பவர்கள் உணவில் மைதா, பேக்கரி உணவு, துரித உணவு உண்பதை தவிர்க்கவும்.
    • ORS / எலக்ட்ரோலைட் அல்லது வேறு எந்த மருந்தையும் கொடுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்கள் குழந்தைக்கு எலக்ட்ரோலைட் சமநிலை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
    • நீரிழப்பு உங்கள் குழந்தைக்கு மிக விரைவாக ஏற்படக்கூடும். ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்த பிறகு, உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை இல்லாதிருந்தால், பசும் பாலை அறிமுகப்படுத்தலாம்.

    எனவே, தாய்ப்பாலூட்டுவதை தொடரவும், சீரான உணவை சாப்பிடுங்கள், உங்கள் குழந்தைக்கு ஏதேனும் கவலையான அறிகுறிகளை கண்டால், தயவு செய்து குழந்தைநல  மருத்துவரை அணுகவும். இருப்பினும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டால், தயவு செய்து உங்கள் மருத்துவரை அணுகி வயிற்றிற்கு நல்லதான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் மாற்று உணவைப் பற்றி கேளுங்கள். உங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

    இந்த வலைப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், கீழே உள்ள கருத்துகள் பிரிவில் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs

    Reflections of A First Time Moms

    Reflections of A First Time Moms


    0 to 1 years
    |
    118.4K பார்வை
    Being a Mother- The sweet reality

    Being a Mother- The sweet reality


    0 to 1 years
    |
    2.9M பார்வை
    Being a Mother - The Delicate Balance

    Being a Mother - The Delicate Balance


    0 to 1 years
    |
    29.6K பார்வை
    Being a mother - My aspirations

    Being a mother - My aspirations


    0 to 1 years
    |
    3.9M பார்வை