1. குழந்தைகள் படிக்க வேண்டிய ...

குழந்தைகள் படிக்க வேண்டிய சிறந்த தமிழ் கதைப்புத்தகங்கள்

All age groups

Radha Shri

2.7M பார்வை

3 years ago

குழந்தைகள் படிக்க வேண்டிய சிறந்த தமிழ் கதைப்புத்தகங்கள்
Identifying Child`s Interests
பாலியல் கல்வி
சரும பாதுகாப்பு

குழந்தைகள் புத்தகங்கள் மீது விருப்பத்தை கொண்டு வருவது எளிதானது என்று தான் நான் நினைக்கிறேன். நாம பாடப்புத்தங்களையே அதிகமா படிக்க சொல்றதுனால குழந்தைகளுக்கு புத்தகங்கள் மேல ஒரு ஆர்வம் இல்லாமல் போயிடுது. கண்டிப்பா இப்படி மட்டும் சொல்லவே கூடாது “ பாடத்தையே ஒழுங்கா படிக்கிறதில்ல இதுல கதைப் புத்தகம் வேற என்று “ மட்டும் சொல்லவே கூடாத வார்த்தைகள்.

பெரும்பாலும் குழந்தைகள் நாம் அறிவுரை சொல்லும் போது கேட்க மாட்டாங்க. ஆனா கதையில வர ஒரு பையனோ, பொண்ணோ இதை செய்றாங்கன்னா உடனே அதை ஆர்வமா செஞ்சு பார்க்க ஆசைப்படுவாங்க.. இதாங்க விஷயமே, குழந்தைகள் கிட்ட நீங்க நல்ல பழக்கங்களை வளர்க்கணும் நினைச்சா, அவங்களோட கற்பனைத் திறன் வளரனும்னு நினைச்சா, அவங்களோட பேச்சுத் திறன் மற்றும் மொழித் திறன் வளரனும்னு நினைச்சா, பாடங்களையும் விரும்பி படிக்கனும்னு நினைச்சா உடனே உங்க குழந்தைக்கு நிறைய கதைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுங்க.. அப்புறம் நீங்களே வித்தியாசத்தை பார்ப்பீங்க…

More Similar Blogs

    ஆடும் மயில் மற்றும் மலரும் உள்ளம், அழ.வள்ளியப்பா, என்.சி.பி.எச். வெளியீடு

    புகழ்பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல் வடிவில் உள்ள புத்தகம். குழந்தைகளே வாசித்து, பாடி மகிழக் கூடிய வகையில் இந்த புத்தகம் இருக்கும்.

    பாட்டி சொன்ன கதை

    கதைகள் என்று சொன்னாகே நம் பாட்டிகள் ஞாபகதுக்கு வருவார்கள். அந்த அளவுக்கு நம் வாழ்க்கையில் வேறூன்றி இருப்பவர்கள் நம் பாட்டிகள். நம் ஊரு பாட்டி சொன்ன கதைகள் எழுதியர் பாரதி. உங்கள் குழந்தையின் மழலைப்பருவத்தை மேலும் அழகாக்கும் இந்த புத்தகம்.

    தரங்கம்பாடி தங்கப் புதையல், பெ. தூரன், வானதி வெளியீடு

    சாகச கதைகள் என்றாலே சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான். பண்டைய துறைமுக ஊரான தரங்கம்பாடியில் இருக்கும் புதையலைச் சிறுவர்களே தேடிச் செல்லும் சாகசக் கதை. நிச்சயமாக சிறுவர், சிறுமியர் விரும்பு படிப்பார்கள்

    ஈசாப் நீதிக் கதைகள்

    கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் மிகவும் பிரபலமானவை. ஆமையும், முயலும் போட்டியிட்டு ஓடும் கதை தொடங்கி காக்கா, நரிக்கதை வரை இவை யாவும் வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இந்த கதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களாக தான் இருக்கும். குழந்தைகளுக்கு விளங்குக்கூடிய எளிமையான புத்தகம்.

    தெனாலிராமன் கதைகள்

    குழந்தைகளுக்கான நீதி கதைகளில் தவிர்க்க முடியாத புத்தகம் தெனாலி ராமன் கதைகள்தான். எல்லா புத்தக கடைகளிலும், ஆன்லைனிலும் இந்த புத்தகங்கள் கிடைக்கும். குழந்தைகளுக்கு சுவாரஸ்யத்தை தூண்டக்கூடிய அதே நேரத்தில் நீதிகளையும் தெரிந்து கொள்வார்கள்.

    விடுகதைப் புத்தகங்கள்

      குழந்தைகளின் அறிவை, சிந்திக்கும் திறனை வளர்ப்பதில் விடுகதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. அதோடு அவர்கள் ஜாலியாகவும் இதை படித்து மற்றவர்களுடன் விளையாடுவார்கள்.

    சிற்பியின் மகள், பூவண்ணன், வானதி வெளியீடு

    குழந்தைகளுக்கான வரலாற்று கதைகளை எழுதுவதற்குப் புகழ்பெற்ற நூல் ஆசிரியர், வரலாற்று பின்னணியில் சிற்பி ஒருவரைப் பற்றி எழுதிய கதை.

    புத்தகப் பரிசுப் பெட்டி, 15 மலையாள ஓவியக் கதைப் புத்தகங்கள், தமிழில்: உதயசங்கர், புக்ஸ் ஃபார் சில்ரன்

    எப்போதுமே குழந்தைகளுக்கு அவர்களைச் சுற்றியுள்ள விலங்குகள், பரிட்சையமான மனிதர்கள். பொருட்கள் ஆகியவற்றை கதாபாத்திரமாக சொல்லும் போது ஆர்வமாகவும், இடைவிடாமலும் கதையை கேட்பார்கள். அந்த வரிசையில் காக்கா, அணில், பூனை, நாய், குரங்கு, யானை போன்றவற்றைப் பற்றியும் கருத்தைக் கவரும் ஓவியங்களைக் கொண்ட 15 அருமையான புத்தகங்களின் தொகுப்பு இது. 

    பலே பாலு, வாண்டுமாமா, வானதி வெளியீடு

    வாண்டுமாமாவின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான பலே பாலு, சமத்து சாரு, அண்ணாசாமி போன்றவர்களின் ஜாலி யான சேட்டைகள் நிறைந்த படக்கதைகள் கொண்ட நூல். குழந்தைகளுக்கு படக்கதைகள் வெகுவாக கவரும்.

    குழந்தைகளுக்கான கதைகள்

    இந்த புத்தகத்தை எழுதியவர் மணிவாசன். 3 முதல் 18 வயது வரையிலான அனைத்து பருவத்தினருக்கும் ஏற்ற வகையில் இந்த புத்தகம் உருவாகி இருக்கிறது.

    ஆயிஷா, இரா.நடராசன், புக்ஸ் ஃபார் சில்ரன்

    அறிவியல் சார்ந்த கதைகள் மற்றும் குழந்தைகளின் மனப்பான்மையை சுட்டிக்காட்டும் கதைகள் எழுதுவதில் வல்லவர் இவர். உத்வேகம் ஊட்டும் ஆயிஷா என்று பள்ளிச் சிறுமியை அடிப்படையாகக் கொண்ட புகழ்பெற்ற கதை.

    எஸ்.சிவதாஸ் (ப. ஜெயகிருஷ்ணன்), அறிவியல் வெளியீடு

    குழந்தைகளுக்கு உயிரினங்களைப் பற்றி படிக்க சுவாராஸ்யமாக இருக்கும். உயிரினங்களைப் பற்றியும், அவற்றின் வாழ்க்கை பற்றியும் நாம் அறிந்ததும் புரிந்துகொண்டதும் குறைவு. இந்தப் புத்தகத்தை படித்து முடிக்கும் போது, எல்லா உயிரினங்களையும் நாம் நேசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

    இருட்டு எனக்குப் பிடிக்கும், ச. தமிழ்ச்செல்வன், அறிவியல் வெளியீடு

    குழந்தைகளுக்கு அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்து விஷயங்களைப் பற்றி எளிமையான முறையில் புரிய வைக்கும் புத்தகம். எட்டு கட்டுரைகளைக் கொண்ட இந்த புத்தகம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பரிசு.

    குட்டி இளவரசன், அந்த்வான் து செந்த் எக்சுபெரி, வெ.ஸ்ரீராம் - ச. மதனகல்யாணி, க்ரியா வெளியீடு

    குழந்தைகளுக்கு அற்புதங்களும், ஆச்சர்யங்களும் நிரம்பி இருந்தாக் நிச்சயமாக பிடிக்கும். அந்த வகையில் குழந்தைகளுக்கான சிறந்த புத்தகமாக சொல்லப்படும் உலகப் புகழ்பெற்ற நூல். குழந்தைகளின் உலகுக்கே அழைத்து சென்றுவிடும் இந்தப் புத்தகம்

    கனவினைப் பின்தொடர்ந்து, த.வெ.பத்மா (ஜெ. ஷாஜகான்), எதிர் வெளியீடு

    குழந்தைகளுக்கு வரலாறுப் பற்றி சொல்லிக் கொடுக்க அல்லது அந்த செய்திகளை சொல்ல பாடப்புத்தகம் மட்டும் பத்தாது. இந்த மாதிரி வரலாற்றுச் செய்திகளை கதை வடிவில் சொல்லும் புத்தகம் குழந்தைகளுக்கு நிச்சயம் வரலாறு மீது ஆர்வத்தைத் தூண்டும். 

    குழந்தைகள் புத்தகம் வாசிப்பதன் மூலம் தங்கள் அறிவை விரிவாக்குகிறார்கள். அவர்கள் தங்களோடு எளிதாக தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். கடினமான விஷயங்களையும் கதைகள் மூலம் எளிதாக கற்றுக் கொள்கிறார்கள். பெற்றோர் நம்முடைய பொறுப்பு அவர்களுக்கான புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது தான். இந்தப் புத்தகங்களை வாங்கி கொடுத்துப் பாருங்கள். உங்களுடைய கருத்துக்களை தவறாமல் கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.

    Reference - தி இந்து 

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs