3 வயதாகியும் குழந்தை சரிய ...
குழந்தைகளின் பேச்சு தாமதத்திற்கு கொரோனா தொற்று காலத்தின் பங்கு முக்கியமானது. சிறு குழந்தைகளிடையே இந்த பிரச்சனை அதிகரிப்பதை நிபுணர்கள் கவனித்துள்ளனர். குழந்தைகளில் முன்பு காணப்பட்டதை விட நடத்தைப் பிரச்சினைகள், வளர்ச்சிப் பிரச்சினைகள் ஆகியவற்றில் 2.5 மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் பேச்சு ஒலி குறைபாடுகள் (SSD), திணறல், அப்ராக்ஸியா, சமூக தொடர்பு இல்லாமை மற்றும் பிற குறைபாடுகள் போன்றவை சுமார் ஒன்பது சதவீத குழந்தைகளை பாதிக்கின்றன. ஏறக்குறைய ஐந்து முதல் எட்டு சதவீத பாலர் பள்ளிகளில் மொழி வளர்ச்சியில் தாமதங்களை சந்திக்கின்றனர். இது அவர்களின் அடுத்தடுத்த பள்ளி ஆண்டுகள் வரை தொடர்கிறது, அதே நேரத்தில் இரண்டு வயது குழந்தைகளில் 15-20 சதவீதம் பேர் வெளிப்படையான மொழி வளர்ச்சியில் தாமதமாக உள்ளனர்.
பயப்பட வேண்டாம்! குழந்தைகளின் பேச்சு திறனை ஊக்கப்படுத்தும் ஆக்டிவிட்டீஸ், நிபுணரின் உதவி மற்றும் பெற்றோரின் பங்களிப்போடு இந்தப் பிரச்சனையை எளிமையாக தீர்க்க முடியும். குழந்தையின் பேச்சு திறனில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? வீட்டிலேயே குழந்தைகளுக்கு எப்படி ஊக்கம் கொடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.
நீங்கள் விரும்புவதை விட அதிக நேரம் திரையில் இருப்பதால் பேச்சு திறன் பாதிக்கிறது. முகக்கவசம் அணிவதன் மூலம் முகபாவனைகளை குழந்தைகளால் கவனிக்க முடியவில்லை. அதிக நேரம் முகமூடி அணிந்த பெரியவர்களுடன் பேசுவதற்கு கடினமானது. இது ஆரம்பத்தில் இருந்தே, பேச்சு வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
குழந்தைகளில் முன்பு காணப்பட்ட நடத்தை பிரச்சினைகள், வளர்ச்சிப் பிரச்சினைகள் 2.5 மடங்கு அதிகரித்துள்ளன. முன்பெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற அதாவது நடத்தை பிரச்சினைகள், மொழி வளர்ச்சி, பேச்சு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளை மருத்துவர்கள், நிபுணர்கள் (வாரத்திற்கு ஒரு முறை) பார்க்கிறார்கள்.
பேச்சு திறன், மொழி வளர்ச்சி, எழுதும் திறன் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டால், அறிகுறிகள் மூலம் பெற்றோர்கள் அடையாலம் காண முடியும். அதற்காக பெற்றோர்கள் குழந்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியம்.
பேச்சு தாமதம் உள்ள பல குழந்தைகளுக்கு வாய்வழி-மோட்டார் பிரச்சனைகள்(oral-motor) உள்ளன. பேச்சுக்கு ஆதாரமான மூளையின் பகுதிகளில் சிக்கல் இருக்கும்போது இவை நிகழ்கின்றன. இது பேச்சு ஒலிகளை உருவாக்க உதடுகள், நாக்கு மற்றும் தாடையை ஒருங்கிணைப்பதை கடினமாக்குகிறது. இந்த குழந்தைகளுக்கு உணவளிக்கும் பிரச்சினைகள் போன்ற பிற பிரச்சனைகளும் இருக்கலாம்.
உடல் செயல்பாடு இல்லாதது, தனிமையில் இருப்பது, அதிக திரை நேரம் ஆகியவை வளர்ச்சி சிக்கல்களுக்கு காரணமாகின்றது. சரியான ஆலோசனை மற்றும் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை முன்கூட்டியே அடையாளம் கண்டால் தாமதமான வளர்ச்சியுடன் வளரும் குழந்தையிடம் முன்னேற்றம் கொண்டு வர முடியும். இப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்க வேண்டும், இயல்பான வளர்ச்சிக்கான குழு நடவடிக்கைகள் மிக அவசியம்.
பேச்சு தாமதமாவது காது கேளாமையும் காரணமாக இருக்கலாம் என்பதால், உங்களின் குழந்தை சாதாரணமாக பதிலளிக்கவில்லை என்றால், செவிப்புலன் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். சந்தேகம் இருந்தால், பேச்சு மொழி சிகிச்சை நிபுணரை அணுகவும்.
எவ்வளவு சீக்கிரம் இந்தப் பிரச்சனையை அடையாளம் கண்டு குழந்தைக்கு உதவுகிறோமோ அந்த அளவுக்கு அவர்களின் பேச்சு அல்லது மொழிப் பிரச்சனையால் ஏற்படக்கூடிய சுயமரியாதை குறைவு, நடத்தைப் பிரச்சனைகள் போன்ற மற்ற பாதிப்பு தரும் விஷயங்களையும் குறைக்க முடியும்.
உங்கள் குழந்தையின் பேச்சு தாமதத்திற்கு கொரோனா தொற்றுநோய் பங்களித்திருக்கலாம். ஆனால் பேச்சு அல்லது மொழி தாமதத்தை கண்டறிவது மற்றும் மொழி வளர்ச்சியைத் தூண்டுவதற்கு வீட்டில் உங்கள் குழந்தையுடன் இணைந்து பணியாற்றுவதற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையின் மொழி மற்றும் பேச்சு திறனில் நல்ல முன்னேற்றம் கொண்டு வர முடியும்.
Be the first to support
Be the first to share
Comment (0)