சோனம் கபூர் தனது கர்ப்ப க ...
சமீபத்தில் சோனம் கபூர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில் வீங்கிய பாதங்களின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், மேலும் கர்ப்பம் சில சமயங்களில் அழகாக இல்லை என்று அதில் கமெண்ட் பண்ணியுள்ளார்.
சோனம் கபூர் மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அப்போதிருந்து, அவர் தனது கர்ப்ப பயணத்தை இன்ஸ்டாகிராமில் ஆவணப்படுத்தி வருகிறார். அவர் தனது மகப்பேறு படப்பிடிப்பு படங்கள் மற்றும் தனது பேபிமூன் புகைப்படங்களையும் வெளியிட்டார். இந்த ஜோடி லண்டனில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியது
சோனம் கபூருக்கு மட்டுமில்லை, இந்த கர்ப்ப காலங்களில் பெண்களின் உடல்நிலையில், மனநிலையில் பல்வேறு மாற்றங்களை சந்திப்பார்கள். சில மாற்றங்கள் வலி உள்ளதாகவும், அசொளகரியத்தையும் ஏற்படுத்தும். ஆனால் தானாகவே அது சரியாகிவிடும். அல்லது மகப்பேறு மருத்துவரின் உதவியோடு சரி செய்யலாம். இந்தப்பதிவில் கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏன் வருகிறது? எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்..
கர்ப்ப காலத்தில் உடலில் பல வித மாற்றங்கள் நிகழ்வது போல் கால் வீக்கமும் ஒன்று. கவலை கொள்ள வேண்டாம். உடலில் அதிகப்படியான திரவம் தங்குவதாலும் ஏற்படலாம். முகம் அல்லது விரல்களில் கூட வீக்கம் ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் இருக்கும் நீங்கள் இதை எவ்வாறு சமாளிக்க முடியும் என்பதை அறியலாம்.
கர்ப்பிணி பெண்களில் பாதி பேர் இதை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லலாம். முக்கியமாக இரண்டாம் ட்ரைமெஸ்டரில் அல்லது மூன்றாம் ட்ரைமெஸ்டரின் பிற்பகுதியில் ஏற்படலாம். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். கர்ப்பிணிகள் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும், இரவில் நன்றாக தூங்க வேண்டும். நின்றுகொண்டே பணி செய்கிறவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு.
மேலும் கர்ப்ப காலத்தில் உங்களையும் உங்கள் குழந்தையையும் பாதுகாப்பதற்காக உடல் அதிக திரவத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இந்த அதிகப்படியான திரவம், உங்கள் உடலில் உள்ள கருப்பையில் அழுத்தம் கொடுத்து வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
உங்கள் கைகளில், கால்களில், முகத்தில் அதிகப்படியான வீக்கம் ஏற்பட்டால், அதுவும் நாள் முழுவதும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனென்றால் ப்ரீ எக்லம்சியா (preeclampsia) எனப்படுவது அதிக பிபி, அதிக எடை அதிகரிப்பு மற்றும் தலைவலி ஆகியவற்றுடன் இருக்கும். உங்கள் கெண்டைக்கால் சிவப்பு நிறமாகவும், வீக்கமாகவும் தெரிந்தால் நரம்பில் இரத்தக் கட்டாக இருக்கலாம்.
கர்ப்ப காலத்தில் வீக்கம் ஏற்படுவது பொதுவான விஷயம் என்றாலும் உங்கள் மருத்துவரை பார்க்கும் போது இதைப் பற்றி பேசி ஆலோசனை பெறுவது உங்களுக்குள் ஏற்படும் தேவையற்ற அச்சத்தை தவிர்க்க உதவும்.
தரையில் அமரும்போது கால்களை குறுக்காக மடக்கி உட்கார வேண்டாம். இரவில் உறங்கும்போது கால்களுக்குத் தலையணை வைத்துக் கொண்டாலும் கால் வீக்கம் குறையும். இது போன்று மேலும் சில குறிப்புகளை பார்க்கலாம்.
ஓய்வு அவசியம் – கர்ப்ப காலம் என்பதால் எப்போதும் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவ்வப்போது சிறு சிறு இடைவெளிகள் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வேலை நேரத்தில் அதிகமாக அமர்ந்திருப்பதற்கு பதில் சிறிது நடைப்பயணம், எழுந்து நிற்பது போன்றவற்றை செய்யலாம். கால்களை கீழே அதிக நேரம் தொங்கவிடாமல் நாற்காலி அல்லது ஏதாவது மீது காலை வைத்துக் கொள்ளவும்.
காலுக்கான சரியான காலணி – கர்ப்ப காலத்தில் காலுக்கும் வசதியான காலணிகளை வாங்குவது அவசியம். உங்கள் கால்கள், கால்விரல்கள், குதிகால் ஆகியவை மிகுந்த மன அழுத்தத்தில் இல்லாதபோது அசொள்கரியம் ஏற்படுவது குறைகிறது.
உடற்பயிற்சி - நடைபயிற்சி, நீச்சல், கர்ப்ப யோகா - இவை அனைத்தும் உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன. உடற்பயிற்சி முறையை தேர்ந்தெடுக்கும் முன் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். ஏனென்றால் உங்கள் உடலின் நிலையை பற்றி அறிந்து பரிந்துரைப்பார்.
நிறைய தண்ணீர் அருந்துங்கள் – நிறைய தண்ணீர் அருந்துவதன் மூலம் உங்கள் உடலில் நீச்சத்து குறையாமல் இருக்கும். இதன் மூலம் கர்ப்ப கால வீக்கத்தை குறைக்கவும், வராமல் தடுக்கவும் முடியும். உடலில் நீர்வறட்சி ஏற்படாதவாறு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
ஆரோக்கியமான உணவு - உங்கள் கர்ப்பம் முழுவதும் ஆரோக்கியமான உணவை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். துரித உணவு, குறிப்பாக நிறைய உப்பு கலந்த உணவை தவிர்க்கவும். ஆரஞ்சு, முலாம்பழம் மற்றும் சுண்ணாம்பு சத்து போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.
வீட்டு வைத்தியம் – வீக்கத்தை முற்றிலுமாக குறைக்குமா என்பது தெரியாது. ஆனால் நிச்சயமாக உங்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும். செய்து பாருங்கள்
கர்ப்பம் என்பது பல குழப்பமான உடல் மாற்றங்களை எதிர்கொள்ளும் நேரம், உங்கள் உடலுக்குத் தேவையான அதிக கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் காலில் உள்ள வீக்கம் வருத்தத்தை அளித்தாலும், அமைதியாக அமர்ந்து இதற்கான தீர்வுகளை முயற்சிக்கவும். நீங்கள் விரைவில் இதிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்!
Be the first to support
Be the first to share
Comment (0)