குழந்தைகளின் ஊட்டச்சத்துக ...
பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் சிறுதானியம் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைத்தார். எனவே விவசாயிகள் அனைவரும் சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தினைகள் அவர்களுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை விளக்க, சிறு விவசாயிகள், சிறுதானிய பயிற்கள் வேகமாக வளர்வதோடு குறைந்த தண்ணீரே தேவைப்படும். தவிர, சிறுதானிய வைக்கோல் சிறந்த தீவனமாகவும் கருதப்படுகிறது.
சென்னையை சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் எழுதிய கடித்தத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டாக வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாடப்படுவதால் இதைப்பற்றி பேசுமாறு வலியுறுத்தினார் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
சிறுதானிய நன்மைகள் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வாறு கொடுக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
In less than 5 months we will mark the International Millet Year. As a large producer of millets, let’s make the Millet Year a resounding success! #MannKiBaat pic.twitter.com/bMlvvzkp76
— Narendra Modi (@narendramodi) August 28, 2022
பண்டைய காலம் தொட்டு நம் முன்னோர்கள் தினசரி வாழ்வில் சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு வந்தார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு சிறுதானியம் மூலம் எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றது. குழந்தைக்கு 6 மாதம் முடிந்தவுடன் திட உணவு கொடுக்க தொடங்கிறோம், அப்போதே நாம் சில உணவுகளை கொடுக்க ஆரம்பிக்கலாம். எளிதில் ஜீரணமாகக்கூடியது மற்றும் குழந்தைகளின் ஆரம்ப வளர்ச்சிக்கு பல வகையில் உதவுகிறது.
இந்தியாவில் கிடைக்கும் மிகவும் பொதுவான வகைகள் வெள்ள சோளம், ராகி, சாமை, கம்பு, வரகு மற்றும் குதிரைவாலி அரிசி ஆகும். மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, டிரிப்டோபான், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.
வரகு, சோளம், சாமை, ராகி, கம்பு, தினை,குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க முடியும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கோதுமை மற்றும் அரிசியைக் குறைத்து இவற்றை நமது உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.
சிறுதானிய உணவில் புரதம் மற்றும் பல வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது
க்ளூட்டன் ஃப்ரீ. சீரான செரிமான பண்புகளைக கொண்டுள்ளதால் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும்
பாஸ்பரஸ் எலும்புகள் வலுவாக உதவுகிறது மற்றும் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம், உடலை சரியாக வேலை செய்ய உதவுகிறது.
இரும்பின் சிறந்த மூலமாகும். குழந்தைகளின் இரத்த சோகையை குணப்படுத்துகிறது
சிறுதானியத்தில் அதிகம் நார்ச்சத்து உள்ளது, இது குழந்தையின் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
உடலில் செரோடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. செரோடோனின் உங்கள் குழந்தையின் மனநிலையை அமைதிப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது.
இது ஒரு சிறந்த காலை உணவு, ராகியில் கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது; இது ஜீரணிக்க எளிதானது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது.
செய்முறை
சிறு தானிய நூடுல்ஸ் இப்போது ஆர்கானிக் கடைகளில் கிடைக்கிறது. இதில் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம், கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன, இது சந்தையில் கிடைக்கும் செயற்கையான சுவை கொண்ட நூடுல்ஸுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது. இது ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் சிறந்த உதாரணம்.
செய்முறை
அதை இறக்கி, சிறிது ஆறவிடவும்
சிறு குழந்தைகளுக்கான தினை குக்கீகள் செய்முறை
வழிமுறைகள்
உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்
Be the first to support
Be the first to share
Comment (0)