ப்ளே ஸ்கூல்கள் திறப்பு: ...
தமிழகத்தில் நர்சரி மற்றும் ப்ளே ஸ்கூல்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மூடியிருந்தது. பிப்ரவரி 16, 2022 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து நர்சரி மற்றும் ஸ்கூல்களும் திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதித்துள்ளது. மாநிலத்தில் உள்ள கோவிட்-19 நிலைமையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இப்போது மாநிலத்தில் கோவிட்-19 வழக்குகள் குறைந்து வருவதால், படிப்படியாக பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள், கல்லூரிகள் பிப்ரவரி 1, 2022 முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு சொல்லலம்.
நானும் ஒரு பெற்றோராக என் குழந்தையை இப்போது இருக்கும் சூழ்நிலையில் எப்படி பள்ளிக்கு அனுப்புவது? எப்படி தயார்ப்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். நான் என் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் போது எந்தெந்த விஷயங்களில் ஆதரவாக இருக்க முடியும் என்று திட்டமிடும் போது எனக்கு தோன்றிய சவால்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
பள்ளிக்கு செல்வது உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் ஒரு பெரிய மைல்கல். இந்த மாற்றம் குழந்தைக்கு பெரிய மாற்றம் தான். ஆனால் குழந்தைகள் முறையான கற்றல் பயணத்தை தொடங்குவதும் உற்சாகமானது. இந்த மாற்றத்தை சீராகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற உதவும் 12 வழிகள் இங்கே உள்ளன.
பெரும்பாலான குழந்தைகள் புதிய இடத்திற்கு செல்வதையும், இதுவரை பார்த்திராத மக்களை சந்திப்பதையும் நினைத்து கவலைப்படுகிறார்கள். பள்ளியைப் பற்றிய உற்சாகமான மற்றும் நேர்மறையான அணுகுமுறையை வளர்ப்பதன் மூலம் குழந்தையிடம் பள்ளி குறித்த கவலையை போக்கலாம்.
கோவிட்-19 மற்றும் பிற நோய்களில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, சோப்புடன் அடிக்கடி கை கழுவுவதை ஊக்குவிப்பதாகும். பள்ளியில் குழந்தைகள் தங்கள் வகுப்பறைகளுக்கு அருகில் கை கழுவ ஊக்கப்படுத்துங்கள். இது ஒரு பயமுறுத்தும் உரையாடலாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கற்றலை வேடிக்கையாக மாற்ற, அவர்களுக்குப் பிடித்த பாடலுடன் சேர்ந்து பாடுங்கள் அல்லது ஒன்றாக நடனமாடுங்கள்.
இருமல் அல்லது தும்மலை அவர்களின் முழங்கையால் மறைப்பது எப்படி என்பதை குழந்தைகளுக்கு நீங்கள் காட்டலாம், மேலும் அவர்களுக்கு காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் இருப்பது போல் உணரத் தொடங்கினால் வகுப்பு ஆசியரிடம் சொல்ல சொல்லுங்கள்.
கொரோனா காரணமாக குழந்தைகள் 3 முதல் 5 வயது வரை ) அதிகமாக வீட்டிலிருந்தே படித்தார்கள், சில குழந்தைகள் வகுப்பில் மற்ற குழந்தைகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைப் பற்றி கவலைப்படுகிறிர்களா!
கவலை வேண்டாம்.. பல குழந்தைகள் லாக்டவுன் காலத்தில் தொடர்ந்து கற்க சிரமப்படுகின்றனர். அவர்கள் பள்ளிக்குத் திரும்புகையில், இதை எதிர்கொள்வதைப் பற்றி அவர்கள் பயப்படலாம், குறிப்பாக மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில். இந்த நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் அவர்களின் கற்றல் விளைவுகளை விட புதிய இயல்புநிலைக்கு அவர்களை மாற்றுவது முக்கியம். குழந்தைகள் நேசிக்கப்படுவதையும் ஆதரவையும் உணரும்போது அவர்கள் சிறப்பாகக் கற்றுக்கொள்வார்கள். உங்கள் குழந்தையின் ஆசிரியரிடம் கலந்து பேசி உங்கள் குழந்தையின் கற்றல் திறன் சிறப்பாக அமைய உதவலாம்.
பள்ளியின் முதல் நாளுக்கு எப்படி தயாராவது என்பதை அறிய, பள்ளி நாள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் குழந்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பள்ளியின் வழக்கமான அட்டவணையைப் பற்றி உங்கள் பிள்ளைக்கு விளக்கவும். உங்கள் குழந்தையுடன் வகுப்பில் யார் இருப்பார்கள், நீ என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்பார்கள் என்று குழந்தையிடம் சொல்லுங்கள். உங்கள் பிள்ளை உட்கார்ந்து அறிவுரைகளை கேட்பதைப் பழக்கப்படுத்துங்கள். இது வகுப்பறையில் நீண்ட நேரம் உட்கார்ந்து ஆசிரியரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதற்கு தயார்ப்படுத்தும்.
உங்கள் குழந்தை வகுப்புகளுக்குள் இருக்க பழகுவதற்கு உதவ, ரோல் ப்ளே விளையாட்டைப் பயன்படுத்தவும். கதை நேரம், ரைம்ஸ் பாடுதல் மற்றும் தூக்க நேரம் போன்ற பல்வேறு நடைமுறைகளை மாறி மாறி நடிக்கவும். நீங்கள் பாத்திரங்களை மாற்றி உங்கள் குழந்தையை ஆசிரியராக அனுமதிக்கலாம். இது உங்கள் பிள்ளைக்கு பள்ளியை ஒரு வேடிக்கையான இடமாக நினைக்கவும், முதல் நாள் கவலையை குறைக்கவும் உதவும்.
பள்ளியில் குழந்தைகள் தாங்களாகவே கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தையை வீட்டிலேயே பழக்குங்கள். டாய்லெட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், கதவு பூட்டுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை கற்றுக் கொடுங்கள். டாய்லெட்டை விட்டு வெளியேறும் முன் உடை சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்ய சொல்லுங்கள். மேலும், கழிப்பறையை கழுவவும், பயன்பாட்டிற்குப் பிறகு கைகளை கழுவவும் குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகளின் தூக்கப் பழக்கம் மற்றும் தூக்கத்தின் தரம் ஆகியவை லாக்டவுனின் போது மாறியிருக்கலாம். இதனால் பள்ளி வழக்கத்திற்கு திரும்புவது கடினமாக இருக்கலாம். பள்ளி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, உங்கள் குழந்தையை சீக்கிரம் தூங்க செய்து, சீக்கிரம் எழுந்திருக்க பயிற்சி அளிக்கவும். இந்த வழியில், குழந்தையின் தூக்கம் வழக்கமானதாக மாறும், மேலும் பள்ளிக்குச் செல்லும் போது எரிச்சல், வம்பு மற்றும் சோர்வு இல்லாமல் இருப்பார்கள்.
உங்கள் குழந்தை தனது உடைமைகளை கவனித்துக்கொள்வது முக்கியம் என்பதை புரிய வைக்கவும். புத்தகங்கள், பென்சில்கள், அழிப்பான்கள், கிரேயான்கள் போன்றவற்றைப் பயன்படுத்திய பிறகு மீண்டும் அவளது பையில் வைக்க கற்றுக்கொடுங்கள். மேலும், ஸ்நாக்ஸ் சாப்பிட்ட பிறகு, பாக்ஸை எப்படி பேக் செய்து பைக்குள் வைப்பது என்று கற்றுக் கொடுங்கள்.
பள்ளிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் லேபிளிடுவதற்கு உங்கள் குழந்தை உங்களுக்கு உதவட்டும். இதன் மூலம், குழந்தை தனது பெயரை அச்சில் அடையாளம் காணப்பழகிக் கொள்ளும், மேலும் எந்தப் பொருட்கள் தனக்கு சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளும்.
உங்கள் குழந்தைக்கு பள்ளிக்கு செல்லும் முன் கிடைத்த அனுபவம் வேறு. அவர்கள் வீட்டீல் என்ன கற்றுக் கொண்டார்கள் என்பதை தெரிந்து கொள்வது சவாலாக இருக்கலாம்.
பள்ளிக்குச் செல்வதைப் பற்றி உங்கள் பிள்ளை எப்படி உணர்கிறாள் என்று கேளுங்கள். பயம் அல்லது கவலைகளை நிராகரிக்க வேண்டாம். பள்ளியைப் பற்றிய உரையாடல்கள் இருக்கும்போது உங்கள் குழந்தையின் எதிர்வினையை குறித்துக்கொள்ளவும். உங்கள் குழந்தை உற்சாகமாக அல்லது ஆர்வத்துடன் செயல்படுகிறதா என்பதைப் பார்க்கவும். உங்கள் குழந்தையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும்.
பள்ளியைப் பற்றி மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான முறையில் சுட்டிக்காட்டுங்கள். புதிய நண்பர்களை உருவாக்குவது மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது எப்படி மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களுக்கு பள்ளியில் எப்படி வேடிக்கையாக இருந்தது என்பதைப் பற்றிய கதைகளையும் உங்கள் குழந்தைக்கு சொல்லலாம்.
எல்லா பெற்றோருக்கும் மிக பெரிய கவலையாக இருப்பது முதல் முறை அவர்களின் குழந்தையை பள்ளிக்குள் விட்டு விடைபெறும் போது தோன்றும் உணர்வு. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் கடினமாக இருக்கலாம்! தயவு செய்து உங்கள் குழந்தையைப் பள்ளியில் விட்டு செல்லும்போது, விடைபெறாமல் வெளியே பதுங்கிச் செல்லாதீர்கள், ஏனெனில் இது உங்கள் குழந்தை மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.
அதற்கு பதிலாக, அந்த நேரம் வரும்போது, உங்கள் பிரிவை விரைவாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க முயற்சிக்கவும் - விரைவில் நீங்கள் ஒருவரையொருவர் சந்திப்பீர்கள் என்று உங்கள் குழந்தைக்கு உறுதியளிக்கவும். உங்கள் குழந்தைக்கு ஆறுதல் அளிக்க உதவும் ஒரு சிறப்பு வழக்கத்தை நீங்கள் செய்யலாம்: ஒன்றாக ஒரு பாடலைப் பாடுங்கள் அல்லது சிறப்பு கைகுலுக்கலை செய்து குட் -பை சொல்லுங்கள்
குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உணர்ச்சிகளை எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள். எனவே உங்கள் தனிப்பட்ட மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம்.
குழந்தைகள் முதல் முறையாக பள்ளிக்குச் செல்வதால் பதற்றமடையும். சில குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபோபியா கூட இருக்கும். பெற்றோரின் சிறிய உதவியால், குழந்தைகள் இந்த பயத்தைப் போக்கலாம் மற்றும் கற்றலை வேடிக்கையாக மாற்றலாம். பெரியவர்கள் அல்லது மற்றொரு குழந்தை அசௌகரியத்தை ஏற்படுத்தும் போது விஷயங்களை எவ்வாறு கையாள்வது என்பதை உங்கள் குழந்தைக்கு விளக்குங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)