1. நவராத்திரி ஐந்தாம், ஆறாம் ...

நவராத்திரி ஐந்தாம், ஆறாம் நாள் பிரசாத வகைகள்

All age groups

Bharathi

1.9M பார்வை

2 years ago

நவராத்திரி ஐந்தாம், ஆறாம் நாள் பிரசாத வகைகள்
Festivals
Special Day

நவராத்திரியின் ஐந்தாவது நாளான இன்று நாம் வழிபடவேண்டிய தெய்வம் மகேஸ்வரி. மகேஸ்வரனின் சக்தி என்பதால் இவள் மகேஸ்வரி என்றும், கந்தனின் அன்னை என்பதால் ஸ்கந்த மாதா என்றும் அழைக்கப்படுகிறாள்.

நவராத்திரி ஐந்தாம் நாள் 

More Similar Blogs

    கோலம்      - கடலை மாவு வைத்து பறவைகள்

    ராகம்.         - பந்துவராளி

    மலர்            - பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்

    பழம்            - மாதுளை

    நைவேத்தியம் - தயிர் சாதம்

    தேவையான பொருட்கள் :

    • பச்சரிசி - 1 கப்
    • பால் - அரை கப்,
    • புளிக்காத புதிய தயிர் - ஒன்றை கப்,
    • இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது - 1 டீஸ்பூன்,
    • வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
    • பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
    • கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிது,
    • கடுகு - அரை டீஸ்பூன்,
    • மிளகாய் வற்றல் - 3,
    • பொடியாக நறுக்கிய முந்திரி - 4 டேபிள் ஸ்பூன்,
    • திராட்சை - 20,
    • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
    • உப்பு  - தேவைக்கு.

    செய்முறை :

    1. கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
    2. சாதத்தை குழைவாக வேக வைத்து கொள்ளவும்.
    3. ஒரு பாத்திரத்தில் சூடான சாதத்தை போட்டு அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
    4. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடனாதும் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் தாளிதக் கலவை, சேர்த்து நன்றாக கலக்குங்கள்.

    அருமையான ஸ்பெஷல் தயிர் சாதம் ரெடி.

    நவதானிய சுண்டல்

    தேவையான பொருட்கள் :

    • வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, காராமணி, பாசிப்பயிறு, கொள்ளு, மொச்சை, சிவப்பு சோயா, ராஜ்மா, காய்ந்த பட்டாணி  - தலா 4 டேபிள்ஸ்பூன் அல்லது சமஅளவு,
    • கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
    • காய்ந்த மிளகாய் - 2
    • எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
    • பெருங்காயத்தூள் - அரை சிட்டிகை

    அரைக்க:

    • தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    • காய்ந்த மிளகாய் - 4,
    • இஞ்சி - சிறிய துண்டு.

    செய்முறை:

    1. இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
    2. தானியங்கள் அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து 2 மணிநேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
    3. அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
    4. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வேகவைத்த தானியம், அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும்.
    5. பச்சை வாசனை போனதும், இறக்கவும்.

    சத்தான சுவையான நவதானிய சுண்டல் ரெடி..

    நவராத்திரி ஆறாவது நாள்

    ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. தேங்காய் சாதம் படைத்து வணங்கலாம்.

    கோலம்     - கடலை மாவு வைத்து தேவியின் நாமம்

    ராகம்.          - நீலாம்பரி

    மலர்            - செம்பருத்தி

    பழம்            - ஆரஞ்சு

    நைவேத்தியம் - தேங்காய் சாதம்

    தேவையான பொருள்கள்:

    • பச்சரிசி - 2கப்
    • தேஙகாய் - 1மூடி
    • உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
    • கடலைபருப்பு - 1ஸ்பூன்
    • காய்ந்த மளகாய் - 2
    • கடுகு - 1 ஸ்பூன்
    • தேங்காய் எண்ணெய் ,உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    1. தேங்காயை துருவி வைத்து கொள்ளவும். சாதத்தை முக்கால் பாகம் வெந்ததும் வடித்து கொள்ளவும்.
    2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு,கடலைபருப்பு,காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி ஆறவைத்த சாதம், உப்பு,தேங்காய் சேர்த்து நன்கு கிளரி இறக்கவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.

    பச்சை பயறு சுண்டல்

    தேவையான பொருட்கள்

    • 1கப் பச்சை பயறு
    • 1 வெங்காயம்
    • 1/2ஸ்பூன் சாம்பார் தூள்
    • தேவையானஅளவு உப்பு
    • சிறிதளவுஎண்ணெய்
    • 1/2ஸ்பூன் கடுகு
    • 1 ஸ்பூன் கடலை பருப்பு

    செய்முறை

    1. பச்சை பயிரை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

    2. பின் ஒரு பாத்திரத்தில் பச்சை பயறு சிறிது தண்ணிர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.

    3. பின் நன்கு வெந்ததும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு வெங்காயம் உப்பு சேர்த்து தாளித்து பின் சாம்பார் தூள் சேர்த்து வதக்கி அதில் பச்சை பயிரை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

    நவராத்திரி ஐந்தாம், ஆறாம் நாள் பிரசாத வகைகளை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். உங்கள் கருத்து எங்களின் அடுத்த பதிவுகளை சிறப்பாக செய்ய ஊக்கமாக இருக்கும்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)