1. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ப ...

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்வோம்

All age groups

Jeeji Naresh

3.0M பார்வை

4 years ago

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்வோம்

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட், கோவேக்ஸின் என இரண்டு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வந்துள்ளது. கோவிஷீல்ட் போன்றே இதுவும் செயல்படும். இதுவரை இந்தியாவில் பத்துகோடி பேர்கள் கோவிஷீல்ட், கோவேக்ஸின் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தி லேன்சட் என்ற மருத்துவ ஆய்விதழில் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்பாடு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள், 91.6 சதவிகிதம் செயல்திறன் மிக்கதாக இது இருக்கிறதென்று கூறுகின்றன. ஃபைஸர் உட்பட மற்ற பல தடுப்பூசிகளோடு இதை ஒப்பிடும்போது, இதுவே அதிக செயல் திறனோடு இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

More Similar Blogs

    ஸ்பூட்னிக் வி - பற்றி தெரிந்து கொள்வோம்:

    ஸ்பூட்னிக் வி என்பது கோவலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 க்கான அடினோ  வைரஸ் திசையன் தடுப்பூசி ஆகும். கொரோனா வைரஸின் ஒரு சிறு பகுதியை நம் உடலில் எடுத்து செல்ல, ஒரு சளி வைரஸைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காத வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்.

    கொரோனா வைரஸ் மரபணுக்கள் பாதுகாப்பாக நம் உடலுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே நாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலக் குறைவுக்கு ஆளாகாமல், நம் உடல், கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து, அதனோடு சண்டையிட கற்றுக் கொள்கிறது. இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட பின், நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம், கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு என்றே பிரத்யேகமாக ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகிறது. இதனால் கொரோனா வைரஸ் நம் உடலுக்குள் வரும்போது அதனோடு சண்டை போட நோய் எதிர்ப்பு மண்டலம் தயார் நிலையில் உள்ளது.

    பக்க வளைவுகளும் இதன் பாதுகாப்பும்:

    ஸ்புட்னிக் V தடுப்பூசி எந்த அளவுக்கு செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவுக்கு பாதுகாப்பானது, பெரிய பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என்பது பரிசோதனையில் காணப்பட்டது.

    பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வரும் காய்ச்சல், சோர்வு, கை வலி போன்ற சில பக்க விளைவுகள், இந்த தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டாலும் ஏற்படலாம். ஆனால் இந்த தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட குழுவினர்களில் யாருக்கும் மிக மோசமாக உடல் நலக் குறைவு ஏற்படவில்லை. அதே போல இறப்பும் ஏற்படவில்லை.

    இதன் விலை நிலவரம்:

    டாக்டர் ரெட்டியின் மூத்த தலைமையின் உறுப்பினர்கள், தடுப்பூசி ஒரே விலையில் - 948/- மற்றும் 5% ஜிஎஸ்டி - அரசு மற்றும் தனியார் துறைக்கு வழங்கப்படும் என்றார்.  நுகர்வோரைப் பொறுத்தவரை, மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்களையும் நிர்வகிக்கும்.  தடுப்பூசி மைனஸ் 18 டிகிரி செல்சியஸில் சேமிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

    இந்தியாவிலேயே ஸ்புட்னிக் V தடுப்பூசி தயாரிப்பு

    இந்தியாவில் ஸ்புட்னிக் வி மூன்றாவது தடுப்பூசியாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இதுவரை 59 நாடுகள் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருப்பதாக இதைத் தயாரிக்கும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஜூலை மாதம் முதல் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் மொத்தமாக 15.6 கோடி டோஸ்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எனவும் இதற்காக டாக்டர். ரெட்டீஸ் லேப் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

    உலக சுகதார நிறுவனம் சொல்லும் அறிவுரைகள்:

    WHO இன் கூற்றுப்படி, "COVID-19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்க, உற்பத்தி செய்ய மற்றும் வரிசைப்படுத்த உலக சுகாதார அமைப்பு வெவ்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

    எவ்வாறாயினும், நாம் தொடர்ந்து முகமூடிகளை அணிந்துகொள்வது, கைகளை சுத்தம் செய்வது, உட்புறத்தில் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்வது, உடல் ரீதியான இடைவெளி ஏற்படுத்துதல் மற்றும் கூட்டத்தைத் தவிர்ப்பது போன்றவற்றை WHO வலியுறுத்துகிறது.

    தடுப்பூசிகள் நோயிலிருந்து மட்டுமல்ல, தொற்று மற்றும் பரவுதலிலிருந்தும் எவ்வளவு பாதுகாக்கின்றன என்பது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. இப்போதைகு இந்த தொற்றை எதிர்கொள்ள நம்மிடம் உள்ள தடுப்பு முறைகள் முகமூடி, கைகளை அடிக்கடி சானிடைஸர் போட்டு கழுவுதல், தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பழக்கம்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs