1. மார்கழி மாதத்தின் சிறப்பு ...

மார்கழி மாதத்தின் சிறப்புகளை அறிவோம்

All age groups

Bharathi

2.0M பார்வை

2 years ago

மார்கழி மாதத்தின் சிறப்புகளை அறிவோம்
Festivals

மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார்.மார்கழி என்றாலே நியாபகம் வருவது பனிக்காலம், கலர் கோலங்கள், பஜனைகள், திருப்பாவை , திருவெம்பாவை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இருந்தாலும் ஏன் இந்த மார்கழி மாதம் சிறப்பான மாதம் என்றும் மேலும் சில பொதுவான தகவல்களையும் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மார்கழி மாதத்தின் சிறப்புகள்

More Similar Blogs

    தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

    மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.

    மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஓசோன் படலத்தில் இருந்து வரும் சுத்தமான காற்றைப் போல் வேறு எந்த மாதத்திலும் நமக்கு கிடைப்பதில்லை. இம்மாதத்தில் செய்யும் இந்த ஒரு தானம் நமக்கு பெரும் பாக்கியத்தை சேர்க்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது.

    பொதுவாகவே நம் உடலில் 80% ஆக்சிஜனும், 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நவீன யுகத்தில் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களால் நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை விரட்டி அடிக்க போராட வேண்டி உள்ளது. இதனால் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போய் விடுகிறது. இம்மாதத்தில் நீங்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைத்து ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதனால் நோய் தொற்றுகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம்.

    மார்கழி மாதங்களில் இரவு நேரத்தில் நீங்கள் கோலம் போடுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதிகாலையில் கிடைக்கும் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காகவே வாசலில் கோலம் போடப்படுகிறது. அதனை சோம்பேறித்தனப்பட்டு இரவே போட்டு வைப்பதால் ஒரு பலனும் இல்லை. அதிலும் கோலத்தை போடுவதில் கூட சிறு தானம் இருக்கின்றது. கோலமானது பச்சரிசியில் போடப்பட வேண்டும். அதை சாப்பிட வரும் எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மூலம் நமக்கு புண்ணியம் சேரும்.

    இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

    இம்மாதத்தில் 63 நாயன்மார்களில் வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகிறது.

    1. பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
    2. ரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில் தோன்றியோர் ஆவர்.
    3. மார்கழியில் கோலம் இட்டு சாண பிள்ளையார் பிடித்து கோலத்தில் வைத்து பிள்ளையார் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
    4. படி உற்சம் நடத்தி முருப்பெருமான் இம்மாதத்தில் சிறப்பிக்கப்படுகிறார்.
    5. திருவாதிரை கொண்டாட்டத்தில் சிவபெருமான் வணங்கப்படுகிறார்.
    6. வைகுண்ட ஏகாதசி விரம் கடைப்பிடித்து திருமால் போற்றப்படுகிறார்.
    7. பெண்கள் பாவை நோன்பின் மூலம் ஆதிசக்தி அன்னையை வழிபடுகின்றனர்.
    8. இவ்வாறாக மார்கழியில் பிள்ளையார், முருகப்பெருமான், சிவபெருமான், திருமால், ஆதிசக்தி என எல்லா கடவுளுரும் வழிபடப்படுகின்றனர்.

    இதுவே மார்கழி மாத சிறப்பு ஆகும்.

    மார்கழி மாத கோலம்

    மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும். மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.

    அறிவியலின் படி மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் அதாவது காலை 4.00 முதல் 6.00 மணி வரை வருவதால் தான் பெண்கள் கோலம் போடவும் ஆண்கள் பஜனை பாடல்கள் பாடவும் செய்துள்ளனர் நம் முன்னோர்கள். அதனால் மார்கழி குளிரில் தூங்காமல் இந்த ஆண்டு முதல் நல்ல காரியங்களை செய்து மகிழ்வோம்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)