குழந்தைகளுக்குப் பிடித்த ...
குழந்தைகளுக்கு தினமும் டிபன் பாக்ஸ் இல் என்ன உணவு கொடுப்பது என்பது மிகப் பெரிய யோசனையாக இருக்கும்... கவலை வேண்டாம் பெற்றோரே உங்களுக்காக சில ரெசிப்பீஸ் இந்தப் பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
1. பீட்ரூட் எடுத்து நன்றாக கழுவி தோல் நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக அல்லது துருவி எடுத்துக் கொண்டு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
2. பின்னர் அரைத்து வைத்த பீட்ரூட்டில் இருந்து சாறு எடுக்கவும்.
3. ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும்.
4. அதனுடன் பிழிந்த வைத்த பீட்ரூட் சாறு உப்பு எண்ணெய் சேர்த்து மெதுவாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
5. அரை மணி நேரம் கழித்து மாவை எடுத்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
6. பின்னர் சப்பாத்தி போன்று திரட்டி தோசை தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.
7. சுவையான பீட்ரூட் பராத்தா தயார்.
தேவையான பொருட்கள்
செய்முறை
1. பாசிப்பருப்பை நன்றாக கழுவி விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
(அதிகமாக ஊறினால் மெதுவாக ஆகிவிடும்).
2.அதன் பின்னர் மிக்ஸியில் அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.
3. இதை புளிக்க வைக்கத் தேவையில்லை. அதனால் தோசைக்கல் காய்ந்ததும் மாவை ஊற்றி நெய் அல்லது எண்ணெய் சேர்த்து திருப்பி போட்டால் தோசை தயார்.
தேவையான பொருட்கள்
செய்முறை
1. கடலைமாவு ஒரு கப் அளவு எடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பச்சைமிளகாய் துருவிய கேரட் ஓமம் சீரகம் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
2. அரை மணி நேரம் கழித்து தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கொத்தமல்லி தழை கறிவேப்பிலை சேர்த்து தோசை தவாவை சூடேற்றி தோசை போல் சுட்டு எடுக்கவும்.
3. சுவையான வெஜ்ஆம்லட் ரெடி.
இது குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமலை உண்டாக்கும். அதனால் சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
1. முதலில் உடைத்த கோதுமை ரவை மற்றும் பாசிப்பருப்பு நன்றாக கழுவி காய வைக்கவும்.
2. ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நெய் அல்லது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.
3. பின்னர் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் தேவைப்பட்டால் கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
4.பின்னர் பருப்பு மற்றும் கோதுமை ரவை சேர்த்து லேசாக வறுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வந்ததும் இறக்கவும்.
சுவையான கோதுமை ரவை கிச்சடி தயார்.
5. காய்கறிகள் சேர்த்தால் கூட சுவையாகத் தான் இருக்கும்.
சுவையான உணவுடன் ஆரோக்கியமான உணவுகளையும் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)