குழந்தையின் வாசிப்பு திற ...
வழக்கமான ஆண்டுகளைக் காட்டிலும் கோவிட்-19 காரணத்தால் குழந்தைகளின் கற்றலில் 30% இழப்புக்கு வழிவகுத்திருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. குறிப்பாக குழந்தைகளின் வாசிப்பு திறன் குறைந்திருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது.
வாசிப்பு என்பது ஒரு வியக்கத்தக்க அறிவாற்றல் உள்ள செயல்முறையாகும். வாசிப்பதை ஒரு தனிச் செயலாக நாம் அடிக்கடி நினைக்கும் வேளையில், ஒவ்வொரு முறையும் நாம் புத்தகத்துடன் அமரும் போது, நமது மூளை ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுகிறது. ஒரு சிறந்த கற்றல் செயல்பாட்டில், வாசிக்கும் திறன் என்பது அதீத முக்கியத்துவம் வாய்ந்தது. வாசிப்பு என்பது இல்லாமல், படித்தல் என்ற செயல்பாடே கிடையாது. வாசிக்கும் திறன் என்பது ஒரு குழந்தையிடம் பயிற்சியின் மூலமாக வார்த்தெடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி, தொடக்கக் கல்வி நிலையிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்கள் முதலில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தானாகவே குழந்தைகள் தாமும் புத்தகங்கள் மீது ஆர்வம் கொள்வார்கள்.
சிறுவயது முதல் ஒரு பிள்ளையை வாசிப்புத் திறனுடன் வளர்த்தால் நாளடைவில் ஒரு சிறந்த செய்தி வாசிப்பாளராக வானொலி அறிவிப்பாளராக மற்றும் ஒரு சிறந்த சொற்பொழிவாளராகவும் உருவெடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
வாசிப்பின் முக்கியத்துவம்
கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்” என்ற பொன்மொழி வாசிப்பின் முக்கியத்துவத்தை எளிதாக விளக்குகிறது. ஆரம்ப பள்ளியில் படிக்கும் போதே வாசிப்பின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு புரிய வைத்தால், வளர வளர பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு வாசிப்பு ஒரு தடையாக இருக்காது. பெரிதாக வளர்ந்து வேலைதேடி செல்லும் போது வாசிப்பில் கிடைத்த அனுபவம் உதவும்.
நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும் போது தேர்வாளர்கள் படித்தபாடம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்காமல் பொது அறிவு, தகவல் தொடர்புத்திறன், சூழ்நிலைக்கு ஏற்றார்போல் சரியான முடிவெடுக்கும் திறன் போன்றவைகளையே சோதிக்கின்றனர். இவை அனைத்தும் எந்தப் பாடப்புத்தகத்திலும் இருப்பதில்லை. தன்னை சுற்றிலும் நடக்கும் விஷயங்களை தெரிந்துகொள்ள செய்தித்தாள் வாசிப்பதிலிருந்து உணர்ந்துகொள்ள முடியும் இன்றைய வாசிப்பின் தேவையை.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு கருத்தும் எங்களில் அடுத பதிவுகளை சிறப்பாக்கக்கூடும்.
Be the first to support
Be the first to share
Comment (0)