1. குழந்தைகளின் வியர்குருக்க ...

குழந்தைகளின் வியர்குருக்கான வீட்டு வைத்தியம் - டால்கம் பவுடர் நல்லதா? இல்லையா?

All age groups

Bharathi

2.2M பார்வை

3 years ago

குழந்தைகளின் வியர்குருக்கான வீட்டு வைத்தியம் - டால்கம் பவுடர் நல்லதா? இல்லையா?
குழந்தை பராமரிப்பு பொருட்கள்
நோய் மேலாண்மை மற்றும் சுய பாதுகாப்பு
வீட்டு வைத்தியம்
ஊட்டத்துள்ள உணவுகள்

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பலவிதமான சரும சிக்கல்கள் ஏற்படும் அதாவது, குழந்தைக்கு சூடுபிடித்து சிவப்பு தடிப்புகள், வேர்க்குரு, சூட்டு கட்டி போன்ற பலவிதமான சிக்கல்கள் ஏற்படும். அவற்றில் இருந்து எவ்வாறு. குழந்தையை பாதுகாப்பது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

வியர்க்குரு ஏன் ஏற்படுகிறது?

More Similar Blogs

    வேர்க்குரு ஏற்படக் காரணங்கள் வியர்வைச் சுரப்பிகளிலிருந்து வியர்வை சுரந்து வெளியில் வரும் வழியில் ஏற்படும் அடைப்புகளே வேர்க்குரு உண்டாவதற்கான முதன்மைக் காரணமாகும். கோடைக்காலங்களில் வெப்பத்தின் காரணமாக அதிகமான வியர்வை சுரந்து, வியர்வை நாளங்கள் அடைக்கப்பட்டு, சிறு சிறு சிவந்த கொப்புளங்கள் உண்டாகின்றன.

    கோடை காலத்தில் குழந்தையின் சருமத்தை பாதுகாக்க

    இந்த விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்

    • கோடை காலத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் அதிகமாக குடிக்க சொல்லலாம்.
    • நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும்.
    • இளநீர், மோர் அருந்த செய்யலாம்.
    • தினமும் குளிக்க சொல்ல வேண்டும். சிறு குழந்தைகளை குளிப்பாட்டி விட வேண்டும். அதுவே கொஞ்சம் சூடு தணியும்.
    • வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் சூடு தணியும்.
    • குழந்தைகள் பருத்தியால் ஆன மெல்லிய உடைகளை உடுத்த வேண்டும்.
    • கூடுமானவரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    வியர்க்குரு வந்தால் என்ன செய்வது?

    • சந்தன வில்லைகள் அதை எடுத்து தண்ணீரில் கரைத்து அதில் பூச வேண்டும். நன்றாக பட்டு விடும். இரு வேளைகளிலும் போட வேண்டும்.
    • வேப்பிலை மற்றும் மஞ்சள் அரைத்து பெரிய குழந்தைகளுக்கு போடலாம்
    • குழந்தைக்கு வேர்க்குரு மிகவும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும் அதன் காரணமாக குழந்தைகள் அழுக ஆரம்பித்துவிடுவார்கள், அந்த சமயத்தில் வேர்க்குரு உள்ள இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை வைத்து மசாஜ் செய்யலாம் இதனால் எரிச்சல் குறையும் மேலும், வேர்குரும் சரியாகிவிடும்.
    • பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்
    • உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
    • எலுமிச்சை சாறு
    • நிறைய எலுமிச்சை ஜூஸ் குடிப்பது வேர்க்குருவைக் குறைக்கவும், வராமல் தடுக்கவும் உதவும். ஒரு நாளைக்கு 3-4 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், பதினைந்து நாட்களில் இதன் பலனை உணரத் தொடங்குவீர்கள்.

    டால்கம் பவுடர் நல்லதா?

    தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களுக்கு மாறாக, டால்க் முட்கள் நிறைந்த வெப்பத்தைத் தணிக்கவோ, விடுவிக்கவோ அல்லது தடுக்கவோ முடியாது. துத்தநாக ஸ்டெரேட் மற்றும் சிலிக்கேட்டுகளின் மெல்லிய தூள் கலவைகளால் டால்க் ஆனது. இது தோல் துளைகளைத் தடுக்கிறது, வியர்வையை அதிகரிக்கிறது மற்றும் முட்கள் நிறைந்த வெப்பத்தை அதிகரிக்கிறது.

    டால்க் மற்ற மருத்துவ பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. துகள்களின் அளவு மிகவும் சிறியது, அவற்றை எளிதாக உள்ளிழுக்க முடியும். துகள்கள் நுரையீரலின் மிகச்சிறிய பகுதிகளை அடைந்து நிமோனியா, வீக்கம் அல்லது மூச்சுக்குழாய் வீக்கத்தை ஏற்படுத்தும். இது குழந்தைகளுக்கு மரணத்தை விளைவிக்கும். இடுப்பு மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் பயன்படுத்தினால், டால்க் யோனி, கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்கள் வழியாக கருப்பைக்கு இடம்பெயரலாம். சில அறிவியல் ஆய்வுகள் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவதற்கும் கருப்பையின் புற்றுநோய்க்கும் இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்துள்ளன.

    பேபி பவுடர் டால்க் அடிப்படையிலானது மற்றும் பயன்படுத்தக்கூடாது. அதனால் இயற்கை முறையில் குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

    உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs