குழந்தைகளுக்கு தமிழ் வார் ...
இன்றைய காலக் குழந்தைகள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறு வயது முதலே நிறைய கற்றுக் கொடுப்பது பெற்றோரின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகக் விட்டது. அதனால் அவர்கள் அறிவு திறனுக்கு ஏற்ப நாமும் அதிகமான அதே நேரத்தில் தேவையான அறிவு, கலைகள், மொழிகள் பற்றிய ஆர்வத்தை தூண்டுவது அவசியமான ஒன்று.இப்போது உங்கள் குழந்தைக்கு எவ்வாறு வார்த்தைகள் பற்றிய ஆர்வத்தை தூண்டுவது அல்லது நிறைய வார்த்தைகள் படிக்க வைப்பது பற்றி பார்ப்போம்.
விளையாட்டு மூலம் கல்வி , கல்வி வழியாக விளையாட்டு என்பது போல அவர்களுக்கு நிறைய ஆங்கிலத்தில் வார்த்தைகள் தமிழில் வார்த்தைகள் விளையாட்டு மூலம் கற்கும் படி செய்ய வேண்டும். சாதாரணமாக விளையாடும் போது முதலில் ஒரு எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து நீங்கள் அடுத்த எழுத்து சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து உங்கள் குழந்தையை முதலில் சொன்ன இரண்டு எழுத்துக்களை வைத்து வார்த்தை உருவாக்குமாறு அடுத்த எழுத்து சொல்லும்படி சொல்ல வேண்டும். ஏதேனும் வார்த்தைகள் அமைத்தால் ஒரு மார்க் என்று அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து விளையாடி இறுதியில் யார் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்று பார்க்கலாம் என சொல்லி விளையாட ஆர்வத்தை ஏற்படுத்தலாம். இதுவும் ஒரு வழி.
உங்கள் குழந்தை தினமும் ஐந்து சொற்கள் கற்றுக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். அப்போது ஒரு வார முடிவில் அவர்கள் கற்றுக் கொண்ட வார்த்தைகளில் இருந்து ஒரு திருப்புதல் தேர்வு வைக்க வேண்டும். அது வாய்வழியாக அல்லது எழுத்து மூலமாக இருக்கலாம். அதன் பின்னர் தொடர்ந்து படித்து விட்டு இரண்டு வாரங்களுக்கு மூன்று வாரங்களுக்கு மாத இறுதியில் ஒரு தேர்வு வைத்தால் அந்த ஆண்டின் இறுதியில் எவ்வளவு வார்த்தைகள் கற்றுக் கொண்டு இருப்பார்கள்??!!இது ஒரு சிறந்து வழி.
"பரந்த சொற்களஞ்சியத்திற்கான திறவுகோல் வாசிப்பு காதல்" என்று ஆலிஸ் கூறுகிறார். 'தினமும் ஒரு வழக்கமான ஸ்லாட்டுடன் வாசிப்பதை வழக்கமாக்குவது முக்கியம்.
‘பள்ளிப் புத்தகங்களை மட்டும் படிக்காதீர்கள்: உங்கள் குழந்தையின் ஆர்வங்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் தொடர்புடைய புத்தகங்களைக் கண்டறியவும், ஏனெனில் இது முற்றிலும் மகிழ்ச்சிக்காக படிக்க அவர்களை ஊக்குவிக்கும்.
உங்கள் குழந்தை தனித்தனியாகப் படிக்க முடிந்தால் கூட, சத்தமாகப் படிக்கவும்: குழந்தைகள் கதைகளைக் கேட்க விரும்புகிறார்கள் என்றால் மேலும் அவர்களே படிக்க மிகவும் கடினமாக இருக்கும் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவர்களின் சொற்களஞ்சியத்தை நீங்கள் உருவாக்கலாம்.
ஒரு வார்த்தையின் அர்த்தத்தை நினைவில் வைத்துக் கொள்ள, நீங்களும் உங்கள் குழந்தையும் அந்த வார்த்தையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சூழ்நிலையை வரையலாம், அதாவது அவர்களுக்கு அந்த வார்த்தை உடன் தொடர்புள்ள படம்.தினமும் செய்தித்தாள்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.அப்போது அதில் உள்ள பெரிய புதிய வார்த்தைகள் தெரிய வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு புதிய வார்த்தையைக் கற்க, ஒரு குழந்தை அதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்க வேண்டும். பொதுவாக ஒரு குழந்தை ஒரு புதிய வார்த்தையை 4 முதல் 12 முறை கேட்க வேண்டும் என்று நிபுணர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். அதனால் வீட்டில் ஒரு கரும்பலகை வாங்கி அதில் காலையில் நீங்கள் எழுதி வைத்து விடுங்கள்.அவர்கள் அதை பள்ளி செல்லும் போது பார்த்து விட்டு வாசித்து விட்டு செல்வார்கள். மாலை வந்தும் அவர்கள் அதை திரும்ப வாசிப்பார்கள். அவ்வாறு தினமும் எழுதி போட்டால் நினைவில் இருந்து மறக்காது. முயற்சி செய்து பாருங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)