தாய்ப்பாலை எப்படி சேமிப்ப ...
இன்றைய இளம் தாய்மார்கள் நிறைய பேர் அலுவலகம் செல்பவராக இருக்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் இவர்களுக்கு இருக்கும் பெரிய சவால் தங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதே. தங்கள் குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்று நிறைய தாய்மாரக்ள் குற்றவுணர்ச்சிக்கு ஆளாவதும் உண்டு.
கவலைப்படாதீர்கள் அம்மாக்களே! தாய்ப்பாலை சேமித்து வைத்து கூட உங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க முடியும். ஆனால் தாய்ப்பாலை எப்படி சேமித்து வைக்க வேண்டும்? சேமித்து வைத்த தாய்ப்பாலை எப்படி குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
நீங்கள் பாலை எடுத்துக் கொடுக்கும் போது சிறிதளவு மீதம் இருந்தால் அதிலேயே ஃப்ரஷான பாலை மீண்டும் சேர்க்கக்கூடாது. அதே போல ஏற்கனவே பால் எடுத்துக் கொடுத்த கண்டய்னரில் சுத்தம் செய்யாமல் மீண்டும் அதிலேயே பால் எடுத்துக் கொடுக்கக்கூடாது
ஏனென்றால் ஓவனில் ஒரே மாதிரியான சூடு இருக்காது. மேலே அதிக சூடாகவும் கீழே குறைவான சூடாகவும் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கும் டெம்ப்பரேச்சரை குழந்தை குடிக்கும் போது அதற்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல ஓவனில் அதிகப்படியான டெம்ப்பரேச்சர் இருக்கும். இது, பாலின் சத்துக்கள் ஆவியாகி வீணாவதற்கு காரணமாகிவிடும்.
டபுள் பாய்லிங் முறைப்படி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதற்குள் தாய்ப்பால் கண்டய்னரை வைத்து சூடுபடுத்தலாம். அதிக சூடாக்குவதோ அல்லது வேகமாக குலுக்குவதோ கூடாது.
தாய்ப்பாலை பிரிட்ஜில் சேமித்து வைக்கும் போது ப்ரீசரில் நடுவில் வைப்பதையே வழக்கமாக கொள்ளுங்கள். பிரிட்ஜின் ஓரங்களில் அல்லது கீழே வைப்பதால் ஒரே மாதிரியான குளிர் பரவாது.
குழந்தைக்கு சரியாக தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்று எண்ணி குற்ற உணர்ச்சி அடையாதீர்கள். என்னென்ன வழிகள் இருக்கிறது, அதாவது வீட்டில் இருக்கும் போது தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
ஆரம்ப வாரங்களில் உங்கள் தினசரி வழக்கத்தில் கூடுதல் பம்ப் அமர்வை இணைப்பது நல்லது. பிறந்த பிறகு 2 மற்றும் 4 வாரங்களுக்கு இடையில் நீங்கள் பம்ப் செய்ய ஆரம்பிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.
இதன் பொருள் என்னவென்றால், வேலைக்கு சென்ற முதல் வாரங்களில், வேலை நாளில் ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் நீங்கள் பம்ப் செய்யலாம். பால் வழங்குவதில் சிரமப்படும் பெற்றோர்கள் 4 முறை வரை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.
பம்ப் செய்யும் போது வழக்கமான உணவை உண்ணுங்கள் மற்றும் நீரேற்றத்துடன் இருங்கள் - தாய்ப்பால் கொடுப்பது போன்ற பம்ப் செய்வது உங்களுக்கு கூடுதல் பசியையும் தாகத்தையும் ஏற்படுத்தும். ஆரோக்கியமான தின்பண்டங்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகள் சாலட்) மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் கையில் வைத்திருங்கள்.
உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்
Be the first to support
Be the first to share
Comment (0)