1. பிள்ளைகளை கிண்டல்களை எதிர ...

பிள்ளைகளை கிண்டல்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவது எப்படி?

All age groups

Kiruthiga Arun

2.4M பார்வை

3 years ago

பிள்ளைகளை கிண்டல்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவது எப்படி?
நடத்தை
வாழ்க்கை திறன்கள்

குழந்தைகள் விளையாடும் பொழுது ஒருவரை ஒருவர்  கிண்டல் கேலி செய்வது, விளையாட்டாக பேசி கொள்வது இயல்பு. ஆனால் அதுவே அந்த கிண்டல் கேலி ஒரு குழந்தையை உடலளவிலோ, மனதளவிலோ  காயப்படுத்தும் பொழுது அது தவறு. இதையே நாம் புல்லிங் (துன்புறுத்துதல்) என்று சொல்கிறோம். 

புல்லிங் செய்வதன் காரணம் என்ன? இப்படி  பல கேள்விகள் இருக்கலாம். புல்லிங் செய்பவர்களுக்கு ஒரு நபர் தேவை அவ்வளவே. அதுவும் அவர்கள் உணர்வு பூர்வமாகவும் உடல் ரீதியாகவும் பலவீனமானவர்களாக இருப்பவர்களையே அதிகமாக தேர்ந்தெடுப்பார்கள்.

More Similar Blogs

    ஏன் கொடுமைப்படுத்துதல்?

    இதற்காக நாம் அவர்களையும் குறை கூற முடியாது. அவர்கள் புல்லிங் போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் குடும்ப சூழ்நிலை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். அதற்கு தகுந்த முறையில் ஆலோசனை தரும் பொழுது அவர்கள் மாறக்கூடும்.  புல்லிங்யினால் பாதிக்கப்படும் குழந்தைகளை அதை எதிர்கொள்ள வைப்பது கொஞ்சம் கடினமான விஷயம்.

    கொடுமைப்படுத்துதலைச் சமாளிக்க உங்கள் பிள்ளைக்கு உதவும் வழிகள் [பெற்றோருக்காக]

    புல்லிங்கை எதிர்கொள்ள  சில வழிமுறைகளை இங்கே பார்க்கலாம். இங்கே படியுங்கள்.

    • நம்ம குழந்தையாக முன் வந்து தனக்கு ஏற்பட்ட புல்லிங்கை நம்மிடம் பகிராத வரை நமக்கு தெரியாது. அதே போல் அவர்களின் உடம்பில் காயங்கள் அல்லது அவர்களது நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே நாம் அதை தெரிஞ்சிக்கணும்.
    • புல்லிங்கை நம் குழந்தைகள் எதிர்கொள்ளும் பொழுது அவர்கள் நம்மிடம் பகிரும் சூழலும், சுதந்திரமும்  இருக்க வேண்டும். நிச்சயமா எல்லா குழந்தைகளும் வெளிப்படையாக சொல்ல மாட்டாங்க. ஏன்னா இதை தனக்கு நடந்த ஒரு அவமானமாகவும்,  வெட்கப்படற விஷயமாகவே நினைக்கலாம்.
    • பொதுவாக குழந்தைகளிடம் புல்லிங் சம்பந்தமா கேள்விகள் கேளுங்க. இது தொடர்பாக அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள். புல்லிங்கனா என்ன? இந்த மாதிரி சம்பவத்தை பள்ளியில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வைங்க. இதன் மூலம் தனக்கோ, தன் நண்பர்களுக்கோ நடந்தததை மனம் திறந்து பேச ஆரம்பிப்பாங்க. 
    • குழந்தைகளை அடிக்கடி ஜட்ஜ் பண்ணாதீங்க. ஒரு பிரச்சனை என்று உங்கலிடம் சொல்ல வரும் போது உன் மீது தான் தவறு என்று ஆரம்பத்திலே சொன்னால் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொள்வதை நிறுத்திவிடுவார்கள். இந்த அம்மா அப்பா எப்போதும் நம்மை தான் தப்பு சொல்லுவார்கள் எதற்காக அவர்களிடம் சொல்லி திட்டு, அடி வாங்க வேண்டும் என்று குழந்தைகள் நினைத்துவிடுவார்கள். அதனால் குழந்தைகள் கூற வருவதை முதலில் முழுவதையும் காது கொடுத்த கேட்ட பின் முடிவுகளை பற்றி யோசிப்பதே நல்லது.
    • எப்போதுமே புல்லிங் நடப்பதை பற்றி ஆரம்பத்திலேயே தெரியப்படுத்துவது என்பது பிரச்சனை தீவிரமடையாமல் இருக்க உதவும். அதனால் குழந்தைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பதன் மூலம் ஆரம்பத்திலே கண்டறிந்து தீர்க்க முடியும்.
    • எல்லா நேரங்களிலும் குழந்தைகளுக்கு அப்பா அம்மா நாம உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர வைங்க. பள்ளிகளில் புல்லிங் நடக்கும் பொழுது ஆசிரியர்களிடம் அதை பத்தி தெரியப்படுத்தறது அவசியம். அப்போ தான் தவறுகள் ஏதும் நடக்காம அவங்க கவனிச்சுப்பாங்க.
    • உங்கள் குழந்தை மிகவும் அதிகமாக பாதிக்கப்படறாங்கனு தெரிஞ்சா நிச்சயமா புல்லிங் செய்யும் குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு அதை எடுத்து செல்லவும்.
    • நிச்சயமாக உங்கள் குழந்தைகளிடம் புல்லிங் செய்யும் குழந்தையிடம் சண்டை போடவோ அல்லது அடிச்சிடுனுலாம் சொல்லாதீங்க. அது இரண்டு பேரிடமும் வெறுப்பு மற்றும் புல்லிங்கை அதிகரிக்க வாய்ப்புகளை உண்டாக்கும். அதற்கு பதில் அவர்களை தவிர்க்க சொல்லுங்க. எங்கே புல்லிங் செய்யும் பசங்க இருக்காங்களோ அங்கே உங்கள் குழந்தையை தனியாக செல்ல வேண்டாம்னு சொல்லுங்க. இல்லைனா அவங்க கிண்டல் பண்ண பண்ண அதை கவனிக்காம அந்த இடத்தை விட்டு விலக சொல்லுங்க 
    • கோபத்தை கட்டுப்படுத்த சொல்லி கொடுங்க. புல்லிங் செய்பர்களிடம் கோபத்தை காட்டாம முடிஞ்சா வரை அந்த சூழ்நிலையில் ஒன்று முதல் பத்து வரை சொல்லிகிட்டே அந்த இடத்தை விட்டு விலகிட சொல்லுங்க.
    • எப்போதுமே பிரச்சனையை சுமூகமாக முடிக்க முயற்சி செய்யுங்க. ஏன்னா நம்ம குழந்தைகள் அவர்களோடு தான் சேர்ந்து படிக்க, பழக போறாங்க. பெரியவர்கள் தலையிட்டு சின்ன பிரச்சனையை பெரிதாக்கி விடாதீர்கள். இதே குழந்தைகள் நாளை நல்ல நண்பர்களாகவும் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
    • பள்ளியில் நடக்கும் பொழுது உடனடியாக ஆசிரியர்களிடம் சொல்லுமாறு அறிவுறுத்துங்க. அதே மாதிரி தனியாக செல்லாமல் அவர்களின் நண்பர்கள் சூழ இருக்க சொல்லுங்க. வெளியே புல்லிங் நடந்தா அருகில் உள்ள பெரியவர்களிடம் சொல்ல சொல்லி பழகுங்க 

     

    எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் துணிவாக செயல் பட சொல்லுங்க. பயப்படற குழந்தைகளையே புல்லிங் செய்வாங்கனு புரிய வைங்க. குழந்தைகளுக்கு பள்ளியில் ஆரோக்கியமான சூழல் இருந்தால் மட்டுமே அவர்களால் படிப்பில் கவனம் செலுத்துவதோடு, மகிழ்ச்சியாகவும் பள்ளிக்கு செல்வார்கள். இது தான் பெற்றோர்களாகிய நமக்கும் சந்தோஷம்.

     

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)