பிறந்த குழந்தையின் தலையை எவ்வாறு உருண்டையாக வடிவமைப்பது ?

பொதுவாகப் பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக இலகுவாகவும், மெல்லியதாகவும் இருக்கும். மேலும், உங்கள் குழந்தை எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தால், அதன் தலை தட்டையாகவும் மாற வாய்ப்புள்ளது.பின்பகுதியில் அதிக அழுத்தம் கொடுத்து குழந்தை படுத்திருப்பதால் குழந்தையின் தலை தட்டையாக மாறிவிட வாய்ப்புண்டு. குழந்தையின் தலை வடிவம் மாறுவதற்கு இவை எல்லாமே காரணமாக இருந்தாலும் கூட உரிய முறையில் குழந்தைக்கு பராமரிப்பு மேற்கொண்டால் குழந்தையின் தலை வடிவத்தை உருண்டையாக மாற்றிவிட முடியும்.
சிலர் குழந்தையைக் குப்பற படுக்க வைப்பார்கள். குழந்தையை வயிற்றில் தூங்க வைப்பது SIDS (திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி) அபாயத்தை அதிகரிக்கிறது, ஆனால் குறுகிய காலத்திற்கு செய்தால் அது செரிமானத்திற்கும் குழந்தையின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் ஆரோக்கியமானது.
உருண்டையாக மாற்றுவதற்கான வழிகள்
உங்கள் பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவம் பெற வேண்டும் என்றால், நீங்கள் சரியான முயற்சி மற்றும் வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
- உங்கள் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே, தூங்குவதற்கு சரியான படுக்கையை தேர்ந்தெடுங்கள். குழந்தை பிறந்த சில வாரங்கள் கழித்து, ஒவ்வொரு இரவும் தூங்கும் போது தலையை வேறு வேறு பக்கத்தில் வைத்துப் படுக்கும் படி செய்யுங்கள். இதனால் தலைக்குப் போதுமான சுழற்சி கிடைத்து நல்ல வடிவம் கிடைக்கும். ஒரே நிலையில் குழந்தையின் தலை இப்படியே இல்லாமால் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தலைபகுதியை மாற்றி மாற்றி வையுங்கள். இரவு நேரங்களிலும் இதே போன்று குழந்தையின் தலையை திருப்பி வையுங்கள். இதனால் தலைப்பகுதி இருபுறமும் திரும்புவதால் வடிவம் உருண்டையாக பெறமுடியும் .
- குழந்தை பிறந்த முதல் ஒரு வாரங்களிலேயே ஓரளவு குழந்தையின் தலையை உருண்டையாக்கி வைக்க முடியும். குழந்தையின் பின்னந்தலை தான் தட்டைபகுதியை கொண்டிருக்கும் என்பதால் குழந்தையின் தலையை வெறுமனே துணியில் கிடத்தாமல் மெல்லிய துணிகளை இரண்டாக மடித்து தலையணையாக வைக்கவும். அதே போன்று தலையின் இரண்டு பக்கவாட்டிலும் இதே போன்று மெல்லிய துணியை மடித்து வைக்க வேண்டும்.
- அதே நேரம் துணி வைப்பதால் குழந்தையின் தலை பக்கவாட்டில் திரும்பாமல் இருக்கும்படியும் செய்துவிட கூடாது. குழந்தை தூங்கும் போது தலையை திருப்பமுடியாமல் ஒரே மாதிரி வைக்காமல் திரும்பும்படி சற்று இலகுவாக படுக்க வையுங்கள். சிலர் குழந்தை நகராமல் இருக்க வேண்டும் என்று குழந்தையின் பக்கத்தில் இருபுறமும் தலையணையை வைத்து விடுவார்கள் இதனால் குழந்தை அசெளகரியாமான உணர்வையே சந்திக்கும். கைக்குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறங்களில் தங்கள் கைகளையும் கால்களையும் வசதியாக நகர்த்த விரும்புகிறார்கள். எனவே குழந்தையின் அருகில் அல்லது சுற்றியுள்ள எந்தவிதமான ஆடை அல்லது படுக்கைகளையும் தவிர்க்கவும்.
- உள்ளங்கையால் குழந்தையின் தலையை இலேசாக அழுத்தம் இல்லாமல் பிடித்து விடுங்கள். மென்மையான மண்டை ஓடு என்பதால் சற்றுக்கூட அழுத்தம் வேண்டாம். பூவை போன்று உள்ளங்கையால் தலையில் உருட்டியபடி இலேசாக மசாஜ் செய்துவிடுவதன் மூலம் குழந்தையின் தலை உருண்டையான வடிவம் பெறும். இதனால் குழந்தையின் தலைப்பகுதியில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்த மறுநாள் முதலே தொடர்ந்து 15 நாட்கள் இப்படி செய்தாலே குழந்தையின் தலை வடிவம் உருண்டையாக இருப்பதை பார்க்கலாம்
- தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையின் தலையை உள்ளங்கையில் வைத்து கொடுக்க வேண்டும். ஒரே பக்கமாக தாய்ப்பால் கொடுக்காமல் இரண்டு பக்கமும் திருப்பி திருப்பி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தலைப்பகுதியில் அழுத்தம் குறையும். தாய்ப்பால் கொடுத்தவுடன் அல்லது நீண்ட நேரம் குழந்தையை படுக்கையில் கிடத்தாமல் அவ்வபோது குழந்தையை தோளில் போட்டு தட்டி விட வேண்டும். இதனால் செரிமானம் சீராகும். தலையை உள்ளங்கையில் பிடித்திருப்பதால் குழந்தையின் தலைக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும். தொடர்ந்து மூன்று மாதங்களாவது இப்படி செய்வதன் மூலம் குழந்தையின் தலை உருண்டையாக மாறும்.
- எனவே நீங்கள் ஒரு பாட்டிலைப் பயன்படுத்தினாலும் கூட, உணவளிக்கும் போது உங்கள் கைகளை மாற்ற முயற்சிக்கவும். இது குழந்தைக்கு வட்ட மண்டை ஓட்டை உருவாக்க உதவும்.
இதையெல்லாம் செய்தும் குழந்தையின் தலை வடிவத்தில் உங்களுக்கு திருப்தி இல்லாமல் இருந்தால் இந்த பயிற்சியின் மூலம் அவை சரி ஆகும். குழந்தையை கீழே கிடத்தாமல் தொட்டில், கட்டில் போன்றவற்றையும் தவிர்த்து தூளியில் போட்டு விடும் போது குழந்தையின் தலை அழகான உருண்டை வடிவத்தில் பெறமுடியும்.
உங்கள் குழந்தை தலையில் ஒரு தட்டையான இடத்தை உருவாக்குவதை நீங்கள் இன்னும் கவனித்தால், தயவுசெய்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். அதை எளிதாக நிவர்த்தி செய்ய முடியும், இதனால் உங்கள் பிள்ளை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
Be the first to support
Be the first to share
Comment (0)
Related Blogs & Vlogs
No related events found.
Loading more...