முதல் முறை குழந்தைக்கு உண ...
முதலில் ஒரு அம்மாவாக உங்கள் குழந்தைக்கு வாழ்த்துக்களை கூற நினைக்கிறேன். ஏன்னென்றால் குழந்தை முதன் முதலில் உணவு உண்ணப்போவதை நம் வீடுகளில் விழாவாக கொண்டாடும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சியான, பாஸிட்டிவ்வான மனதோடு உணவு கொடுக்க தயாராகுங்கள்.
குழந்தைக்கு ஏற்கனவே தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் கொடுப்பதால் திட உணவு ஒரு நாளில் இரண்டு வேலை கொடுக்கலாம். உதாரணத்திற்கு காலை மற்றும் மதிய உணவாக கொடுக்கலாம். இதற்கு நடுவில் பால் கொடுப்பது கணக்கில்லை. குழந்தையின் தேவைகேற்ப பால் கொடுத்துக் கொண்டு இருக்கலாம்.
திட உணவு ஆரம்பிக்கும் பொழுது காய்கறி மற்றும் பழங்கள் மட்டும் கொடுக்கலாம். ஏன்னென்றால் குழந்தைகளின் ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் காய்கறி மற்றும் பழங்கள் சீக்கிரம் ஜீரணமாகிவிடும். முதல் மூன்று நாட்கள் கொடுத்துப்பாருங்கள், குழந்தைக்கு ஏற்றுக் கொண்டதால் மெல்ல மெல்ல கஞ்சி, சாதம் என மற்ற உணவுகளை ஆரம்பிக்கலாம்.
அரிசி கஞ்சி - தேவையான பொருட்கள்:
தயாரிப்பது எப்படி:
தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.. மெதுவாக, அரைத்த அரிசியை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். சமைத்த அரிசியை 2 தேக்கரண்டி பாலுடன் சேர்த்து நன்கு கிளறிய பின் ஆற வைத்து ஊட்டவும்.
மஞ்ச பூசணி கூழ்
தயாரிப்பது எப்படி:
பூசணிக்காயில் உள்ள விதையை நீக்கி சிறிய க்யூப்ஸாக கட் பண்ணவும். கப் தண்ணீரை வேகவைத்து அதில் பூசணி க்யூப்ஸ் சேர்க்கவும். மூடியை மூடி, சில நிமிடங்கள் சமைக்கவும்.
சமைத்த பூசணிக்காயை நன்றாக மசிக்கவும். உங்கள் குழந்தைக்கு உணவளிக்கவும். இதில் இருக்கும் இயற்கையான இனிப்பு நல்ல சுவையை தரும்.
மஞ்ச பூசணிக்கு பதில் ஆப்பிளையும் தோல் நீக்கி இதே போல் சமைத்துக் கொடுக்கலாம்.
ராகிப்பால் /சம்பா கோதுமை பால்
ராகி(கேழ்வரகு) அல்லது சம்பா கோதுமை – 1 கப்
தண்ணீர்
கருப்பட்டி – தேவைகேற்ப
தயாரிப்பது எப்படி:
கேழ்வரகு அல்லது கோதுமையை முதல் நாள் ஊற வைத்து, அதை மிக்ஸ்யில் அரைத்து ஒரு வெள்ளை துணியில் புளிந்து பால் எடுக்கவும். இந்த பாலை காய்ச்சவும். அடிப்பிடிக்காமல் கிளறவும். அல்வா போல் பதம் வரும். இதனுடன் கருப்பட்டி( சிறிது தண்ணீர் விட்டு வடிகட்டிக் கொள்ளவும்) காய்ச்சிய ராகிப்பாலுடன் சேர்த்து ஆற வைத்து உங்கள் குழந்தைக்கு ஊட்டவும். மிகவும் சுவையும் சத்தும் நிறைந்த உணவு இது.
குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது தாய்மார்களுக்கு ஒரு சவாலான பணியாகும். உங்கள் குழந்தையின் உணவு நேரத்தை டென்ஷன் இல்லாமலும் மகிழ்ச்சியாக மாற்ற இதோ சில குறிப்புகள்.
குழந்தைகளுக்கு திட உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குழப்பம் அதிகம் இருக்கலாம், பெரும்பாலும், குழந்தைகள் மாறுபட்ட சுவை, மற்றும் வண்ணங்களைக் கொண்ட உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள். நம்முடைய ஒரு சிறிய முயற்சியும், மெனக்கிடுதலும், அன்பும் குழந்தைக்கு உணவு நேரத்தை இனிமையாக மாற்றும் என நான் நம்புகிறேன்
Be the first to support
Be the first to share
Comment (0)