1. குழந்தைகளின் நுரையீரல் பா ...

குழந்தைகளின் நுரையீரல் பாதிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்

All age groups

Bharathi

3.1M பார்வை

3 years ago

குழந்தைகளின் நுரையீரல் பாதிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்
காற்று மாசு
நோய் மேலாண்மை மற்றும் சுய பாதுகாப்பு
வீட்டு வைத்தியம்

காற்று மாசுபாடு உங்கள் நுரையீரலில் ஏற்படுத்தும் விளைவு, காற்றில் உள்ள மாசுபடுத்திகளின் வகை மற்றும் கலவை, மாசுபடுத்திகளின் செறிவு மற்றும் உங்கள் நுரையீரலில் எவ்வளவு மாசுபாடு இறங்குகிறது என்பதைப் பொறுத்தது. டெல்லியைப் போன்று தற்போது தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட சில நகரங்களில் காற்று மாசு மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நுரையீரல் பாதிப்பு என்பது அதிகரித்து வருகின்றது. 

நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றில் 21 சதவீதம் ஆக்ஸிஜன் இருக்கும்.

More Similar Blogs

    மாசுபாடு என்றால் என்ன? 

    மத்திய சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி யில் 407 என்ற அளவிலும், சென் னையில் 262 என்ற அளவிலும் காற்று மாசடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மதுரையில்கூட சில நேரங்களில் காற்றில் மாசு துகள்களின் அளவு 70 முதல் 120 வரை சென்று விடுகிறது.

    இதில், ஆக்ஸிஜன் அளவு குறைந்து மாசுள்ள காற்றின் அளவு அதிகரிக்கும் போதுதான் பிரச்சினை. தற்போது மருத்துவமனைகளுக்கு வருவோரில் 50 சதவீதம் பேர் சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த கோளாறுகளுக்கு சிகிச்சை பெறவே வருகின்றனர். ஏற்கெனவே நுரையீரல் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதால், அது காற்றுக்குழாயில் அடைத்து நோயின் தன்மையை தீவிரம் அடையச் செய்கிறது. இதனால் இளைப்பு தொந்தரவு, நுரையீரல் தேய்மானம் ஏற்படுகிறது.

    இந்த காலங்களில் குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic obstruc tive pulmonary disease), காச நோயாளிகள், ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    உங்கள் பிள்ளை நீண்ட காலமாக அதிக அளவு காற்று மாசுபாட்டை சுவாசித்தால், இந்த அறிகுறிகள் இருக்கக்கூடும்:

    •  வயதாகும்போது அவர்களின் நுரையீரல் வேலை செய்யவில்லை
    • குழந்தைப் பருவத்திலோ அல்லது வயது முதிர்ந்தவர்களிலோ ஆஸ்துமாவை வளர்ப்பது - மேலும் அவர்களுக்கு ஏற்கனவே ஆஸ்துமா இருந்தால், காற்று மாசுபாடு அதை மோசமாக்கும்
    • மூச்சுத்திணறல்
    • இருமல்
    • அவர்கள் வயதாகும்போது நுரையீரல் புற்றுநோய்
    • நிமோனியா போன்ற தொற்றுகள்

    காற்று மாசுபாடு ஏற்பட காரணம்

    காற்று மாசுபாடு ஏற்பட முக்கியக் காரணம், வாகனங்களில் நாம் பயன்ப்படுத்தும் எரிபொருள். சில வளர்ந்த நாடுகளில் 4 சக்கர வாகனம் வாங்குவதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இந்தியாவிலோ வீட்டுக்கொரு வாகனம் என்ற அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம், உயர்தர எரி பொருள் கிடைப்பதில்லை.

    தரத்தில் குறைந்த எரி பொருளை அதிகம் பயன்படுத்தும்போது, காற்றில் நச்சுத்தன்மை அதிகமாகக் கலக்கும். பனிக் காலத்தில், சரியான காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், நச்சுக் காற்று பல மணி நேரம் மேலே எழ முடியாமல் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். கோடைகாலத்தில், வாகனப் புகையோடு சேர்ந்து, வறண்ட பகுதிகளும் நச்சுக் காற்றை உமிழும்.

    நுரையீரல் தொற்று அறிகுறிகள் மற்றும் வீட்டுவைத்தியம்

    பால்

    நுரையீரல் தொற்று மருத்துவம்

    கை வைத்தியத்தில் இருமலுக்கு கை கண்ட மருந்து இது. அந்த காலத்தில் இலேசாக இருமினாலே வீட்டில் மிளகு மஞ்சள் பால் முதல் வைத்தியமாக கிடைக்கும். சளி, அதைத் தொடர்ந்து இருமல் எல்லாமே மூச்சுகுழாய் நுரையீரல் சம்பந்தபட்ட பாதிப்பே என்பதை உணர்ந்தவர்கள் முன்னோர்கள்.

    பாலை நன்றாக காய்ச்சி மிளகை நுணுக்கி அதில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் நுரையீரலுக்கு வலு கிடைக்கும். மஞ்சள் ஆன் டி ஆக்ஸிடெண்ட் தன்மை நிறைந்திருக்கிறது. இதில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்ககூடியவை.

    கஷாயம்

    ஒரு டம்ளர் பாலுக்கு சிறு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சோம்பு, சீரகம் சேர்த்து சிட்டிகை மிளகுப்பொடி சேர்த்து கொதிக்க வைத்து தேன் கலந்து குடிக்கவும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அளவு குறைத்து கொடுக்க வேண்டும். அதிக காரம் நிறைந்த இந்த கஷாயம் நுரையீரலை சுத்தப்படுத்த உதவும். வாரம் ஒரு முறை இந்த கஷாயம் குடிப்பதை தவறாமல் கடைபிடியுங்கள்.

    இஞ்சி

    தினமும் டீ குடிக்கும் போது இஞ்சியை தட்டி சேர்த்து இஞ்சி டீயாகவோ, அல்லது சுக்கு காபியாகவோ குடித்து வருவது மிகவும் நல்லது. இஞ்சி நுரையீரலில் இருக்கும் கழிவுகளை அகற்றும் சிறப்பு குணங்களை கொண்டிருக்கும் பொருள். நுரையீரல் பலவீனத்தையும் அதன் வீக்கத்தையும் குறைக்க வல்லது. அதனால் தான் ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி உணவில் இஞ்சியை சேர்த்துவர வேண்டும் என்று சொல்வது.

    ஆடாதொடை

    செடியாகவும் மரமாகவும் இருக்கும் இது மூலிகை குணங்கள் நிறைந்தது. இவை எங்கு நிறைந்திருக்கிறதோ அங்கு ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அதனால் தான் ஆடாதோடை ஆயுள் மூலிகை என்று அழைக்கப்படுகிறது.சிறு குழந்தைகளுக்கு அவ்வபோது சளி வந்தால் ஆடாதோடை இலையை உலரவைத்து பொடித்து வைத்துகொள்ள வேண்டும். அரைடீஸ்பூன் தேனில் கால் டீஸ்பூன் அளவு ஆடாதோடை பொடியை குழைத்து நாக்கில் தடவ வேண்டும். இதனால் நுரையீரல் ஆரோக்கியமாக பலமாக இருக்கும்.

    வெற்றிலை மற்றும் கற்பூரவள்ளி

    குழந்தைகளுக்கு வெற்றிலையோடு , கற்பூரவல்லி சோ்த்து கஷாயமிட்டு கொடுக்க சுவாசபாதை கிருமிகளும் அழியும். சளி சுரப்புகள் வெளிப்பட்டு சுவாசபாதை சீராகும். நாட்பட்ட சுவாசப்பாதை ஒவ்வாமை நோய்களில் சீந்தில் கொடியும், மஞ்சளும் சிறந்த பயன் தரும். இவை நோய் எதிா்ப்பாற்றலை அதிகரித்து ஒவ்வாமை நோய்களில் இருந்து மீட்கும் தன்மை உடையன .

    நொச்சி இலை

    நொச்சி இலை, மிளகு, கிராம்பு ,பூண்டு இவற்றை கொண்டு செய்யப்படும் நொச்சி குடிநீரும் ஆஸ்துமா நோய்க்கு அடிமையானவா்களை மீட்கும் வல்லமை கொண்டது.

    காற்று மாசுபாட்டால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் குறைக்க நான் என்ன செய்ய வேண்டும்?

    காற்று மாசுபாடு மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. பரபரப்பான நகரத்திலிருந்து விலகிச் செல்வது நடைமுறைக்கு ஒத்துவராது. ஆனால் குழந்தைகள் காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைக் குறைக்க பெற்றோர்கள் எடுக்கக்கூடிய சில படிகள் உள்ளன:

    1. கர்ப்ப காலத்தில் புகைபிடிப்பதை தவிர்க்கவும்
    2. உங்கள் குழந்தை பிறந்த பிறகு சிகரெட் புகையை சுவாசிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்
    3. முடிந்த போதெல்லாம் வாகனத்தில் செல்வதை விட நடக்கவும். பரபரப்பான தெருக்களில், காற்று மாசுபாடு வெளியில் இருப்பதை விட காருக்குள் மோசமாக இருக்கும்
    4. உங்கள் உள்ளூர் மாசுப் பகுதிகள் எங்குள்ளது என்பதைக் கண்டறியவும், நீங்கள் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டிச் சென்றால், அமைதியான தெருக்களில் செல்வதன் மூலம் மோசமான மாசுபாட்டைத் தவிர்க்கவும். சாலையிலிருந்து வெகு தொலைவில் நடைபாதையின் ஓரத்தில் நடப்பது மற்றும் நெரிசலான நேரங்களைத் தவிர்ப்பது கூட உதவும்.
    5. உங்கள் வீட்டை நன்கு காற்றோட்டமாக வைத்திருங்கள்
    6. இரசாயனங்களை நுகர்வதிலிருந்து பாதுகாக்க உங்கள் குழந்தையின் வெளிப்பாட்டைக் குறைக்கவும்.

    உங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து சளி, இருமல், சுவாசக் கோளாறு இருந்தால்,  நுரையீரலில் தொற்று இருக்கிறதா என்பதை அறிய  மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs