1. தாய்க்கும் குழந்தைக்கும் ...

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பு எவ்வாறு உருவாகிறது?

0 to 1 years

Radha Shri

2.2M பார்வை

2 years ago

தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பிணைப்பு எவ்வாறு உருவாகிறது?
குழந்தைக்கான மசாஜ்
சமூக மற்றும் உணர்ச்சி

நீங்கள் உங்களது குழந்தையை தொடர்ச்சியாக குழந்தை நிபுணரிடம் அழைத்து சென்று குழந்தையின் உடல்நிலையை கவனித்து கொள்ளலாம். உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளருவதை உறுதி செய்ய சளி தொந்தரவால் அவதிபடுவோர்களிடம் இருந்தும், சூரிய வெப்பத்தில் இருந்தும் உங்கள் குழந்தையை பாதுகாக்கின்றீர்கள். ஆராய்ச்சிகளின் படி உங்கள் குழந்தையுடனான உங்கள் உணர்வு ரீதியான பிணைப்பின் பலமானது உங்களது குழந்தையின் அனைத்து விதமான வளர்ச்சிக்கும் உதவும் என்பதாகும்.

உங்கள் குழந்தையுடனான நெருங்கிய பிணைப்பினால், உங்கள் குழந்தையை நோய்களிலிருந்து தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குழந்தையின் அறிவுத் திறனை அதிகரிக்க செய்யவும் முடியும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அணைத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்றவை எண்ணங்களை விட சக்தி வாய்ந்த இயற்கை உந்துதலாகும். தாய் – சேய் பிணைப்பு உடலியல் சார்ந்த செயல்முறை உருவாக்கத்தின் தொடக்கங்களை மேம்படுத்துதலில் முக்கிய பங்கு அளிக்கிறது. இதய செயல்பாடுகளின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி நரம்புகள்,மூளை, ஹார்மோன்கள் மற்றும் ஏறத்தாழ உடலின் அனைத்து பாகங்களின் மேம்பாட்டிற்கும் உதவுகிறது. தாய்-சேய் பிணைப்பு பற்றியும், அதனை எவ்வாறு வலுப்பெற செய்தல் என்பது பற்றியும், டி.என்.ஏ-வை விட ஏன் இப்பிணைப்பானது சக்தி வாய்ந்தது என்பது பற்றியும் இனி காணலாம்.

More Similar Blogs

    உங்கள் குழந்தையுடன் உணர்ச்சி ரீதியான பிணைப்பை வலுப்படுத்தும் வழிகள்

    உடலியல் செயல்முறை உருவாக்கத்தின் துவக்கங்களை மேம்படுத்துவதில் தாய்-குழந்தை பிணைப்பு ஒரு நல்ல பாத்திரத்தை வகிக்கிறது. உங்கள் குழந்தையுடன் பாசம் அல்லது பிணைப்பை அதிகரிப்பதற்கான உதவிக்குறிப்புகள் இங்கே. இங்கே படியுங்கள்

    தாயின் பரிசம் மூலம் கிடைக்கும் தொடர்பு

    ஓஹியோ மாநில பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியின் படி, ஆராய்ச்சியாளர்களின் வழக்கமான கட்டி அணைக்கும் அரவணைப்பால் உயர் கொலஸ்ட்ரால் உணவு பழக்கத்தினால் ஏற்படும் இரத்த குழாயடைப்பு விளைவுகளில் இருந்து முயல்கள் பாதுகாக்கப்பட்டது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. இந்த பாச பரிமாற்றம் முயலின் ஹார்மோன் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதற்கான வாய்ப்பு அதிகமுள்ள நோய்ப்பாதிப்பினை தடுத்து இருக்கிறது. மான்ட்ரீயல் நகரில் உள்ள மெக்ஹில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சில பெண் எலிகள், தங்களது பிறந்த எலிக்குஞ்சுகளை அடிக்கடி நாக்கினால் தேய்த்த வண்ணம் இருந்துள்ளன. அவ்வாறு தாய் எலியால் நாக்கினால் தடவி வளர்ந்த எலிகள், இயற்கையாகவே குறைந்த மன அழுத்தத்தோடும் அதிக துணிச்சலோடும் காணப்பட்டன. அவ்வாறு தாயினால் நாக்கினால் தடவப்பட்டு வளராத எலிகள், வெளிப்படையான பதற்றத்தோடும், மன அழுத்தத்தோடும் காணப்படுவதைக் கண்டறிந்துள்ளனர்.

    மற்றுமொரு ஆய்வில், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், தாய் தடவி கொடுத்தலினால், அவ்வாறு தடவி கொடுக்கப்படாத குறை பிரசவ குழந்தைகளைக் காட்டிலும் 50% அதிக எடையினை பெற்று உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது உடல்நலம் சார்ந்த பிற பலன்களுக்காக குறை பிரசவ குழந்தையை தாய், தோலோடு தோல் சேர்ந்த தொடர்பு (கங்காரு கவனிப்பு என்றும் அழைக்கப்படுகிறது) மூலம் அணைத்தல் போன்றதானது ஆகும்.

    வாசனை மற்றும் புன்னகை

    நம் குழந்தைகள் நம்முடன் தனிப்பட்ட முறையில் உணர்வு ரீதியாக பிணைந்து இருப்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. பிரோமோன்ஸ் எனும் வேதி பொருள் நம் உடலில் உங்கள் வாழ்க்கை துணையை ஈர்க்கும் நோக்கில் சுரக்கப்படுகிறது. இதே ஹார்மோனானது குழந்தையின் உடலிலும் சுரக்கப்படுகிறது. புதிதாக பிறந்த குழந்தையுடன் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் மட்டுமே நேரம் செலவிடும் போது, 90 சதவீத தாய்மார்களால் வெறும் வாசனையால் மட்டுமே தனது குழந்தையை அடையாளம் காண இயலுகிறது. ஒரு மணி நேரம் தனது குழந்தையுடன் தாய் நேரம் செலவிடும் போது, 100 சதவீத தாய்மார்கள் தங்களது குழந்தையின் வாசத்தை பிற குழந்தைகளின் வாசனையில் இருந்து வேறுபடுத்தி அறிய இயல முடிவதை ஆய்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது.

    குழந்தைக்கும் தன் தாயின் வாசனையை அறியும் திறன் உள்ளது. ஜப்பானில் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், தனது தாயின் தாய்ப்பால் வாசனை அறிந்த குழந்தைகளையும், பிற தாயிடம் தாய்ப்பால் அருந்திய அல்லது தாய்ப்பாலே அருந்தாத குழந்தைகளையும் ஆராய்ந்ததில் தன் தாயின் தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் நன்கு மன அழுத்தமற்ற நிலையில் இருந்தது அறியப்பட்டுள்ளது. வெறும் தனது தாயின் தாய்ப்பால் வாசனை மட்டுமே குழந்தையினை அமைதிப்படுத்தவும், குழந்தையின் வலியைக் குறைக்கவும் செய்யும் வலிமை மிக்கது.

    வெறும் வாசனை குழந்தையை கவனிக்க சொல்லி உங்களைத் தூண்டுகிறது. உந்தச் செய்கிறது. அதே வாசனை உங்கள் குழந்தையை உங்களோடு பிணைந்து இருக்க தூண்டுகிறது.இதுவே புன்னகையை வரவழைக்கிறது.

    சமீபத்திய ஓர் ஆய்வில், தாய்மார்களிடம் அவர்களது சொந்த குழந்தை மற்றும் பிறரின் குழந்தையின் சோகம்,சந்தோஷம், நடுநிலையான முக பாவனை கொண்ட புகைப்படங்களை ஒவ்வொன்றாக காண்பித்து, அவ்வேளையில் அவர்களுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது. அப்போது தன் குழந்தையின் புகைப்படத்தினை காணும் போது, தாயின் மூளை செயல்பாட்டில் மேன்மை ஏற்படுவதும, அதுவே தன் குழந்தையின் புன்னகை கொண்ட புகைப்படத்தைக் காண்பிக்கும் போது தாயின் மூளை செயல்பாடானது மேலும் மேம்படுவதும் அறியப்பட்டது. தாய் குழந்தையை புன்னகைக்க செய்கிறாள். சேய்யின் புன்னகை தாயின் மூளை செயல்பாட்டினை மேம்படுத்துகிறது. தாயின் மேம்படும் மூளை சுறுசுறுப்பு மேலும் குழந்தையை புன்னகைக்க செய்கிறது.

    மரபியல் உண்மைகள் :

    குழந்தையின் உடல் மற்றும் உணர்வு ரீதியான வளர்ச்சியில் மரபணுக்கள் பங்கு அளிக்கின்றனவா? இருக்கலாம். மரபியலில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  சுற்றுப்புற காரணிகள் அதாவது என்ன நீங்கள் உண்கிறீர்கள்? எவ்வளவு உடற்பயிற்சி செய்கிறீர்கள்? ஆகியவற்றில் இருந்து எந்த அளவு மாசுக்களை எதிர்கொள்கிறீர்கள் வரையிலானவை வரை எவ்வாறு உங்கள் மரபணுவினை உடல் ரீதியாக மாற்றியமைப்பதில் இருந்து தீவிரமான நிலைக்கு செல்வது பற்றியும் அம்மரபணு செயல்பாட்டில் இருப்பதும் செயல்பாடற்ற நிலையில் இருப்பதும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒத்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் பரம்பரை நோயினால் பாதிக்கப்படுவதும், மற்றொரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது இருப்பதும் ஏன் என்ற கேள்வியானது, மரபணுக்கள் மற்றும் வளர்ப்பு ஆகியவற்றிற்கிடையேயான ஆதிக்கமே வெற்றி பெறுகிறது.

    மரபணுவை மாற்றியமைக்கும் காரணிகளில் ஒரு குழந்தை, உடல் மற்றும் உணர்வு ரீதியாக பெறும் அன்பும் ஒன்றாகும். குழந்தைகளால் தானாக எதற்கும் செயலாற்ற இயலாது. ஆனால் பசி, தட்ப வெப்பநிலை மாற்றங்கள்,  வலி, ஒளி என அனைத்தையும் நம்ப முடியா வண்ணம் உணர முடிகிறது. இத்தகைய அனைத்து வகையான புதிய உணர்வுகளுக்கும் அறிமுகம் ஆகும் போது உங்கள் குழந்தையை அதை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் ஆற்றுதல், வழி நடத்தல் மற்றும் அரவணைத்தல் மூலம் குழந்தையின் திறனை மரபணுவின் தாக்கத்தைத் தாண்டி ஜெயிக்க இயலும்.

    இறுதியாக, இந்த பிணைப்பு இயற்கையான உந்துதலினால் ஏற்பட போவதில்லை. உங்கள் குழந்தையுடன் காட்டும் பிணைப்பானது பல வழிகளில் குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக பெரிய அளவில் நன்மைகளை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. அன்பானது உடனே ஒட்டக்கூடிய பசை அல்ல. காலப்போக்கில்  மேம்படக்கூடியது. தொடர்ந்த நிபந்தனையற்ற அன்பினை உங்கள் குழந்தைக்கு வழங்குங்கள். உங்கள் குழந்தை உடல் மற்றும் மன அளவில் சிறந்த குழந்தையாக திகழ்வதை உறுதி செய்யுங்கள்.

     

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)