பிறந்த குழந்தையின் நகங்கள ...
உங்கள் பிறந்த குழந்தையின் மென்மையான சிறிய நகங்களை வெட்டுவதற்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? பிறந்த குழந்தையின் நகங்கள் பார்க்க அழகாக தான் இருக்கும். உங்கள் குழந்தையின் நகங்கள் உங்கள் நகங்களை விட மென்மையாகவும் நெகிழ்வாகவும் இருந்தாலும், அவர்களுக்கு கீறல்களை ஏற்படுத்தலாம். அதனால் தொடர்ந்து ட்ரிம் செய்ய வேண்டும்.
பொதுவாகவே பிறந்த குழந்தையின் விரல் நகங்கள் வேகமாக வளரும், எனவே நீங்கள் அவற்றை வாரந்தோறும் அல்லது அடிக்கடி கட் பண்ண வேண்டும். கால் நகங்களை அடிக்கடி வெட்ட வேண்டியதில்லை.
உங்கள் குழந்தையின் நகங்களை வெட்டும்போது நீங்கள் செய்யக்கூடிய சில செயல்முறைகள் இவை -
இந்தப் பணியை செய்ய சரியான நேரத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். நான் எப்போதும் தூங்கும் நேரத்தை விரும்பினேன், ஏனெனில் அது என் குழந்தைகளின் கைகளைப் பிடிப்பதில் எனக்கு முழுக் கட்டுப்பாட்டைக் கொடுத்தது. நகங்கள் ஈரமான பிறகு மிகவும் மென்மையாக இருப்பதால், குளித்த பிறகு அவற்றை வெட்டலாம். கிளிப்பிங் செய்யும் போது உங்கள் குழந்தை விழித்திருந்தால், உங்கள் துணையின் உதவியை நாடுங்கள்
கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொன்று சரியான வெளிச்சம். மங்கலான வெளிச்சத்தில் நாம் விரல்களை பிடித்து வெட்ட முயற்சி செய்தால் சதையில் வெட்டுப்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. அதனால் இந்த செயலை வெளிச்சத்தில் செய்யுங்கள்
சிறிய விரல்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கையளவு மற்றும் சிறிய நெயில் கட்டரை எப்போதும் பயன்படுத்தவும். உங்களுக்கு கையில் பிடித்து வெட்டுவதற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுங்கள். சிலவற்றை பார்க்கும் போது கார்டூன் படம், டிசைன் என வண்ணமயமாக இருக்கும். ஆனால் வெட்டுவதற்கு வசதியாக இருக்காது. வாங்கும் போது இந்த விஷயங்களை ஞாபகத்தில் வைத்து வாங்குங்கள்.
உங்கள் குழந்தையை உங்கள் மடியில் வைத்து, கையை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். குழந்தை விழித்திருந்தால், அவள் கையை விலக்காதபடி இசை அல்லது பொம்மை மூலம் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கவும்
ஆரம்ப நாட்களில், நகங்கள் மிகவும் உடையக் கூடியவையாக இருப்பதால், கைகள் அல்லது கத்தரிக்கோலால் எளிதாக கிழித்துவிடலாம். அதே நேரத்தில், உங்கள் கைகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். நகங்களை வெட்டுவதற்கு, தோலுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க, வளைவில் விரல் அட்டையைப் பயன்படுத்தவும்.
நகங்கள் குட்டையாக இருக்கும் போது அதன் கூர்மையை மங்கச் செய்ய வேண்டும் என்றால், மென்மையான ஃபில்லரை பயன்படுத்தி அவற்றை மங்க செய்யுங்கள். உலோக போன்ற கடினமானதை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் அவை தோலை காயப்படுத்தலாம்.
கால்விரல்களில் உள்ள நகங்கள் கைகளில் இருப்பதை விடமெதுவாக வளரும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அவற்றை வெட்ட வேண்டும். கை நகத்தை வெட்டும் போது காலையும் பாருங்கள். தேவைப்பட்டால் ட்ரிம் செய்யுங்கள்
நகங்களைப் பராமரிப்பது எளிய பணி தான், ஆனால் குழந்தைக்கு மிகவும் கடினமானதாக தெரிகிறது. ஆயினும்கூட, அதிக கவனிப்புடன் செய்தால் இது எளிதாக மாறும். நீங்கள் முதல் முறையாக செய்யும்போது பதற்றமடைய வேண்டாம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், யாரும் மாஸ்டர் அல்ல. எனவே கற்றல், அனுபவம் இரண்டும் நம்மை பக்குவமாக்கும்.
Be the first to support
Be the first to share
Comment (0)