கர்ப்ப கால வாந்தியை தடுக் ...
கர்ப்ப காலத்தில் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் வருவது இயற்கையானது. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் இதை எதிர்கொள்வதில் வித்தியாசம் இருக்கின்றது. இதில் வேலைக்கு போகிறவர்களுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் வெவ்வேறு விதமான மனநிலை இருக்கும். சிலருக்கு 3 அல்லது 4 மாதம் வரை இருக்கும், சிலருக்கு கர்ப்ப காலம் முழுவதும் இந்த மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்களை தாய்மை உணர்வோடு ஏற்றுக் கொள்வதற்கு சில புரிதல் தேவைப்படுகிறது.
பெரும்பாலும் முதல் கர்ப்பமாகும் போது எனக்கும் மட்டும் ஏன் இப்படி வாந்தி வருகிறது என்று யோசிப்பதும் உண்டு. தொடர்ந்து உடல் சோர்வாக இருப்பதை அவ்வளவு எளிதில் நம்முடைய மனம் ஏற்றுக் கொள்வதில்லை. கூடவே பிடித்த உணவே இப்போது வெறுப்போடு பார்க்க தோன்றும். சாப்பிட பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாது. இது ஒருவித மகிழ்ச்சி கலந்த சோர்வும், அவதியும் கொண்டிருக்கு ஒரு உணர்வு.
நான் இப்போது நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளேன். ஒன்றரை மாதம் முழுவதும் கடுமையான வாந்தி இருந்தது. இதை நான் சில வீட்டு வைத்தியம் மற்றும் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்கொண்டேன். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இதையெல்லாம் தாண்டி இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான மனநிலை நமக்கும் நம் கருவில் வளரும் குழந்தைக்கும் அவசியமாகிறது அதற்காக எந்த அளவும் முயற்சியும், மாற்றமும் நாம் எடுக்க தயாராக இருந்தால் இதை எளிதாக எதிர்கொள்ளலாம்.
கர்ப்பத்தில் வாந்தியைத் தடுப்பதற்கான உதவிக்குறிப்புகள் இங்கே. இதை படிக்கவும்
முக்கியமாக பயப்படாதீர்கள். வாந்தி, மயக்கம், சோர்வு இதல்லாம் கர்ப்ப காலத்தில் வருவது இயற்கை மற்றும் ஆரோக்கியமும் கூட. ஆனால் ஒரு நாளைக்கு பத்து தடவைக்கு மேல் வாந்தி வருகிறது அல்லது வாந்தி எடுத்தவுடன் அடி வயிற்றில் கடுமையான வலி தொடர்ந்து இருப்பது, வாந்தியில் இரத்தம் வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். நீங்களாக எந்த மருந்து மாத்திரையும் மருத்துவர் அறிவுரை இல்லாமல் எடுக்காதீர்கள். மருத்துவரிடம் கேட்டால் வாந்தியை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். ஆனால் அதையும் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் வாந்தியை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம் தேர்வு செய்யலாம்.
உங்கள் கர்ப்ப நேர வாந்தியைக் கட்டுப்படுத்த சில எளிய வீட்டு வைத்தியங்கள் இங்கே. இதை படிக்கவும்
மேற்சொன்ன வழிகளை பின்பற்றி பாருங்கள். நீங்களும் வாந்தியை தைரியமாக எதிர்கொள்வதோடு உங்களுடைய கர்ப்ப காலம் முழுவதும் இனிமையாக அமையும்.
Be the first to support
Be the first to share
Comment (0)