6 மாத குழந்தைகளுக்கான வீட ...
இன்றைய தாய்மார்களுக்கு மிகவும் சவாலான விஷயம் குழந்தைகளுக்கு சாப்பாடு தயாரித்து கொடுப்பது. அதுவும் 6 மாதம் முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம், எந்த உணவு ஜீரணம் ஆகும், எந்த உணவு பாதுகாப்பானது என்ற குழப்பம் நம்மிடம் நிறைய உள்ளது.
குழந்தைகளுக்கு 0-6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவு. ஆறு மாதத்திற்கு பிறகு திட உணவு கொடுக்க தொடங்கலாம். குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் பொழுது நிமிர்த்தி உட்கார வைத்து கொடுக்க வேண்டும். படுக்க வைத்தோ, சரித்து வைத்தோ கொடுக்கக் கூடாது.
முதலில் காய்கறிகள், அரிசி, பருப்பு வகைகள் கடைசியாக பழங்கள் இந்த முறையில் கொடுக்கலாம். ஜூஸ் வகைகள் நிறைய கொடுக்க வேண்டாம். அதனால் தாய்ப்பால் குடிப்பதின் அளவு கம்மியாகிவிடும். குழந்தைகள் சாப்பாட்டில் வெள்ளை சர்க்கரை, கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, வெல்லம், தேன் என எந்த ஒரு இனிப்பு வகைகளை அதிகம் சேர்க்கக் கூடாது. ஆரம்பத்திலேயே அப்படி சேர்த்து பழகிவிட்டால் வேற எந்த சுவையையும் விரும்ப மாட்டார்கள்.
வெள்ளை சர்க்கரை, உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். உப்பு மட்டும் ஒருசிட்டிகை அளவு உபயோகிக்கலாம். மார்க்கெட்டில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்டஉணவு வாங்கி கொடுப்பதை தவிர்க்கவும். ஆறு மாதத்திலிருந்து சாப்பாட்டிற்கு பிறகு தண்ணீர், சீரக தண்ணீர் என கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம்.
இந்த மாதத்தில் தான் குழந்தைகளுக்கு முதலில் உணவை அறிமுகப்படுத்துகிறோம்.அதனால் அம்மாக்களுக்கு இந்த உணவு செரிமானமாகுமா, இதைஒ சாப்பிடுவார்களா, குழந்தைக்கு தேவையான சத்து கிடைக்குமா போன்ற நிறைய சந்தேங்கள் வரும். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதனால் ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டும் உணவை கொடுங்கள். மீதி நேரத்தில் தாய்ப்பால் அல்லது எந்த பால் கொடுக்கிறீர்களோ அதை கொடுங்கள். 6-12 மாத குழந்தைகளுக்கு வீட்டில் உணவு செய்து கொடுப்பதே சிறந்தது.
முதல் நாள் இரவே ராகியை ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலை அந்த ராகியை மிக்ஸியில் நான்றாக அரைத்து. ஒரு வெள்ளை துணியில் வடிகட்டிப் ராகிப்பாலை எடுங்கள். அந்த ராகி பாலை இரண்டு நிமிடம் கட்டி தட்டாமல் கொதிக்க விடுங்கள். பிறகு அதில் வெல்லமோ அல்லது கருப்பட்டி பாகோ அல்லது சிறிது உப்பு மற்றும் ஜீரக பொடி கலந்து கொடுக்கலாம். ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொரு விதமாக கொடுத்தால் பிடிக்கும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம் போன்றவற்றை நன்கு மசித்து ஊட்டலாம். பழங்களில் சர்க்கரை கலக்காதீர்கள். காய்கறிகளையும் அப்படியே வேக வைத்து மசித்துக் கொடுக்கலாம்.
சிகப்பரிசி, ராகி, சம்பாகோதுமை, ஜவ்வரிசி, சிறுதானியம் ஆகியவற்றில் கஞ்சி செய்து கொடுக்கலாம். கஞ்சி வகைகளை வறுத்து பொடி செய்து காய்ச்சிக் கொடுக்கவும்..
இந்த மாதத்தில் குழந்தைகள் வாயில் கையை வைத்துக் கடிப்பார்கள் இதனால் அவர்களுக்கு மென்று சாப்பிடும் உணவாக தோசை, இட்லி உணவாக கொடுக்கலாம். இதுபோக சில உணவு குறிப்புகள்.
குறிப்பு: இவை அனைத்து உணவுகளும் மசித்து கொடுக்க வேண்டும் அப்பொதுழுதான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அரிசி பவுடர் 3 டீஸ்பூன், வெல்லம் தண்ணீர் தேவைக்கேற்ப, நெய் தேவைக்கேற்ப. ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் இந்த பொருட்களை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இறுதியில் நெய் சேருங்கள். அரிசி மாவு நன்கு வெந்திருக்க வேண்டும். ஆற வைத்து பிறகு மிதமாக சூட்டில் குழந்தைக்கு கொடுங்கள்.
குழந்தைகளுக்கு முதன் முதலில் உணவு கொடுக்கையில் சில வகைகள் ஒத்துக்கொள்ளாது பேதி, மலச்சிக்கல் என ஏற்படலாம். அதற்காக அந்த உணவை நாம் தவிர்க்க கூடாது. ஒரு வாரம் கழித்து திரும்ப கொடுத்துப் பழக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு எல்லா உணவும் உடம்பில் சேரும்.
Be the first to support
Be the first to share
Comment (0)