1. காற்று மாசிலிருந்து குழந் ...

காற்று மாசிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?

All age groups

Bharathi

3.3M பார்வை

3 years ago

காற்று மாசிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
காற்று மாசு
பருவ கால மாற்றம்

 

காற்று மாசினால் என்னென்ன பாதிப்புகள்? அவற்றிலிருந்து எவ்வாறு தங்கள் குழந்தைகளை பாதுகாக்கலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

More Similar Blogs

    காற்று மாசு என்றால் என்ன?

    Air Quality Index -AQI 50 இருந்தால் நல்ல காற்று,100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது.  AQI அளவு இதையும் தாண்டி 500 வரை எட்டியுள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் 895 AQI, மணலியில் 578 AQI பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 20 மடங்கு அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள்.

    நம் கிரகத்தை சூழ்ந்துள்ள வளி மண்டலம் பல வாயுக் கலவைகளை உடையதாகும். இதில் 79% நைட்ரஜனும் 20% ஆக்சிஜனும், 3% கரியமிலவாயுவும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன. வாயுக்களின் இந்த சமச்சீர்நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எவ்வித பாதிப்பும் அடையாது. தொழில்மயமாதல், நவீனமயமாதல் முதலியவற்றால் வளி மண்டலமானது பாதிப்படைகிறது, இவை காற்று மாசு ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்றன.

    காற்று மாசுபாடு என்பது பல்வேறு திட துகள்கள் மற்றும் வாயுக்களின் கலவையாகும். அவை காற்றில் மாசுபடுத்தும் வடிவத்தில் மனிதர்களால் வெளியிடப்படுகின்றன. இந்த மாசுபாடுகள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேலும் நம் சுற்றுப்புற சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும். காற்று மாசுபாட்டின் அபாயங்கள் உயிர்களுக்கு நோய்களையும் புவி வெப்பநிலை உயர்வையும் ஏற்படுத்தும்.

    குளிர்காலங்களில் குளிர்ந்த, உலர்ந்த காற்று, நிலத்தை அடிப்படையாகக் கொண்டு சுழன்றடிக்கும் குறைந்த காற்று நிலை அதிகமாக காணப்படும். இதனால் காற்று தேங்கி விடுகிறது. காற்று பரவிச் செல்ல சாதகமற்ற சூழல் உருவாகிறது. குளிர்காலங்களில் இந்தியாவின் வடக்கு வடமேற்கு பகுதியில் இருந்து கிழக்கு முகமாக காற்று வீசுகிறது. இதனால் காற்று மாசுபாடும் பனிமூட்டமும் ஏற்படுகிறது.

    WHO -ன் தரவுப்படி உலகளாவிய வெளிப்புற காற்று மாசுபாடு

    1. இறப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படும் நோய்களில் 29 சதவீதத்தை இந்த வெளிப்புற காற்று மாசுபாடு கொண்டுள்ளது.

    2. கடுமையான குறைந்த சுவாச நோய்த்தொற்றின் இறப்பு மற்றும் நோய்களில் 17 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

    3. பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகளில் 24 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

    4. இஸ்கிமிக் இதய நோயால் ஏற்படும் இறப்புகள் மற்றும் நோய்களில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

    5. நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோயால் இறப்புகள் மற்றும் நோய்களில் 43 சதவீதத்தை இந்த வெளிப்புற காற்று மாசுபாடு கொண்டுள்ளது.

    குழந்தைகள் மற்றும் பெரியவர்களில், காற்று மாசுபாட்டின் குறுகிய மற்றும் நீண்ட கால வெளிப்பாடாக நுரையீரல் செயல்பாடு குறைதல், சுவாச நோய்த்தொற்று மற்றும் மோசமான ஆஸ்துமாவுக்கு வழிவகுத்தல் போன்றவையை ஏற்படுத்துகிறது

    தடுக்கும் முறைகள்

    மரங்களின் நன்மைகள்

    அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால் உயிர் வாழ்வுக்கு அடிப்படை தேவையான ஆக்சிஜன் மனிதனுக்கு போதிய அளவு கிடைக்க செய்கிறது. சூரிய ஒளியில் தாவரங்கள் ஒளிச்சேர்கையின் போது கார்பன்டை ஆக்சைடு மூலம் உணவு உற்பத்தி செய்வதுடன் காற்று மாசுபாடு அடைவதையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு எக்டர் பரப்பிலுள்ள மரங்கள் ஓராண்டில் மூன்றுடன் கார்பன்டை ஆக்சைடை உட்கிரகித்து இரண்டுடன் ஆக்சிஜனை வெளியிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் எளிதில் காற்று மாசுபடுவதை தடுக்க முடியும்.

    1.வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வானிலை அறிக்கைகள் மூலம் மாசு அளவை தினமும் சரிபார்த்தல்.

    2. மாசு அளவு அதிகமாக இருக்கும்போது, வெளிப்புற பயிற்சிகள் அல்லது நடைகளைத் தவிர்த்தல்.

    3. நம்மைச் சுற்றி அதிக வாகன போக்குவரத்துப் பகுதிகள் இருக்கலாம், ஒருவர் அந்த பகுதிகளில் உடற்பயிற்சி செய்வதையோ அல்லது நடப்பதையோ தவிர்க்க வேண்டும்.

    4. காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் உங்கள் வீடுகளில் ஆற்றல் மூலங்களை (energy source) பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தலாம். இது காற்று மாசுபாட்டைக் குறைத்து காற்றின் தரத்தை மேம்படுத்தவும் கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

    5. நடைபயிற்சி, மிதிவண்டியை பயன்படுத்துதல், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துதல் அல்லது கார்பூலிங் செய்வது வாகனங்கள் வெளியிடும் வாயுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.

    6. மரம் அல்லது குப்பைகளை எரிக்க வேண்டாம். இது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வெப்பத்தை உருவாக்குகிறது.

    7. வீட்டுக்குள் புகைப்பதை தவிர்க்க வேண்டும்.

    நிகழ்நேர மாசுத் தரவை வழங்கும் எட்டு தொடர்ச்சியான சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களில் (CAAQMS). சென்னையில் மழை பெய்ததால் இந்த அளவு காற்று மாசு ஏற்பட்டு இருக்கின்றது. மழை இல்லாவிட்டால் இதை விட அதிகமாக காற்று மாசு இருந்திருக்கும்.  அந்த வகையில் இந்த வருடம் மழை காற்று மாசுவை குறைத்துள்ளது என்று சொல்லலாம். அந்த அளவில் நாம் கொஞ்சம் திருப்தி அடைந்து கொள்ளலாம்.  இது 'நல்லது' என்று கருதப்படுகிறது.

    மாசு நிறைந்த உலகை

    மாற்றி அமைப்போம்

    சுற்றுசூழல் காப்போம்......

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs