கர்ப்ப காலத்தில் அவசியம் ...
கர்ப்ப காலத்தில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் பல விதமான மாற்றங்களை சந்திக்கின்றனர். இந்த 9 மாதமும் பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான காலகட்டமாக உணரப்படுகிறது. தாய்மையை உணரும் இந்த பொன்னான தருணங்கள் ஒவ்வொரு பெண்ணின் நினைவுகளிலும் நீங்கா அனுபவங்களாக இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் நலன் மற்றும் தாயின் நலனை பற்றி அறிய வேண்டும் என்று விரும்புவோம். அதற்கு சில பரிசோதனைகள் நமக்கு உதவுகின்றது.
கர்ப்ப காலத்தில் சில பரிசோதனைகள் தொடச்சியாக எடுக்க மருத்துவர்கள் வலியுறுத்துவார்கள். அதனால் கர்ப்பிணிகள் இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டிய பரிசோதனைகளுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, என்னென்ன பரிசோதனைகள் அவசியம் எடுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு 3 மாத காலத்தையும் trimester என்று குறிப்பிடுகிறார்கள். இதை முதல், இரண்டாவது, மூன்றாவது trimester ஆக பிரிக்கிறார்கள். ஒவ்வொரு trimester யிலும் என்னென்ன பரிசோதனைகள் அவசியம் என்பதை பார்க்கலாம்.
இந்த முதலாம் ட்ரைமாஸ்டர் சோதனைகள் மூலம் ஆரம்பத்திலேயே நோய்களை கண்டறியவும் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிறப்பிலேயே குறைபாடு ஏதேனும் இருக்கிறதா என்பதையும் கண்டறிய துணை புரிகிறது.
ரத்த பரிசோதனை - ஊசி மூலம் கை நரம்பில் இருந்து எடுக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது, இந்த சோதனை மூலம் கருவுற்ற தாயிற்கு சின்னம்மை, ரூபெல்லா, ஹெப்படெடிஸ் B, போன்ற நோய்கள் எற்படும் பச்சத்தில் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்றும் ஹீமோக்லோபின் அளவுகோள் என பல முக்கியதுவம் வாய்ந்த விஷயங்கள் இந்த சோதனை மூலம் அறிய முடியும்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் - அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் அடிப்படையில் கர்ப்பத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், பிரசவ தேதியை கணக்கிடுவதற்காகவும் எடுக்கப்படுகிறது.
சிறுநீரக கர்ப்ப பரிசோதனை - சிறுநீர் பரிசோதனையில் சிறுநீர் மாதிரி எடுத்து நோய் தொற்று இருக்கிறதா, கல்லீரலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று பரிசோதிப்பார்கள். மேலும் HCG அளவையும் பரிசோதிப்பார்கள். Human chorionic gonadotropin (hCG) நஞ்சுக்கொடியில் உற்பத்தியாகும் ஒரு ஹார்மோன் ஆகும். மற்றும் சிறுநீரில் உள்ள குளூக்கோஸ் அளவையும் பரிசோதிக்க உதவுகின்றது.
பிளாஸ்மா புரோட்டீன் ஸ்கீரினிங் (PAPP-A) - உடலில் உள்ள குரோமோசோம்கள் 'அளவை உறுதிப்படுத்த இந்த சோதனை உதவுகின்றது. மேலும் இந்த ஸ்கிரீனிங் மூலம் மரபணு கோளாறுகளை எளிதாக தடுக்க முடியும் என்கிறார்கள்.
Nuchal translucency ஸ்கேனிங் - இது ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் ஆகும். இந்த பரிசோதனை மூலம் குரோமோசோம் குறைபாடுகளை கண்டறிய முடியும். மற்றும் டவுன் சிண்ட்ரோம்ஸ் பாதிப்பு உள்ளதா என்பதையும் இந்த சோதனை மூலம் அறியலாம்.
இப்போது நீங்கள் இரண்டாம் ட்ரைமாஸ்டரில் இருக்கிறீர்கள். இந்த ட்ரைமாஸ்டரில் முதல் ட்ரைமாஸ்டர் போல் கவலைப்பட அவசியம் இல்லை, 50% பாதிப்பு தவிர்க்கப்பட்டு விட்டது என்று அர்த்தம், ஏனெனில் முதல் ட்ரைமாஸ்டரில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாவது மூன்று மாதங்களில் சில கர்ப்ப பரிசோதனைகள் இங்கே. இதை சரிபார்
மூன்றாம் ட்ரைமாஸ்டர் பிரசவத்தின் இறுதி நாட்களாகும், கடைசி இரண்டு வாரங்களில் மிக முக்கியமாக எடுக்க வேண்டிய பரிசோதனைகள்
அல்டரா சவுண்ட் ஸ்கேன் - மூன்றாம் ட்ரைமாஸ்டரில் அம்னாட்டிக் திரவம் எவ்வளவு உள்ளது என்று தெரிந்து கொள்ளவும், குழந்தையின் வளர்ச்சி, தலை, நடுப்பகுதி, தொடை எலும்புகளின் அளவுகோளை கணக்கிட உதவுகிறது. மேலும் குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் நிலையை பார்த்து சுகப்பிரசவம் உகந்ததா சிசேரியன் சரியா என்று முடிவெடுக்கவும் இந்த ஸ்கேன் துணை புரிகின்றது.
ஸ்வாப் பரிசோதனை - க்ரூப் B ஸ்ட்ரெப்டோகோக்கஸ் பாக்டீரியா பரிசோதனை என்று இந்த பரிசோதனை மூலம் யோனி மற்றும் மலக்குடலில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளை தடுக்க முடியும்.
நோ ஸ்ட்ரெஸ் பரிசோதனை - இந்த பரிசோதனை டாப்ளர் மூலம் கருவின் இதய துடிப்பையும் இயக்கங்களைவும் அறிந்துகொள்ள முடியும்.
பிரசவத்தின்போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் இந்த அத்தியாவசிய சோதனைகளை எப்போதும் எடுத்து, கர்ப்பத்தை ஆரோக்கியமான மற்றும் நம்பிக்கையான புரிதலுக்கு இட்டுச் செல்லுங்கள். உங்கள் உடலை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வலிமையாகவும் அனுபவிக்கவும்.
Be the first to support
Be the first to share
Comment (0)