உங்கள் குழந்தை பள்ளி செல் ...
உங்கள் பள்ளி செல்ல மறுக்கிறார்களா? பள்ளி சென்று விடும் போது அதிகமாக அழுகிறார்களா? உங்களை வீடு பிரியவே கஷ்டப்படுகிறார்களா? இந்த அனுபவத்தை முதன் முதலில் பள்ளிக்கு சென்று விடும் நிறைய பெற்றோர்கள் சந்திக்கும் விஷயம் இது.
பள்ளிக்கு செல்லும் முதல் நாள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரே மாதிரியான உற்சாகமும் கவலையும் கலந்ததாக இருக்கும். ஒரு புதிய சாகசத்தை மேற்கொள்வது வேடிக்கையாக இருந்தாலும், பல பாலர் குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்றாலும், சிலருக்கு பயமாக இருக்கும். இதை உளவியலில் செபரேஷன் ஆங்சைட்டியாக (Separation Anxiety) என்கிறார்கள்.
பொதுவாக இரண்டு வகைகளில் குழந்தைகளுக்கு மனப் பதற்றம் ஏற்படுகின்றது. ஒன்று குழந்தையிலேயே இருந்து அம்மாவின் அரவணைப்பில் மட்டுமே இருந்து வளர்ந்த குழந்தைகள், பள்ள்க்கு செல்லும் போது அம்மாவை விட்டு பிரிய மனமில்லாமல் அழுவார்கள். இன்னொரு வகை, வீட்டில் பெற்றோர் இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டை காரணமாக ஏற்படும் மனப் பதற்றம் காரணமாக அம்மா, அப்பாவை பிரிய விரும்ப மாட்டார்கள்.
இதுபோன்ற சமயங்களில் வாந்தி எடுத்தல், வயிற்றுப்போக்கு போன்ற சுகவீனமும் குழந்தைகளுக்கு ஏற்படும். நாளடைவில் இந்தப் பிரச்சினைகள் தானாக சரியாகிவிடும். இரண்டு மூன்று மாதங்கள் ஆகியும் இதே போல் அழுது அடம் பிடிக்கிறார்கள் என்றால், Separation Anxiety Disorder ஆக இருக்கலாம், இது சில குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும்.
என் குழந்தைக்கு பிரிவினைக் கவலை இருக்கலாம் என்பதற்கான சில அறிகுறிகள் என்ன?
பொதுவாகக் கண்டறிவது எளிது: டேகேரில் கொண்டு விடும் போது நிறைய அழுகிறார்களா?
பெற்றோர்களிடம் விடைபெறும் போது குழந்தைகள் கவலை அடைவது இயற்கையானது. உண்மையில், பிரிவினை கவலை குழந்தை வளர்ச்சியின் இயல்பான பகுதியாகும். இது முதல் பிறந்தநாளுக்கு முன் தொடங்கி, நான்கு வயது வரை இருக்கலாம், சில சமயங்களில் தொடக்கப் பள்ளியிலும் கூட. நடக்கலாம்.
ஒரு குறுகிய காலத்திற்கு உங்கள் குழந்தையை விட்டு பிரிய வேண்டியிருக்கும், அப்போது நீங்கள் குற்ற உணர்ச்சி ஆக வேண்டியதில்லை. நீங்கள் இல்லாமல் அவர்களின் உணர்வுகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்வதற்கு உங்கள் பிள்ளைக்கு உதவுவதில் கவனம் செலுத்துங்கள்.
என்னென்ன வழிகள் மூலம் உங்கள் குழந்தையை தயார் செய்யலாம்?
பள்ளிக்கு செல்லும் முன் தினசரி காலைப் பழக்கத்தை உருவாக்குங்கள். நிதானமாக அவர்களில் காலை கடமைகளை முடிக்க உதவுங்கள். பள்ளிக்கு செல்லும் போது அவசர அவசரமாக கிளம்ப செய்யாதீர்கள். உங்கள் குழந்தையுடன் நிறைய பேசுங்கள். இப்போ நம்ம பள்ளிக்கு போக போறோம், அங்க அவங்க என்னென்ன விளையாடலாம், நண்பர்களோடு சேர்ந்து ஆக்டிவிட்டீஸ் செய்யலாம் என பாஸிட்டிவ்வாக பேசுங்கள்.
பள்ளியில் சென்று விட்டுவிட்டு விரைவாக குட்பை சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகருங்கள். அனுப்பும் போது முத்தங்கள் கொடுத்து, திரும்பி வருவேன் என்று மறக்காமல் சொல்லுங்கல். குட்-பை சுருக்கமாகவும் இனிமையாகவும் வைத்திருங்கள். நீங்கள் தாமதித்தால், பதட்டம் அதிகரிக்கும்.
உங்கள் குழந்தைக்கு புரியும்படி சொல்லுங்கள். உதாரணமாக, "நான் தூங்குவதற்கு முன் அல்லது லன்சுக்கு முன் வருவேன்" என்று சொல்லுங்கள். அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய நேரத்தை வரையறுக்கவும். நான் 1 மணிக்கு வருவேன் என்று சொல்வதற்கு பதிலாக, தூக்கம், சாப்பாடு நேரம் என்றால் அவர்களுக்கு எளிதாக புரியும்.
உங்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற நீங்கள் செய்ய வேண்டியது, சரியான நேரத்தில் சென்று உங்கள் குழந்தையை அழைக்க வேண்டும். அவர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காதீர்கள், ஏனென்றால், நம்பிக்கை இழந்தால், பதற்றம் கூடும், மறுநாள் பள்ளிக்கு வர விரும்ப மாட்டார்கள்.
நீங்கள் திரும்பி வருவதற்கான வாக்குறுதியை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, நீங்கள் இல்லாமல் இருக்கும் திறனை உங்கள் குழந்தை நம்புவதால், நீங்கள் நம்பிக்கையையும் சுதந்திரத்தையும் அவர்களுக்குள் உருவாக்குகிறீர்கள்.
தயாராகும் பயிற்சிகள்
குறுகிய பிரிவினைகளைப் பயிற்சி செய்வதன் மூலம், அதிக நேரம் பிரிந்து இருக்க தயாராவார்கள்
உங்கள் குழந்தையை நம்பகமான நண்பர் அல்லது உறவினரிடம் சிறிது நேரம் விட்டு செல்ல முயற்சி செய்யுங்கள். இது உங்கள் குழந்தை மெதுவாகப் பிரிந்து இருப்பதைப் பழக்கப்படுத்த அனுமதிக்கும்.
பிரிவினையை எளிதாக்க உதவும் வகையில் மென்மையான பொம்மை அல்லது போர்வையை உங்கள் குழந்தையிடம் கொடுத்து செல்லுங்கள்
உங்கள் குழந்தைக்கு பிடித்த வசதியான பொருள் உள்ளதா? இல்லையென்றால், ஒன்றை அறிமுகப்படுத்துவது நல்லது. ஒரு குழந்தை வருத்தமாக இருக்கும்போது தன்னைத்தானே அமைதிப்படுத்த விரும்பிய பொம்மை உதவும்.
உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்.
Be the first to support
Be the first to share
Comment (0)