1. உங்கள் குழந்தைக்கு பால் ப ...

உங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்லையா? என்ன கொடுக்கலாம்?

1 to 3 years

Kiruthiga Arun

2.7M பார்வை

3 years ago

உங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்லையா? என்ன கொடுக்கலாம்?
உணவுத்திட்டம்
ஊட்டத்துள்ள உணவுகள்

பொதுவாக அம்மாக்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை என் குழந்தை பால் குடிப்பதில்லை என்பதே. இதுவே பல பேர்களின் கவலை. என் பொண்ணோட பள்ளி நண்பர்களின் அம்மாகிட்ட பால் குடிக்கலைனா விட்டு விடுங்கன்னு சொன்னா, அது எப்படி பால் இல்லாம குழந்தை எப்படி ஆரோக்கியமா வளரும்னு கேக்கறாங்க. குழந்தைகளான முழு சத்தும் பாலில் இருந்தா கிடைக்குது? இல்லைன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். இருந்தும் நம்ம குழந்தை பால் குடிக்கலைனா நம்ம கவலை படறோம். பாலில் இருந்து கிடைக்கும் சத்து கால்சியம். அப்போ பால் குடிக்காத குழந்தைகளுக்கு எந்த வழியில் கால்சியம் தரலாம்னு யோசிங்க. உங்க கவலைக்கு முடிவு வந்துவிடும்.  

பால் சில குழந்தைகளுக்கு நேரடியா தந்தா பிடிக்காது. ஏன் லயா என் பொண்ணுக்கும் பால் பிடிக்காது. அவளுக்கு நான்கு வயதாக போகுது. பால் குடிக்கும் பழக்கமே இப்போ வரை கிடையாது. அவளுக்கு ஒன்றரை வயது வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்ததால் என்னவோ பால் குடிக்க பிடிக்காம போய்டுச்சுன்னு நினைக்கிறேன். இந்த சமயத்துல  நான் செய்த சில குறிப்புகளை தான் இப்போ உங்க கூட பகிர்ந்து கொள்ள போகிறேன்

More Similar Blogs

    உங்கள் பிள்ளைக்கு பால் மாற்று

    பாலுக்கு பதில் என்னவெல்லாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதை சரிபார்  

    பிற பால் பொருட்கள்:

    உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பால் மாற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதை சரிபார்...

    • பாலை மத்த வழிகளில் குழந்தைகளுக்கு தாங்க. பழங்கள் கூட சேர்த்து milk shake ஆக தரலாம் .
    • சில குழந்தைகள் பெரியவர்கள் குடிக்கும் டம்ளர் அல்லது கப் இல்லைனா அவங்க நண்பர்கள், உடன் பிறந்தவர்களை பார்த்து குடிக்க ஆசைப்படுவார்கள்.
    • அரிசி கஞ்சி தரும் பொழுது அதுல கொஞ்சமா பால் சேர்த்துக்கலாம்.
    • டார்க் சாக்லேட் பவுடர் பாலுடன் சேர்த்து தரலாம். 
    • பால் சார்ந்த உணவுகள். பன்னீர், சீஸ், மோர், தயிர் இப்படி பல வழிகளில் தரலாம். என் பொண்ணுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்கும். அதனால் வாரத்தில் 4 முறையாவது பன்னீர் சேர்த்துப்பேன்.
    • வளரும் குழந்தைகளுக்கு தினமும் கூட சீஸ் தரலாம். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு திண்பண்டங்களாக சீஸ் போன்ற உணவுகளை தரலாம்.

    பழங்கள் மற்றும் காய்கரிகள்:

    குழந்தை எளிதில் பால் குடிக்கவில்லை என்றால் பால் மட்டும் போதாது. இதையும் கொடுக்கலாம்.

    • ஆரஞ்சு பழ சாறு நிச்சயமா எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். வாரத்தில் 4 முறை தரலாம்.
    • கால்சியம் சத்துள்ள காய்கல், கீரைகளை குழந்தைகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சமைத்து கொடுக்கலாம்.
    • அதே மாதிரி பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கு. பல் வளரத்துக்கு முன்னாடி நிச்சயமா பாதாம் முழுசா தர முடியாது. அதுக்கு பதில் பாதாமை ஊற வெச்சு தோல் உரித்து காஞ்சதும் நல்ல நைசா பொடியா அரைச்சு வச்சிக்கோங்க. இந்த பொடியை சூப் பால் இல்லைனா எந்த உணவோடும் 1 tblsp அளவு சேர்த்து தரலாம்.
    • அத்தி பழம் உடம்புக்கு ரொம்ப நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வாரத்தில் ௩ வாடியாது தின்பண்டங்களாக இதை தரவும்  

    சிறுதானியங்கள்:

    தினை நல்ல தானியங்கள் மற்றும் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் பலவற்றின் களஞ்சியமாகும். இதை உங்கள் குழந்தைக்கு பால் மாற்றாக வழங்குங்கள்.

    • ராகி பால் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு அதன் ருசியும் பிடிக்கும். ராகியை ஊற வைத்து அதை அரைத்து பால் எடுத்து காய்ச்சி அதனுடன் கருப்பட்டியோ, நாட்டு சர்க்கரையோ கலந்து கொடுக்கலாம். பால் குடிக்காத குழந்தைகளுக்கான சிறந்த உணவு இந்த ராகிப்பால்.
    • அதே போல் கோதுமை பாலும் கொடுக்கலாம். ராகிப் போலவே சம்பா கோதுமையை ஊற வைத்து அதில் பால் எடுத்து காய்ச்சி அல்வா போல் அல்லது பாலாக கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

    குழந்தைகள்  பால் குடிக்கலைன்னு இனிமே கவலை படாதீங்க. இந்த மாதிரி செய்து பாருங்க. குழந்தைகளுக்கு தேவை கால்சியம் சத்து தான். அதை குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கொடுத்தால் குழந்தையும் ஹேப்பி.. நமக்கும் திருப்தி… 

     

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)