கர்ப்ப காலத்தின் பின்பற்ற ...
கர்ப காலத்தில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். கரு உண்டான 32ம் நாளிலிருந்து இதயத்துடிப்பை மருத்துவர் கேட்க வேண்டும் . அப்படி இருக்கையில் தான், கரு ஆரோக்கியமாக உருவகம் எடுத்திருப்பது உறுதி ஆகும். ஒரு பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு தீங்கோ துன்பமோ நேராமல் பார்த்து கொள்வது அப்பெண்ணின் கடமை ஆகும். பொதுவாக கர்ப்ப காலத்தில் பிடித்ததை சாப்பிட வேண்டும் என்று தோனும். ஆனால் அவ்வுணவு சிசுவிற்கும், அப்பெண்ணிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.
சராசரியாக ஒரு மனிதரை விட 3௦௦ கலோரிகள் கர்பிணிப்பெண்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. அதற்காக கேக், ஐஸ் கிரீம் போன்ற உணவுகளை சாப்பிட்டு கலோரிகளை ஈடு செய்யக்கூடாது . சத்துள்ள உணவுகளாய் எடுத்துக்கொள்ள வேண்டும் . குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் . மஹாபாரதத்தில் அபிமன்யுவிற்கு கருவறையிலிருந்து செவி கேட்டார் போல், அனைத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் கருவறையிலிருந்தே ஆரம்பம் ஆகிவிடும்.
அப்படி சீரான முறையில் சிசு வளருவதற்கு மேற்கொள்ள வேண்டிய உணவு பழக்கங்கள் உங்களுக்காக இதோ:
இக்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக நிறைய காய்கறிகளும் , பழங்களும் உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் மூல நோய் மிக சாதாரணமான ஒன்றாகும் . இது மலசிக்கலால் ஏற்படும் ஒன்று. இதை தடுக்க கீரை வகைகளும் , வாழைப்பழங்களும் அதிமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதே போல் பழ ரசங்களாக எடுத்துக் கொள்ளாமல் பழங்களாக உட்கொள்ள வேண்டும். பழசாறுகளில் இனிப்பு சேர்த்து சாப்பிடுவதனால் பழத்தின் நற்பலன்கள் கிடைக்காமல் போகின்றன .
பச்சைப்பாலை அருந்தக்கூடாது.
வேகவைக்காத முட்டைகளை எடுத்துக்கொள்ள கூடாது.
உடல் உஷ்ணம், வாயு கிளப்பக்கூடிய உணவு வகைகளை எடுத்துக்கொள்ள கூடாது.
கேபின்(caffeine) என்று கூறப்படும் காபி ,டீ, சாக்லேட் ஆகிய உணவுகளை மிகவும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பமான முதல் மூன்று மாதத்திற்கு சாப்பாட்டில் அதிக பூண்டு, வெல்லம், புளி சேர்த்துக்கொள்ள கூடாது . நான்காவது மாதத்திலிருந்து வாயு பிரச்சனையை தவிர்ப்பதற்கு பூண்டு சேர்த்துக்கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் மது அருந்துதல் கூடாது.
ஒரு குழந்தை பிறக்கும் போது தான் தாயும் பிறக்கிராள். அதுவரை அவள் ஒரு பெண்மணியே என்று கூற்று உண்டு. அப்படிப்பட்ட தாய்மையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுவது அவசியம்.
Be the first to support
Be the first to share
Comment (0)