12- 18 வயது வரையுள்ள குழந ...
பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் இந்த ஜைகோவ்-டி(ZyCoV-D) மருந்தை கண்டுபிடித்திருக்கிறது. இந்த மருந்தை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் (டிஜிசிஐ) அனுமதி கேட்டுள்ளது. இதற்கு அடுத்த மாதத்திற்குள் கோவிட் -19 க்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அரசாங்கம் தொடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜைகோவ்-டி (ZyCoV-D) மருந்து மூன்று டோஸ்களைக் கொண்டுள்ளது.
ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்துக்கு நடுவில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Zydus Cadila ஆண்டுக்கு 120 மில்லியன் டோஸ் வரை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது. தடுப்பூசி தடுப்பாட்டை தடுப்பதற்காக, ஒரு வருடத்தில் 40 மில்லியன் மக்களுக்கு ZyCov-D இன் மூன்று தடுப்பூசிகள் போடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 10 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும், மேலும் டிசம்பர் மாதத்திற்குள் 50 மில்லியன் டோஸை நாட்டிற்கு வழங்குவதாக நம்புகிறது.
ZyCov-D தடுப்பூசி, 1, 2 மற்றும் 3 கட்ட பரிசோதனைகளில் 28,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்தியுள்ளது. இதில் ஆயிரம் பேர் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
டிசம்பர் 2020 இல், பரிசோதனையின் முதல் இரண்டு கட்டங்கள் தடுப்பூசி "பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்புத் திறன் கொண்டது" என்று காட்டியது என்று Zydus குழுமத் தலைவர் கூறினார்.
இதுவரை நடந்த பரிசோதனை தரவுகளின்படி, தடுப்பூசி பெறாதவர்களுடன் ஒப்பிடுகையில், பெற்றவர்களுக்கு கோவிட் -19 இன் அறிகுறி வழக்குகளில் கிட்டத்தட்ட 67 சதவிகிதம் அளவு குறைக்க முடிந்தது. இது 3 கட்ட பரிசோதனைகளில் தடுப்பூசி போடப்பட்ட 79 முதல் 90 ஆர்டி-பிசிஆர் கோவிட் -19 வழக்குகளை கொண்ட தகவல்கள் என்று சைடஸ் காடிலா நிர்வாக இயக்குனர் டாக்டர் ஷர்வில் பட்டேல் கூறினார். பரிசோதனை தரவுகளின்படி, கோவிட் -19 இன் கடுமையான அறிகுறிகளை மக்கள் தடுக்கவும், மரணத்தைத் தடுக்கவும் மூன்று டோஸ்கள் சிறந்ததாகவும் அவர் கூறுகிறார்.
ஏற்கனவே கொரோனாவின் முதல் மட்டும் இரண்டாம அலையின் தாக்கத்தை நாம் சந்தித்துள்ளோம். இந்நிலையில் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு தாக்கம் அதிகம் வர வாய்ப்புள்ளதாக தகவல்களை வருவதால் தடுப்பூசி ஒரு சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளை மூன்றாம் அலையில் இருந்து பாதுகாப்பதில் பெரியவர்களும், தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கிய பங்கு வகிக்கின்றது.
பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகள் மீண்டும் செயல்பட தொடங்குவதற்கும் தடுப்பூசி அவசியமாகின்றது. ஏற்கனவே, குழந்தைகள் பள்ளியும் செல்ல முடியாமல், ஆன்லைன் வகுப்பிலும் முழுமையாக ஈடுபட முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கும் மன அழுத்தம் ஏற்படுகின்றது.
இதே போல் குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளும் மிக மிக சுருங்கியுள்ளது. பள்ளி, வெளிப்புற செயல்பாடுகள், சிந்திக்கும் திறன், உடல்/மன ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்றால் குழந்தைகளின் சூழல் மாற வேண்டும். அதற்கு பெரியவர்களும், குழந்தைகளும் தடுப்பூசி போடுவது மிக அவசியமாகின்றது.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். தடுப்பூசியைப் பற்றி மேலும் கேள்விகள் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும். எங்கள் நிபுணர்கள் மூலம் உங்களுக்கு பதில் அளிக்க உள்ளோம்.
Be the first to support
Be the first to share
Comment (0)