1. குழந்தைகளுக்கு வரும் பொது ...

குழந்தைகளுக்கு வரும் பொதுவான ஒவ்வாமை பிரச்சனைகள்

0 to 1 years

Parentune Support

3.2M பார்வை

4 years ago

குழந்தைகளுக்கு வரும் பொதுவான ஒவ்வாமை பிரச்சனைகள்
தவிர்க்க வேண்டிய உணவுகள்

பிறந்த குழந்தை முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகளின் உடல் அமைப்பு மென்மையானது. அதிக அளவில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டிய, பாதுகாக்க வேண்டிய காலமாகும். மேலும் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலம் முதல் அனைத்து உடல் பாகங்களும் சிறிது சிறிதாக மேம்பட்டு வரும் இவ்வேளைகளில் அதிக கவனிப்பு தேவைப்படுபவர்களாக கைக்குழந்தைகள் இருக்கின்றார்கள்.

இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகும் தலைப்புகள்:

More Similar Blogs

    • ஒவ்வாமை என்றால் என்ன?
    • ஒவ்வாமைக்கும் சளிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
    • ஒவ்வாமை வகைகள்
    • ஒவ்வாமைக்கான மருத்துவம்
    • ஒவ்வாமை தடுப்பு முறைகள்
    • எப்போது மருத்துவரை அணுக வேண்டும்

    ஒவ்வாமை என்றால் என்ன?

    மூக்கில் ஒழுகுதல், தோலில் ஏற்படும் தடுப்புகள், மந்தமான வயிறு போன்றவை ஒவ்வாமையை அடையாளம் காட்டும் அறிகுறிகள் என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் உணர்வதில்லை. அதற்கு மாறாக, ஜலதோஷம், பிறந்த குழந்தைக்கான இயல்பாக வரும் பிரச்சனை என்று கருதிவிடுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இந்த அறிகுறிகள் சளி மற்றும் பிற நோய்களின் விளைவாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் ஒவ்வாமையின் விளைவாகவும் இருக்கலாம்.

    ஒவ்வாமை ஏற்பட காரணம், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் தேவையற்ற அல்லது அதீத செயல்பாட்டினால் உண்டாகும் விளைவாகும். நம் நோய் எதிர்ப்பு மண்டலமானது உடல்நல குறைவை எதிர்த்து போராடுவதற்கான கட்டமைப்பு ஆகும். ஆனால் சில சமயங்களில் தீங்கற்ற பொருள்களை  (எ.கா., மைதா, அஜீரணத்தை உண்டாக்கும் உணவுப்பொருட்கள்) ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியா, வைரஸ் போன்ற பொருள்களாக கருதி எதிர்வினை ஆற்றுவதலினால் அதிகப்படியான உற்பத்தி புரதங்கள் எனப்படும் ஆன்டிபயாட்டிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவையே தோலில் வீக்கம், தடிப்பு மற்றும் மூக்கின் வழியே சளியாக வெளியேறுகிறது. எப்போதெல்லாம் இதே போன்ற பொருள்களால் நோய் எதிர்ப்பு மண்டலம் தூண்டப்படுகிறதோ அப்போதெல்லாம் இவ்வாறான ஒவ்வாமை திரும்ப குழந்தையிடம் ஏற்படும்.

    பரம்பரையாக உண்டாகும் நோய்களில் ஒவ்வாமையும் ஒன்றாகும். ஆனால் குறிப்பிட்ட சில ஒவ்வாமைகள் அவ்வாறானவை அல்ல. எடுத்துக்காட்டாக, பென்சிலின் மருந்துகளால் ஒவ்வாமைக்கு உட்படுபவர் எனும் போதும், உங்கள் குழந்தைக்கு பென்சிலினால் ஒவ்வாமை ஏற்படவில்லை எனும் போதும், உங்கள் குழந்தைக்கு பிற ஒவ்வாமைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

    ஒவ்வாமைக்கும் சளிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

    ஒவ்வாமைக்கும் சளிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை அறிதல் எளிதானது அல்ல. இரண்டுக்குமான அறிகுறிகள் ஒன்றுபோல் இருக்கும். பின்வரும் அறிகுறிகள் மூலம் சளி மற்றும் ஒவ்வாமையை வேறுபடுத்தி அறியலாம்

    • ஒரு வாரத்திற்கும் மேல் மூக்கில் நீர் ஒழுகுதல் சளியாகாது. ஒவ்வாமையின் விளைவாகும்.
    • ‘அனபைலாக்ஸிஸ்’ எனப்படும் தீவிரமான ஒவ்வாமை பாதிக்கப்படும்போது, குழந்தையின் சுவாச பாதையில் ஏற்படும் துரிதமான வீக்கத்தால் சுவாசித்தல், விழுங்குதல் தடைபடலாம். அத்தருணங்களில் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும்.
    • இளஞ்சிவப்பு கண் என்பது ஒவ்வாமை மற்றும் வைரஸ் பாதிப்பு இரண்டுக்குமே ஏற்படக்கூடியது. ஆனால் ஒவ்வாமையினால் ஏற்படும் போது அரிப்பு, கண்ணின் கீழ் பகுதியில் கருவட்டங்களையும் உண்டாக்கும்.
    • வைரஸினால் மட்டுமின்றி ஒவ்வாமையாலும் குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மந்தமான வயிறு போன்றவை காணப்படும்.
    • அசாதாரமான நடத்தைகளும் குழந்தை ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு இருப்பதை அடையாளம் காட்டும். சாப்பிடுவதில், தூங்குவதில் பிரச்சனைகள் அல்லது எரிச்சலடைதல். ஒவ்வாமையால் பாதிக்கப்படுகையில் குழந்தைகள் அசௌகரியமாகவும், எதிலும் ஈடுபாடற்றதாகவும் காணப்படலாம்.

    ஒவ்வாமை வகைகள்

    குழந்தைகளிடையே பொதுவாக காணப்படும் ஒவ்வாமைகள் பற்றி இங்கு காண்போம்

    • சிரங்கு ( எக்ஸிமா - Rash) - இது எரிச்சலூட்டும் துணி வகைகள், சோப்புகள், உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய, பெரும்பாலான குழந்தைகளைப் பாதிக்ககூடிய ஒவ்வாமையாகும்.இதனால் தோலில் சிவப்பு நிற மிகச்சிறிய புடைப்புகள் அல்லது வறண்ட சருமமாகவோ / செதில் செதிலாகவோ காணப்படும்.

    • பேப்புலர் அர்டிகாரியா(Arteria) - அரிக்கக்கூடிய தடுப்புகள் உண்டாக்கும் இவ்வகையான ஒவ்வாமையானது பூச்சிகள், கொசுகள், மூட்டை பூச்சிகள் கடிப்பதனால் ஏற்படக்கூடியது. சிவந்த தடுப்புகளாக சில சமயம் நீர் நிரம்பியும் கூட காணப்படலாம்.

    • படை நோய் (Hives) - உடலானது குறிப்பிட்ட ஓர் பொருளுக்கு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, நமது உடலில் ‘ஹிஸ்டமைன்’ எனப்படும் வேதிப்பொருள் உருவாகும். இதன் விளைவாக உடலில் இளஞ்சிவப்பு / சிவப்பு நிற திட்டுகள் தடித்த சிவப்பு  இரத்த வளையத்தோடு காணப்படும்.

    • உணவு ஒவ்வாமை(Food Allergies) - குழந்தை உண்ணும் உணவினால் மட்டுமின்றி , குழந்தை உண்ணாது தாய்ப்பால் வழங்கும் தாய் உண்ணும் உணவாலும் ஒவ்வாமை ஏற்படலாம். வாந்தி, வயிற்று போக்கு, மலத்தில் இரத்தம், இருமல், அரிப்பு, திட்டுகள் போன்றன உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் ஆகும்.

    ஒவ்வாமைக்கான மருத்துவம்

    மென்மையான சிவப்பு தடுப்புகள் சிறிது மணி நேரத்தில் மறைந்து விடும். அரிப்புடன் அசௌகரியத்தைத் தரக்கூடிய ஒவ்வாமைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட வேண்டும். பொதுவாக பின்வருவன பின்பற்றப்படலாம்.

    • ஒவ்வாமை காரணிகளைத் தவிர்த்தல் (Avoiding Allergic Reactions) - குழந்தையின் தோலிற்கு எரிச்சல் தரக்கூடிய சோப்புகள், சோப் பவுடர்கள், வாசனை திரவ களிம்புகளை தவிர்க்க வேண்டும்.

    • வாசனை அற்ற சுத்தப்படுத்திகளை பயன்படுத்துதல் (Use Odorless Cleanser) - மென்மையான வாசனை அற்ற சோப்பு கொண்டு கடுமையாக தேய்க்காமல் மென்மையாக குழந்தையை குளிப்பாட்ட வேண்டும் மற்றும் அதன் பின் நன்கு உடலை துடைக்க வேண்டும்.

    • ஒரு சதவீத ஹைட்டிரோகாட்டிஸோன் பயன்படுத்துதல் (Use Hydrocortisone Cream) - பொதுவாக குழந்தைகளுக்கு பயன்படுத்த பாதுகாப்பானது என்றாலும் மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசித்தப்பிறகு எக்ஸிமா மற்றும் பிற ஒவ்வாமையினால் ஏற்படும் தோல்தடுப்புகளுக்கு ஹைட்டிரோகாட்டிஸோனைப் பயன்படுத்தலாம்.

    • அரிப்பதை தவிர்க்கும் கை உறைகளைப் பயன்படுத்துதல் (Use Corrosion Resistant & Hand Coverings) - குழந்தைகள், மென்மையான குணமாகக் கூடிய தடிப்புகளை கூட அரிப்பினால் தங்கள் விரல் நகங்களால் சொரிந்து காயம் ஏற்படுவதை தடுக்க கை உறைகளை அணிந்து விடலாம்.

    ஒவ்வாமை தடுப்பு முறைகள்

    உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தை ஒவ்வாமை அல்லது ஒவ்வாமை எதிர்விளைவுகளிலிருந்து தடுக்க சில வழிகள் இங்கே. மேலும் வாசிக்க ...

    • ஒவ்வாமை குறைவான துவைக்கும் பவுடரால், குழந்தையின் துணிகளைத் துவைத்தல்
    • வாசனை அற்ற சோப், ஷாம்பு மற்றும் திரவ களிம்புகளைப் பயன்படுத்துதல்
    • தூசி மற்றும் பூச்சிகளைத் தவிர்க்க, குழந்தையின் படுக்கை மற்றும் படுக்கை துணிகளை சுடு தண்ணீரில் ஒவ்வொரு வாரமும் துவைக்க வேண்டும்
    • வீட்டினை சுத்தமாக வைத்து கொள்ளல்

    எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

    ஒவ்வாமைக்கு வீட்டிலே மருந்துகள் / கை வைத்தியம் செய்து கொள்ளலாம் என்றாலும் பின்வரும் சமயங்களில் மருத்துவரை அணுக வேண்டும்.

    • தடுப்புகள் நாளடைவில் பரவ ஆரம்பிக்கும் போதும், மோசமடையும் போதும்
    • தோலில் தொற்றுகள், கொப்புளங்கள் காணப்படுதல், இரத்தம் வடிதல், நீர் ஒழுகுதல் போன்றவற்றின் போதும்
    • தடுப்புகளுடன் காய்ச்சல், அதிகப்படியான அழுகை, குறைவான உண்ணல், சோம்பல், இருமல் போன்றவையும் உள்ள போதும்
    • மூச்சு திணறல், சுவாசிக்க கஷ்டப்படுதல், உதடு / நாக்கில் வீக்கம் போன்றவை தீவிரமான நிலையை குறிக்கக்கூடியவை. இவ்வேளைகளில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    இந்த ஆலோசனை எங்கள் நிபுணர்களிடமிருந்து பெற்றிருந்தாலும். நீங்கள் கண்டறிந்த எந்தவொரு தீவிர அறிகுறிகளும் இருந்தால், முதலில் மருத்துவரை அணுகவும்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)