குழந்தைகள் விரும்பு உண்ணு ...
இந்தியப் பண்டிகைகளில் ஒன்று இன்னும் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது., நாங்கள் அனைவரும் தீபத் திருவிழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட தயாராக உள்ளோம். தீபாவளி ஷாப்பிங் மும்முரமாக நடந்து வருகிறது.தீபாவளி என்பது விளக்குகள், பட்டாசுகள் மற்றும் லக்ஷ்மி தேவியை வழிபடுவது மட்டுமல்ல, இந்த பண்டிகையில் பல இனிப்புகள், புதிய ஆடைகள் மற்றும் பட்டாசுகள்...இந்த வருடம் வரும் திங்கள் (24.10.2022) அன்று வருகிறது. தீபாவளிக்கு இந்த பதிவு சிறப்பு..
தேவையான பொருட்கள்
செய்முறை
1. முந்திரியை மிக்ஸியில் போட்டு நன்றாக பொடியாகும் வரை அரைக்கவும். இடையில் விரல் விட்டு அவ்வப்போது கிளறி விடவும். அப்போது தான் முந்திரியில் இருந்து எண்ணெய் வெளியாகாது.
2. பின்னர் சர்க்கரை பாகு செய்ய ஒரு கடாயில் சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு செய்ய ஒரு கம்பி பதம் வரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.
3.பின் அதில் அரைத்த முந்திரி சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து நன்றாக கிளறி விடவும்.
4. அதில் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கிளறி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
5.இளஞ்சூடாக இருக்கும் போது கலவையை தட்டில் ஊற்றி தேவையான வடிவத்தில் வெட்டி வைத்து விடவும்.
ஆறிய பின் பரிமாறவும். சுவையான காஜு கத்லி தயார்.
தேவையான பொருட்கள்
செய்முறை
மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.
இப்போது துருவிய வெல்லம் சேர்த்து 6 முதல் 8 நிமிடங்கள் அல்லது வெல்லம் முழுவதுமாக உருகி தேங்காயுடன் நன்றாகக் கலக்கும் வரை கலக்கவும். இந்த கட்டத்தில், 2 முதல் 3 தேக்கரண்டி நெய்யை சேர்த்து கலக்கவும். வெல்லம் குளிர்ச்சியடையும் போது படிகமாக மாறும், மேலும் லட்டு கடினமாக மாறும் என்பதால், அதிகமாக சமைக்க வேண்டாம். கைகளில் நெய் தடவி கொண்டு சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான தேங்காய் லட்டு தயார்
Be the first to support
Be the first to share
Comment (0)