1. Career or baby ? ஏன் தாய் ...

Career or baby ? ஏன் தாய்மார்களுக்கு மட்டும் கடினமான தேர்வுகள்?

All age groups

Radha Shri

2.7M பார்வை

2 years ago

Career or baby ? ஏன் தாய்மார்களுக்கு மட்டும் கடினமான தேர்வுகள்?
தாய்ப்பாலூட்டுதல்
பள்ளி
சமூக மற்றும் உணர்ச்சி

இந்தியாவில், பெண்கள் பிரசவத்திற்கு பிறகு அவர்களின் வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்த முடிவுகளில் ஒன்று, அவர்கள் கர்ப்பத்திற்குப் பிறகும் தங்கள் வேலையை தொடர விரும்புகிறீர்களா இல்லையா?  முதன்முறையாக பெற்றோராகிறவர்களுக்கு, எடுக்கும் முடிவு உறவினர்களுக்கும் சமூகத்திற்கும் பெரிய விஷயமாக இருக்கும். குழந்தைகளைப் பெறுவதும் பெற்றோராக மாறுவதும் ஒரு ஆசீர்வாதம் என்பதை நாங்கள் அறிவோம், அது மனைவி மற்றும் கணவன் இருவரும் எடுக்கும் கூட்டு முடிவு. அதேபோல, குழந்தை பிறந்தவுடன், அவனது பொறுப்புகள் பெற்றோர் இருவருக்கும் சமமாகப் பிரிக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் நடிகை நஸ்ரியா ஃபகத் ஒரு பேட்டியில், குழந்தை பிறந்த பிறகு ப்ரேக் எடுத்துக் கொண்டாலோ அல்லது சொந்த காரணங்களுக்காக ப்ரேக் எடுத்தாலோ, குழந்தை பிறந்து விட்டது கரியருக்கு மீண்டும் வருவாரா? இல்லையா? ஏன் மீண்டும் கரியருக்கு வரும் போது நிறைய கேள்விகள் பெண்ணிடம் கேட்கப்படுகிறது. ஆனால் ஆண்களிடம் இந்த கேள்விகள் எதுவும் கேட்கப்படுவதில்லை. குழந்தை வளர்ப்பு என்பது இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒன்று. அதே போல் ஒரு ஆண் அப்பாவானவுடன் கரியர் தொடர்பான கேள்விகள் வருவதில்லை, பெண் மட்டும் ஏன் கரியரா குழந்தையா என்று குழப்பிக் கொள்ள வேண்டும். மீண்டும் கரியரை தொடங்குவதற்கான எல்லா சுதந்திரமும் பெண்ணுக்கும் உண்டு.

More Similar Blogs

    சரி, இது இவருக்கு மட்டுமில்லை, இன்றும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பத்திற்குப் பிறகு வேலை செய்ய வேண்டாம் என்று கேட்கப்படுகிறார்கள். இப்போது எழக்கூடிய உண்மையான கேள்வி இது தான்

    பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் மட்டும் ஏன் கரியரைத் தியாகம் செய்ய வேண்டும்?

    பணிபுரியும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் கர்ப்பத்திற்குப் பிறகு தங்கள் அன்றாட வேலையை மீண்டும் தொடங்குவது குறித்த தங்கள் கவலைகளையும் அச்சங்களையும் வெளிப்படுத்துகிறார்கள். டைனிக் பாஸ்கரில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பெங்களூரில் வசிக்கும் ரிச்சா மிஸ்ரா ஐடி துறையில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். மகப்பேறு விடுப்புக்குப் பிறகு அவள் பணியை தொடர்ந்தவுடன், அவளது முடிவுக்காக அவளிடம் கேள்வி எழுப்பப்பட்டது. சில மேலாளர்கள் அவளால் வேலையில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கூட சொன்னார்கள். இதனால் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார். அவள் நேர்காணலுக்கு செல்லும் போதெல்லாம், மகப்பேறு விடுப்புக்குப் பிறகு அவள் எவ்வாறு தகுதியுடையவள் என்பதை நிரூபிப்பாள் என்ற உண்மையைப் பற்றி அவளிடம் எப்போதும் கேள்வி எழுப்பப்பட்டது.

    பணிபுரியும் பெண்கள் மீதான மக்களின் பார்வை என்ன?

    அசோகா பல்கலைக்கழகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 30 வயதுடைய பெண்களில் சுமார் 50% பேர் தங்கள் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வேலையை விட்டுவிட்டனர். 73% புதிய தாய்மார்கள் ஏற்கனவே தங்கள் தற்போதைய வேலைகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். மகப்பேறு விடுப்புக்குப் பிறகு 27% பெண்கள் மற்றும் தாய்மார்கள் மட்டுமே தங்கள் அலுவலக வேலையை செய்கிறார்கள். இதில் 16% பெண்கள் உயர் பதவியில் பணிபுரிகின்றனர். உலக வங்கி நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 27% பெண்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள்.

    பணிபுரியும் தாய்மார்கள் கர்ப்பத்திற்குப் பிறகு தங்களை எவ்வாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்?

    வேலை செய்யும் தாய்க்கு, முடிவில்லாத சவால்கள் இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். புதிதாகப் பிறந்த குழந்தையை சரியான முறையில் பராமரிப்பதே முதன்மையான சவால். இருப்பினும், அவர்கள் பின்பற்றக்கூடிய சில குறிப்புகள் உள்ளன மற்றும் வேலைக்கும் அவரது சொந்த வாழ்க்கைக்கும் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்தலாம்.

    அலுவலகத்தில் சேரும் தேதியை கவனமாக தேர்ந்தெடுங்கள்

     முதல் மற்றும் முக்கிய படியாக, உங்கள் வேலையை மீண்டும் தொடங்க விரும்பும் தேதியை கவனமாக முடிவு செய்து தேர்வு செய்யவும். நீங்கள் உங்கள் குழந்தையை விட்டு செல்வதை எண்ணி முதல் சில நாட்களுக்கு உங்களுக்கு கடினமாக இருக்கும், ஏனெனில் 9 மாதங்களுக்குப் பிறகு நிறைய மாறிவிடும். எனவே, உங்கள் குழந்தையை கவனித்துக் கொள்ள யாராவது வீட்டில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தையின் தாத்தா பாட்டிகளை தங்கள் பேரக்குழந்தையை கவனித்துக் கொள்ள சொல்வதே சிறந்த விஷயம்.

    பகல்நேர பராமரிப்பு அலுவலகத்திற்கு அருகிலேயே இருக்க வேண்டும்

     நீங்கள் ஒரு தனிக் குடும்பத்தில் வசித்து வந்தால், உங்கள் அலுவலகத்திற்கு அருகில் ஒரு தினப்பராமரிப்பு மையம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தினப்பராமரிப்பு மையத்தை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள், இதனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் குழந்தைக்கு தேவையான சமயங்களில்  திரும்பி வந்து நேரத்திற்கு அவருக்கு உணவளிக்கலாம்.

    அலுவலகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து செல்லுங்கள்

    அலுவலகத்திற்கு உங்களைத் தயார்படுத்துவதற்கான மற்றொரு முக்கியமான உதவிக்குறிப்பு, தினசரி உங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்து செல்வதை உறுதிசெய்வது. மேலும் உங்கள் ஆரோக்கியம் மற்றும் உணவு முறைகளை நீங்கள் சரியாக கவனித்துக்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும்.

    குற்ற உணர்வு வேண்டாம்

    வேலை செய்யும் தாயாக இருப்பவர்களுக்கு சில நாட்கள் குழந்தைக்கு போதுமான கவனம் செலுத்த முடியாமல் போகலாம். எனவே, அதில் நீங்கள் குற்றவாளி அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மாறாக, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குகிறீர்கள் என்பதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    மக்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்காதீர்கள்

    உங்களை சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது, நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான காரணியாகும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதில் நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள். பேசுபவர்கள் அவர்களாகவே ஒரு நாள் நிறுத்திக் கொள்வார்கள்.

    சரி, தாய்மார்களும் பணிபுரியும் பெண்களும் தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி, தங்கள் சக அம்மாக்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை திறந்துவிட்ட ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகளால் இந்த உலகம் நிரம்பியுள்ளது. இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி, திரௌபதி முர்மு முதல், நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வரை, ஐ பி எஸ் அம்பிகாவதி, கூடைப்பந்து விளையாட்டு வீரங்கணை அனிதா பால்துரை,  குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் போன்றவர்கள், சமூகத்தை நேர்மறையான திசையில் வழிநடத்துவதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்.

    எனவே, உங்கள் நம்பிக்கை வீழ்ச்சியடையவோ அல்லது கனவுகள் வீழ்ச்சியடையவோ அனுமதிக்காதீர்கள். தொழில் அல்லது குழந்தை பற்றிய உங்கள் முடிவு சார்ந்து யாராவது கேள்வி எழுப்பினால், இந்த கேள்விக்கு ஒரு தாய் மட்டும் ஏன் பதிலளிக்க வேண்டும் என்று அவர்களிடம் திருப்பிக் கேளுங்கள்.

    உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs