1. மாதவிடாய் தள்ளிப்போனால் க ...

மாதவிடாய் தள்ளிப்போனால் கர்ப்பமாக இருக்குமா? எவ்வாறு உறுதி செய்வது?

Pregnancy

Bharathi

2.2M பார்வை

2 years ago

மாதவிடாய் தள்ளிப்போனால் கர்ப்பமாக இருக்குமா? எவ்வாறு உறுதி செய்வது?
நோய் மேலாண்மை மற்றும் சுய பாதுகாப்பு
ஹார்மோன் மாற்றங்கள்
வாரா வாரம் கர்ப்பத்தின் நிலை

பெண்களுக்கு மாதவிடாய் தாமதமாக வந்தால் அல்லது நாள் தள்ளி போனால் கர்ப்பமாக இருப்பது‌ உறுதி. ஆனால் இன்றைய காலத்தில் மாதவிடாய் தாமதமாக வருவது மட்டுமே கர்ப்பம் என்று சொல்ல முடியாது. வேறு சில அறிகுறிகளை வைத்தே கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மாதவிடாய் சுழற்சி

More Similar Blogs

      முதலில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தவறாமல் வருகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் 28 நாட்களில் வருவது வழக்கம். ஆனால் சில பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் வருகிறது இன்றைய காலத்தில். 30- 35 நாட்களில் வருவது இயல்பு தான். அதையும் தாண்டி போவது தான் பிரச்சினை. மாதவிடாய் சுழற்சி நாள்களில் மாற்றம் இல்லை என்றால் மாதவிடாய்க்கு பின்பு 14 முதல் 17 நாட்கள் வரை சினை முட்டை வெளியாகும் நாள். இந்நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    கர்ப்பத்தை எவ்வாறு உறுதி செய்து கொள்ளலாம்?

    மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் சரியாக இருக்கும் எனில் நீங்கள் 30-32 நாட்களில் கடைகளில் விற்கும் பிரெக்னன்ஸி கிட் உபயோகம் செய்து தெரிந்து கொள்ளலாம். சில கர்ப்ப பரிசோதனை கருவி, கர்ப்பத்தின் போது உற்பத்தியாகும் HCG ஹார்மோன்களை பீரியட்ஸ் தேதி வருவதற்கு முன்னதாகவே கண்டுபிடித்துவிடும். ஏனெனில் மாதவிடாய் ஏற்பட வேண்டிய நாளுக்கு முன்னரே இத்தகைய ஹார்மோன்கள் உங்களது உடலில் உற்பத்தியாகிவிடும். ஆனால் பீரியட்ஸ் தேதி தள்ளிபோவதற்கு முன்னதாக நீங்கள் பரிசோதனை செய்யக்கூடாது. உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்றதாக இருக்கும் பட்சத்தில், துல்லியமான முடிவுகளை பெற நீங்கள் சோதனை எடுப்பதற்கு முன் 35 முதல் 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.45 நாட்களுக்கு மேல் மருத்துவரிடம் சென்று சிறுநீர் பரிசோதனை அல்லது இரத்த பரிசோதனைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    எந்த நேரத்தில் பிரெகனன்ஸி கிட் உபயோகம் செய்ய வேண்டும்?

     கர்ப்ப சோதனை செய்ய எப்படி ஒரு காலம் வரையறுக்கப்படுகிறதோ, அதேபோல துல்லியமான முடிவுகளை தெரிந்துகொள்ள சரியான நேரமும் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காலையில் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் துல்லியமான முடிவை அளிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஏனென்றால், காலையில் சிறுநீர் அதிகமாக வெளியேறும் என்பதால், அதில் HCG ஹார்மோன் செறிவு அதிகமாக இருக்கும். இதன் பொருள் நீங்கள் கர்ப்பமாக இருந்தால் சாதகமான முடிவை தருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

    சோதனைக்காக உங்கள் சிறுநீரை சேகரிக்க பல்வேறு வழிகள் உள்ளன. நீங்கள் தேர்வு செய்யும் சோதனையைப் பொறுத்து, நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்:

    • உங்கள் சிறுநீரை ஒரு கோப்பையில் சேகரித்து, ஒரு சோதனைக் குச்சியை திரவத்தில் நனைக்கவும்
    • உங்கள் சிறுநீரை ஒரு கோப்பையில் சேகரித்து, ஒரு சிறிய அளவு திரவத்தை ஒரு சிறப்பு கொள்கலனில் நகர்த்துவதற்கு ஐட்ராப்பர் பயன்படுத்தவும்
    • சோதனைக் குச்சியை நீங்கள் எதிர்பார்க்கும் சிறுநீர் ஓட்டத்தின் பகுதியில் வைக்கவும், அது உங்கள் சிறுநீரை நடுவில் பிடிக்கும்.

    பரிந்துரைக்கப்பட்ட காத்திருப்பு நேரம் கடந்த பிறகு, சோதனைகள் உங்கள் முடிவுகளை பின்வரும் வழிகளில் ஒன்றில் காண்பிக்கும்:

    • நிறத்தில் மாற்றம்
    • ஒரு வரி
    • கூட்டல் அல்லது கழித்தல் போன்ற ஒரு சின்னம்
    • "கர்ப்பிணி" அல்லது "கர்ப்பமாக இல்லை" என்ற வார்த்தைகள்.

    ஆரம்ப அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:

    • மாதவிடாய் சுழற்சி மாற்றம்
    • மார்பக மாற்றங்கள்
    • லேசான இரத்தப்போக்கு
    • பிடிப்புகள்
    • குமட்டல் மற்றும் வாந்தி
    • சோர்வு
    • தலைவலி
    • உணவு வெறுப்பு அல்லது பசி
    • குளியலறை பழக்கங்களில் மாற்றங்கள்
    • மனநிலை மாற்றங்கள்

    இவை எல்லாம் வீட்டில் இருந்து பார்த்தாலும் மருத்துவர்கள் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்

     

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)