பள்ளி திறந்தாச்சு. குழந்தைகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். குறிப்பாக, இந்த மாதிரி தொற்று காலத்துல அவங்களோட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சேர்த்துக்க வேண்டியது அவசியம். நாள் முழுவதும் அவங்களுக்கு ஆற்றல், பலம் தேவைப்படும். அதே நேரத்துல மந்தத் தன்மை இல்லாமலும் இருந்தா சிறப்பாக செயல்பட உதவியா இருக்கும்.
காலையில் சீக்கிரம் எழுந்து பள்ளிக்கு கிளம்பி போறதே மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் பெற்றோராகிய நாம் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சத்தான சுவையான உணவு வகைகள் சிலவற்றை இங்கு கூற உள்ளேன்.
உளுந்து பருப்பு சாதம் மற்றும் எள்ளு துவையல்
இது செய்வதற்கும் எளிது.. சத்தான உணவு கூட.. உளுந்து பருப்பில் மிகுந்த சத்துக்கள் நிறைந்துள்ளன.. எவ்வாறு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
- உளுந்து பருப்பு - 1 கப்
- அரிசி - 1/2 கப்
- பூண்டு - 7-8
- வெந்தயம் , சீரகம் - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் துருவல் சிறிதளவு
- தண்ணீர். - 4-5 கப்
- ஒரு கடாயை நன்றாக சூடுபடுத்தி அதில் உளுந்து பருப்பு, வெந்தயம்,சீரகம் சேர்த்து லேசாக சூடாக்கி இறக்கவும்.
- குக்கரில் அரிசி மற்றும் சூடாக்கிய பொருட்கள் சேர்த்து அதனுடன் பூண்டு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வந்ததும் இறக்கவும்.
- இறக்கிய உடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
எண்ணெய் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்
- எள்ளு. - 1 கப்
- காய்ந்த மிளகாய் - 4-5
- உ.பருப்பு. - 1/2 தேக்கரண்டியளவு
- காயம் - ஒரு துண்டு
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கடாயை சூடுபடுத்தி எள்ளு நன்கு பொரியும் வரை வறுத்து எடுக்கவும்.
- பின்னர் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உ.பருப்பு, காயம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
- மிக்ஸி ஜாரில் இதை எல்லாம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் எள்ளு துவையல் தயார்.
இதை உளுந்து பருப்பு சாதத்தில் போட்டு எண்ணெய் விட்டு அப்பளம் வைத்து லஞ்ச் பாக்ஸ் இல் கொடுத்து விட்டால் காலியான பாக்ஸ் தான் வீட்டிற்கு வரும்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.ஆனால் உணவில் சேர்த்தால் அதை தனியாக எடுத்து வைத்து விடுவார்கள். அதனால் சாதமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
- வேக வைத்த சாதம். - 1 கப்
- கறிவேப்பிலை. - 1 கப்
- காய்ந்த மிளகாய் - 4-5
- உளுந்தப்பருப்பு. - 1 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு. - 1 டீஸ்பூன்
- புளி. - 1 துண்டு
- உப்பு. - தேவையான அளவு
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு. - 1 ஸ்பூன்
- கடலைப் பருப்பு -1 ஸ்பூன்
- வேர்க்கடலை - 1 ஸ்பூன்
- ஒரு கடாயை சூடுபடுத்தி அதில் எண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை சேர்த்து தனித்தனியாக வறுத்து எடுக்கவும்..
- ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
- அரிசியை உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்
- சாதத்தில் இந்த பொடியை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்னர் கடாயை சூடுபடுத்தி அதில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து வறுத்து அதை சாதத்தில் கலந்து விடவும்.
சுவையான ஆரோக்கியமான கறிவேப்பிலை சாதம் தயார்.
- உதிரியாக வடித்து சாதம். - 1 கப்
- மிளகு. - 1 ஸ்பூன்
- சீரகம். - 1 ஸ்பூன்
- உப்பு. - தேவையான அளவு
- எண்ணெய் - ஒரு ஸ்பூன்
- கடுகு. - 1 டீஸ்பூன்
- உ.பருப்பு. - 1 ஸ்பூன்
- வெங்காயம் - 1 கப்
- கறிவேப்பிலை சிறிது
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்..
- மிக்ஸியில் மிளகு , சீரகம் சேர்த்து நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- உதிரியாக வடித்து சாதத்தில் வதக்கி வைத்துள்ள அனைத்தும் சேர்த்து பின்னர் பொடித்து வைத்த மிளகு சீரகம் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
சுவையான சுலபமான சத்தான சின்ன வெங்காய சாதம் தயார்.
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது.
- தேவையான பொருட்கள்
- உதிரியாக வடித்து சாதம் - 1 கப்
- துருவிய கேரட் - 1 கப்
- துருவிய முடைகோஸ் – 1 கப்
- துருவிய இஞ்சி. - 1 ஸ்பூன்
- நறுக்கிய பச்சை மிளகாய். - 1
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
- கடுகு மற்றும் உளுந்து பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு. - 1 ஸ்பூன்வேர்க்கடலை. - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை சிறிது
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து பின்னர் துருவிய இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் துருவிய கேரட், முட்டைகோஸ் உப்பு சேர்த்து ஒரு மூடி வைத்து வேக வைக்கவும்.
- அதன் பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட்டு அடுப்பை அணைக்கவும்.
- பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின்னர் உதிரியாக வடித்து சாதத்தை அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்..
சுவையான கேரட் – கோஸ் சாதம் தயார். உசியாகவும், கலர்ஃபுல்லாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சாதம் பிடிக்காத குழந்தைகளுக்கான ஹெல்தி லஞ்ச் வகைகள்
1. பருப்பு பராத்தா & வெள்ளிக்காய்/தயிர் ரைத்தா
முழு கோதுமை மாவு, பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் பருப்பு பராத்தா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
2. வெஜ் சேமியா உப்மா & வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
வெஜ் வெர்மிசெல்லி உப்மா - பிரபலமான தென்னிந்திய காலை உணவான சேமியா உப்மா. இது ஒரு விரைவான மற்றும் ஆரோக்கியமான உணவாகும், எளிய பொருட்களுடன் 15-20 நிமிடங்களில் விரைவாக சமைக்க முடியும்.
3. கீரை தோசை & வேர்கடலை சட்னி
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கான பெஸ்ட் லஞ்சு இது.
கீரை தோசை - இது உங்கள் குழந்தைகளை காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிட வைக்க ஆரோக்கியமான, சுவையான மற்றும் எளிய வழி. காயின் தோசை கடி அளவு தோசை மற்றும் உங்கள் குழந்தைகள் சாப்பிடுவதற்கு எளிதானது மற்றும் சத்தானது.
4. முருங்கை கீரை சப்பாத்தி & காளிப்ளவர்-உருளைக்கிழங்கு ப்ரை
இரும்பு சத்து நிறைந்தது. குழந்தைகளுக்கு பிடித்தவாறு சமைத்துக் கொடுப்பதால் அடம் பிடிக்காமல் கீரை சாப்பிடுவார்கள். தொட்டுக்க காளிப்ளவர்-உருளைக்கிழங்கு ருசியான உணவு என்பதால் லஞ்சு பாக்ஸ் காலியாகிவிடுவது நிச்சயம்.
5. பீட்ரூட் பூரி, பன்னீர் கேப்சிகம் ட்ரை & பேரிச்சம் பழம்
பூரியை எப்படி செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பீட்ரூடை வேக வைத்து, நன்றாக மசித்து அல்லது துறுவிய பீட்ரூட்டை கோதுமை மாவு பிசையும் போதே கலந்து பூரி போல் செய்து கொடுக்கலாம். கூடவே பன்னீர் கேப்சிகம் யம்மியாக இருக்கும். ஒரு முழு சத்துள்ள உணவு குழந்தை சாப்பிட்ட திருப்தி நமக்கு கிடைக்கும்.
இந்த வகைகளை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.