செஸ் கிராண்ட் மாஸ்டர் ஹரி ...
44 வது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் விமர்சையாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் பதக்கம் வென்றே தீருவேன் என்று 9 மாத கர்ப்பிணி Grand Master ஹரிகா துரோணவல்லி களம் இறங்கி இருக்கிறார். 31 வயதான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் தன் கனவை வெல்ல பல தடைகளை உடைக்க தயாராக இருக்கிறார். இன்று பல கர்ப்பிணிப் பெண்களுக்கு உத்வேகமாக ஜொலிக்கிறார் ஹரிகா.
ஏற்கனவே கர்ப்ப காலத்திலும் இருக்கும் சவால்களையும் திறமையாக கையாள்வதோடு தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் உறுதியான மனதோடு போட்டியை எதிர்கொள்கிறார் ஹறிகா. இவரது விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் பல இளம் பெண்கள் தங்கள் கனவை வெல்ல சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.
ஹரிகா கடந்த 22 வருடங்களாக செஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை தேசிய அளவில் 16 பட்டங்கள் உட்பட 45 க்கும் அதிகமான பட்டஙக்ளைப் பெற்றவர்.
ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் துரோணவள்ளி ஹரிகா. தனது 6 வயதிலிருந்து செஸ் விளையாடி வருகிறார். சுமார் 22 வருடங்கள் செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பத்து வயதுக்குட்பட்ட சிறுமிகள் பங்கேற்ற போட்டியில் தனது 9வது வயதில், வெள்ளிப்பதக்கம் வென்றார். அனைவரின் கவனத்தையும் பெற்றார். தனது 10வது வயதில் தேசிய அளவிலான செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம்.
இதையடுத்து ஹரிகா தனது 12 வது வயதில் ஆசியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரானார். சர்வதேச தர வரிசையில் 11வது இடத்தில் இருந்து வருகிறார். 2008ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசின் அர்ஜுனா விருது கிடைத்தது. 2011 இல் சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். இந்த பெருமையோடு, இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் வென்ற இரண்டாவது பெண் என்ற பெருமையும் கிடைத்தது.
எனக்கு ஆகஸ்ட் இறுதியில் பிரசவ தேதி கொடுத்திருக்கிறார்கள். நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், நடந்து கொண்டிருக்கும் 44 வது செஸ் ஒலிம்பிட்யாட் போட்டியில் பங்கேற்பதை கைவிடவில்லை. இது என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான மற்றும் உற்சாகமான கட்டம். 22 வருடங்களாக சர்வதேச செஸ் போட்டிகளில் பல வெற்றிகளை கண்ட ஹரிகா இந்த வாய்ப்பை தவறவிட நினைக்கவில்லை. என் உடலையும், செஸ் போட்டிக்கு தயாராவதையும் நான் சிறப்பாக கவனித்துக் கொள்வேன்.
என்னுடைய கணவரும், குடும்பத்தினரும் ஆதரவாக இருக்கிறார்கள் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் பயிற்சியாளர் அபிஜித் குந்தே மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங் சவுஹான் ஆகியோடும் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.
மேலும் நான் நிறைமாத கர்ப்பத்தில் இருப்பதால், என்னுடைய மனநிலையை சமநிலையோடு வைத்திருக்க முயற்சி செய்கிறேன். அதே போல் போட்டியிலும் சிறந்ததை வழங்குவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்
ஹரிகா தான் எப்படி உடல் நலத்தையும், செஸ் பயிற்சியையும் சமமாக கையாள்கிறேன் என்றும், அவரி உத்வேகப்படுத்தியப் பெண்கள் பற்றியும் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டது.
நீங்கள் மனதளவில் தயாராகி வருகிறீர்களா? விளையாட வேண்டாம் என்று நீங்கள் ஒரு முடிவை எடுத்திருக்கலாம், அது எளிதானது அல்ல, இது இந்தியாவில் நடப்பதால், நீங்கள் அதை தவறவிட விரும்பவில்லையா?
இம்முறை ஏற்பாடுகள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இது மனதளவில் மட்டும் அல்ல, உடல் ரீதியாகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் ஒலிம்பியாட் போட்டியில் விளையாடுவது தொடர்பாக, இந்த முடிவை நான் தன்னம்பிக்கையோடு எடுத்தேன். நான் இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒலிம்பியாட் போட்டிகளையும் தவறவிடவில்லை. எனது முதல் ஒலிம்பியாட் 2004 இல் மல்லோர்காவில் நடைபெற்றது. அப்போதிருந்து, நான் ஆன்லைன் ஒலிம்பியாட் உட்பட அனைத்து ஒலிம்பியாட்களிலும் விளையாடினேன்
ஹரிகா, நீங்கள் பல பேரின் இன்ஸ்பிரேஷன். செஸ் மற்றும் வாழ்க்கையிலும் உங்கள் முடிவுகளை பலர் பின்பற்றுகிறார்கள். நீங்கள் இந்த முடிவை எடுப்பதற்கான உத்வேகம் என்ன?
நான் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்ய என்னை ஊக்குவிக்க முயற்சிக்கிறேன். இந்த உந்துதலுக்கு, எனக்கு உத்வேக கதைகள் தேவைப்பட்டன. 8 வார கர்ப்பமாக இருந்தபோது செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய ஓபனை வென்றது எனக்கு மிகவும் உத்வேகம் அளித்த கதைகளில் ஒன்று. ராகேஷ் அங்கிள் என்னிடம் சொன்ன இன்னொரு கதை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் நீச்சல் வீரர். ஒலிம்பிக்கிற்காக ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்து கொண்டிருந்தார், ஒரு நாள் அவள் நீச்சல் குளத்திலிருந்து வெளியேறி, மருத்துவமனைக்கு சென்று, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். எதிர்காலத்தில் இதேபோன்ற ஒன்றை செய்ய விரும்பும் எவருக்கும், இந்தக் கதைகள் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும்.
உங்கள் கர்ப்பத்துடன் உங்கள் ஒலிம்பியாட்டின் பயிற்சி தயாரிப்பை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறீர்கள்?
நான் ஒரு குழு நிகழ்வுக்கு தயாராகும் போதெல்லாம், நான் கொஞ்சம் அழுத்தமாக இருக்கிறேன், ஏனென்றால் நான் தைரியமாக இருக்க வேண்டும் மற்றும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில், நான் அப்படி எந்த அழுத்தத்தையும் எடுக்கவில்லை, நான் விளையாடினால் அதுவே வெற்றி என்பதை நினைவூட்டுகிறேன். நான் இப்போது அமைதியாக இருப்பது முக்கியம், அதனால் "முடிவு இரண்டாம்பட்சம், முதலில் நீ விளையாட வேண்டும்" போன்ற நம்பிக்கை வாக்கியங்களை எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக நீங்கள் இருப்பீர்கள் ஹரிகா? எப்படி உணர்கிறீர்கள்
ஒரு செஸ் வீரராக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து தருவேன் என்று நம்புகிறேன்.
இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் 2004ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 8 ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற சாதனையையும் புரிந்திருக்கிறார் ஹரிகா.
Be the first to support
Be the first to share
Comment (0)